PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF GODDESS MAA LAKSHMI .. TODAY IS DEDICATED TO SKANDAMATA THE GODDESS DURGA & THE MOTHER OF KARTHIKEYA .. MAY ALL YOUR WISHES BE FULFILLED .. " JAI MATA DI SWAMY SARANAM,,, GURUVE SARANAM "

 மந்திரம் உரைத்தாற்போதும் மலரடி தொழுதால் போதும் மாந்தருக்கருள்வேன் என்று மலர்மகள் நினைத்தால் போதும் ! இந்திரப்பதவி கூடும் இகத்திலும் பரங்கொண்டோடும் இணையறு செல்வம் கோடி இல்லத்தின் நடுவில்சேரும் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
அன்னை மஹாலக்ஷ்மியை நவராத்திரிவிழா நடைபெறும் இந்நாட்களில் போற்றித் துதித்து இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் ஐஸ்வர்யமிக்க நன்னாளாக மிளிர்ந்திட பிரார்த்திப்போமாக !
ஓம் மஹாலக்ஷ்மீ ச வித்மஹே ! 
விஷ்ணுபத்னீ ச தீமஹி ! 
தந்நோ லக்ஷ்மீ ப்ரசோதயாத் !!
இந்தப் பிரபஞ்சத்தின் தாயாக விளங்கும் அன்னையை வழிபடுவதற்குப் பலவழிகள் இருக்கின்றன .. அவளுக்கு மிகமிகப் பிரியமான பெயரால் அன்னையை அழைப்பதுகூட ஒருவழிதான் .. அம்மா .. மா .. ஆயி .. ஆத்தாள் என்னும் பெயர்களே அவை .. அதே பொருள்கொண்ட மந்திரத்தாலும் வழிபடலாம் .. 
“ ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ “ என்னும் மந்திரமாகும் ..
இன்று அன்னை மஹாலக்ஷ்மியை “ சண்டிகையாக “ .. ”கவுமாரிதேவியாக “ வழிபடவேண்டும் .. முருகனின் அம்சமாகவும் மயில்வாகனமும் .. சேவல்கொடியும் உடையவள் .. தேவசேனாதிபதியான முருகனின் வீரத்திற்கு ஆதாரனமானவள் .. ஓங்கார சொரூபமானவள் .. சகல பாவங்களையும் நீக்கிவிடுபவள் .. வீரத்தைத் தருபவள் ..
கவுமாரி .. கவுமாறன் என்றால் - குமரன் .. 
குமரன் என்றால் - முருகக்கடவுள் .. ஈசனாலும் உமையாளாலும் அழிக்க இயலாதவர்களை அழித்தவர்தான் குமரக்கடவுள் ..
அன்னைக்கு சஷ்டி .. தேவசேனா என்ற வேறுபெயர்களும் உண்டு .. மயில் வாகனத்தில் வருபவள் ..அஷ்டதிக்கிற்கும் அதிபதி .. கடலில் வயிறு கிழியுமாறு வேற்படையைச் செலுத்திய சக்தி இவள் அன்னையை வழிபட்டால் குழந்தைச் செல்வம் கிட்டும்.. இளமையைத் தருபவள் .. அன்னையைப் போற்றுவோம் எம்மை வாழ்வாங்கு வைப்பாளாக !
ஓம் சிகி வாஹனாயை வித்மஹே ! 
சக்தி ஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ கௌமாரி ப்ரசோதயாத் !!
” ஓம் சக்தி ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 1 person, indoor

No comments:

Post a Comment