GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY WEEKEND WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD HANUMAN .. MAY HE BLESS YOU WITH GOOD STRENGTH ENERGY & WITH ABUNDANT POWER TO CONQUER EVIL SPIRITS .. " JAI SHREE RAM ! JAI SHREE HANUMAN "

” விரைவாய் விழைவாய் வினைநேர் முடிவாய் 
உறைவார் முடிவே உணரா முதலோன் கரைவார் நிறைவே கருதாதவன்போல் உறைவான் மறையாய் 
ஒருநீதியனே ! கண்டேன் ஒரு சீதையையே கருதேன் இனிய ஸ்ரீராமனையே நான் வென்றேன் ! எனவே விழைந்தனையே நான் கொண்டேன் ! மனமே குலம்வாழ்வதற்கே ! சரமே தொளையோ சகமே மறவா சரீரா அனுமா ஜமதக் கினிநீ ! உரமே உறவே உறவோய் பெரியோய் உயர்வே அருள்வாய் திருமாருதியே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் சனிக்கிழமையாகிய இன்று சக்தியும் .. நல்ல புத்தியும் கொடுக்கும் சமயசஞ்சீவி ராமனின் தூதன் ஸ்ரீஆஞ்சனேயனை நம்பிக்கையோடு துதிப்போம் ! நமக்கென வருவான் ! நல்லருள் புரிவானாக “
ஓம் ஆஞ்சனேயாய வித்மஹே ! 
வாயுபுத்ராய தீமஹி ! 
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத் !!
அன்பு .. அறம் .. அருள் போன்ற முழு வடிவமாகத் திகழும் ஸ்ரீ ஆஞ்சனேயர் வழிபாடு சர்வமங்களங்களையும் அளிக்கக்கூடியது .. ஸ்ரீராம காரியத்தில் சிவபெருமான் ஆஞ்சனேயர் வடிவம் எடுத்ததாகவும் .. சிவபெருமானை விட்டு பிரியாத பார்வதிதேவி அனுமனின் வாலாக உருவெடுத்ததாகவும் புராணங்கள் கூறுகின்றன ..
ஆகவே அனுமனை வணங்குவதால் சிவனையும் .. பார்வதிதேவியையும் சேர்த்து வணங்குவதாகக் கருதப்படுகிறது .. ஸ்ரீ ஆஞ்சனேயரின் வலிமை முழுவதும் வாலில்தான் உள்ளது .. இதற்கு ஒரு வரலாறு உள்ளது .. அனுமனின் வாலின் பெருமையைக் கூறும் கதையினைக் காண்போம் !
பீமர் ஒருமுறை பாரிஜாதம் பூ தேடி காட்டில் அலைந்தபோது மிகவும் களைப்படைந்து விட்டார் .. குறுக்கே குரங்குவால் ஒன்று தென்பட்டது அதை நகர்த்துமாறு குரங்கை கேட்டார் .. படுத்திருப்பது ஆஞ்சனேயர் என்பதை அறியாமல் தனது வேண்டுகோளை வேகமாகச் சொல்லி கோபப்பட்டார் ..
உடனே அனுமார் “ வயதாகிவிட்டதால் என்னால் என் வாலை நகர்த்தமுடியவில்லை .. நீயே அதை எடுத்து ஓரமாக நகர்த்திவிடு “ என்று கூற பீமரும் வாலை அப்புறப்படுத்த பலமுறை முயன்றும் முடியவில்லை .. அப்போது ஆஞ்சனேயர் தான் வாயுபுத்திரன் என்று அறிமுகப்படுத்தி தன் வாலைத் தானே நகர்த்தி பீமன் போவதற்கு வழிகொடுத்து வாழ்த்தினார் ..
தான் எவ்வளவு முயன்றும் முடியாத ஒன்றை இவ்வளவு சுலபமாக செய்துவிட்டாரே என்று ஆச்சரியப்பட்ட பீமன் ஆஞ்சநேயரைப் பார்த்து 
“ உங்கள் வாலின் வலிமையையும் .. மகிமையையும் தெரியாமல் உதாசீனப்படுத்திய என்னை மன்னித்து எனக்கு சர்வசக்திகளையும் .. மங்கலத்தையும் அளித்தீர்களே ! அதேபோல் உங்களது வாலைப் பூஜித்து துதிப்பவர்களுக்கும் சர்வ மங்கலத்தையும் கொடுத்து அருளவேண்டும் “ என்று கேட்டுக்கொண்டார் ..
அப்படியே அனுமாரும் வரம் அளித்தார் .. இந்த கதையினால்தான் ஆஞ்சனேயரது வாலில் பொட்டுவைத்து வழிபடும் முறையும் வழக்கத்திற்கு வந்தது .. 
“ ஜெய்ஸ்ரீராம் ! ஜெய்ஸ்ரீ ஆஞ்சநேயாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..





 Image may contain: 1 person

No comments:

Post a Comment