GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A DIVINE MONTH OF " AADI " .. THE TAMIL MONTH OF AADI IS A DIVINE MONTH MONTH FILLED WITH POWER .. PROTECTION & SPIRITUAL BLESSINGS OF GODDESS MAA SHAKTHI .. STAY BLESSED .. "JAI MAATA DI " ..

” நெஞ்சினிலே நிறைஞ்சிருப்பா ! 
நிம்மதியைத் தந்திடுவா ! 
வஞ்சகரின் வாழ்வறுப்பாள் ! 
வந்தவினை தீர்த்திடுவா ! 
மஞ்சளிலே குளிச்சி நிப்பா ! 
சிங்காரமாச் சிரிச்சு நிப்பா ! 
தஞ்சம் என்று வந்துவிட்டா தயங்காம காத்து நிப்பா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ஆடிச்செவ்வாய் முதல்வாரமும் .. ஆன்மீக மணம் கமழும் ஆடிமாதத்தின் ஆரம்பநாளுமாகிய இன்று அன்னையைத் துதித்து நோய்நொடிகள் நீங்கி நல்லாரோக்கியமும் பெற்றிட பிரார்த்திப்போமாக !
ஓம் பிசாசத்வஜாய வித்மஹே ! 
கட்க ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ மாரீ ப்ரசோதயாத் !!
” ஆடிச்செவ்வாய் தேடிக்குளி “ என்பது ஒரு பழமொழி .. அதாவது விரதமிருந்து எண்ணை தேய்த்து குளித்து அம்பாளை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம்கூடும் என்பது ஐதீகம் ..
இன்றுமுதல் ஆடிமாதம் ஆரம்பமாகின்றது .. தேவர்களின் பகல்பொழுது முடிந்துவிட்டது .. தேவர்களின் இரவுப் பொழுதான தக்ஷிணாயன புண்யகாலம் ஆரம்பிக்கின்றது .. இதனைமுன்னிட்டு பித்ருகாரகனான சூரியபகவான் நேற்றுமாலையே மாத்ருகார்கனான சந்திரனின் வீட்டில் தஞ்சம் அடைந்துவிட்டார் .. இன்னும் ஒருமாதத்திற்கு அங்கிருந்து ஆடிமாதத்தை சிறப்பிக்கப்போகிறார் ..
வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர் .. 
தைமுதல் ஆனிவரை - உத்தராயனம் .. இதுவே தேவர்களின் பகல் காலமாகும் .. 
ஆடிமுதல் மார்கழிவரை - தக்ஷிணாயனம் .. இதுவே தேவர்களின் இரவுக்காலம் .. நம்முடைய ஒருவருடகாலம் என்பது தேவர்களின் ஒருநாள்தான் ..
தக்ஷிணாயன புண்ணிய காலமான ஆடிமாதத்தில்தான் பூமாதேவி அவதரித்ததாகச் சொல்கின்றன புராணங்கள் .. இந்த மாதத்தில் வரும் திதி .. நட்சத்திரம் மற்றும் கிழமைகள் யாவும் மகிமை வாய்ந்தன என்று ஜோதிட சாஸ்திர நூல்கள் பலவும் சிறப்பிக்கின்றன ..
பார்வதிதேவியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மன் மாதமாக இருக்கவேண்டும் என வரம் அருளினார் .. சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடிமாதத்தில் அதிகமாக இருக்கும் .. ஆடிமாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம் ..
மழைக்காலத் துவக்கமான ஆடியில் நல்லமழை வேண்டியும் .. உடல் நலம் பெறவும் நம் முன்னோர்கள் பல பண்டிகைகளைக் கொண்டாடி அம்மனுக்கு வழிபாடு நடத்தி வந்துள்ளனர் .. வேம்பும் .. எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை .. கூழும் விருப்பமானதே ! இவை உடல் நலத்திற்கும் .. வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை .. இவற்றையே இம்மாதத்தில் அம்மனுக்குப் படைத்து பக்தர்களுக்கும் தருகிறார்கள் ..
ஆடிமாதத்தில் இறைபக்தி செலுத்தி எல்லாம் வல்ல அன்னையின் அருட்கடாக்ஷ்த்தைப் பெறுவோமாக ! 
“ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
 Image may contain: 1 person

No comments:

Post a Comment