PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMY SRANAM...GURUVE SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY & A HAPPY SARASWATI PUJA & AYUDHA POOJA .. MAY EVERY GOODNESS TOUCH YOUR SOUL & THE BRIGHTEST LIGHT OF KNOWLEDGE ILLUMINATE YOUR LIFE TOO .. " JAI MATA DI "

ஆயிரம் நாமத்தால் அர்ச்சனை செய்தாலும் அன்னை உந்தன் பெருமை சொல்லத் தகுமோ ! 
ஆயுளும் யோகமும் ஐஸ்வர்யம் யாவுமே உன் அன்பினால் கடைக்கண் பொழி அருளே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. வற்றாத அறிவுச்சுடரையும் .. அறிவுப் பெருங்கடலையும் நமக்கு அள்ளித்தரும் சரஸ்வதிபூஜை மற்றும் ஆயுதபூஜை தின நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! தங்களனைவரது வாழ்வும் அன்னையின் அருளால் ஏற்றம் கண்டு .. அறியாமைநீங்கி .. அறிவுவளர்ச்சி மேலோங்கிட அன்னை சரஸ்வதிதேவியைப் பிரார்த்திப்போமாக !
ஓம் வாக்தேவ்யை ச வித்மஹே ! 
விரிஞ்சி பத்ன்யை தீமஹி ! 
தந்நோ வாணி ப்ரசோதயாத் !!
இன்றையநாளில் சரஸ்வதிபூஜை .. ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது .. கல்வி .. கலைகளில் தேர்ச்சி .. ஞானம் .. நினைவாற்றல் போன்றவை வேண்டி கலைமகளை பிரார்த்திக்கும் திருநாளாகும் .. கல்வியும் நாம் செய்யும் தொழிலுமே நம்மை வாழவைக்கும் தெய்வங்கள் என்பதை உணர்ந்து அவற்றையும் கடவுளாக கருதி வழிபடுவதே இதன் ஐதீகம் ..
ஆயுதம் என்பதன் உண்மையான பயனை உணர்த்தத்தான் ஆயுதபூஜை கொண்டாடப்படுகிறது .. உயிர்ப் பொருள்கள் .. உயிரற்ற பொருள்கள் அனைத்திலும் நீக்கமற இறையருள் உறைந்துள்ளது .. வாழ்வில் நம் உயர்வுக்கு உதவும் ஆயுதங்களைப் போற்றும் விதம் .. அவற்றையும் இறைபொருளாகப் பாவித்து வணங்குவதே ஆயுதபூஜை எனவும் சொல்லலாம் ..
இதுவரை தொழில் சிறப்பாக நடந்ததற்கு கடவுளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் .. இனி சிறப்பாக நடப்பதற்கு அருள்வேண்டும் வகையிலும் இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது .. 
“ பாடத்தை படிக்க யாசிக்கும் இத்திருநாளில் .. நல்மனதையும் படிக்க யாசிப்போம் “
நவராத்திரி 9ம் நாளாகிய இன்று அன்னையை “ப்ரஹ்மி” ஆக வழிபடவேண்டும் .. வாக்கிற்கு அதிபதியாவாள் .. ஞான சொரூபமானவள் .. கல்விச்செல்வம் பெற அன்னையின் அருள் அவசியம் 
ப்ரஹ்மி அம்பிகையின் முகத்தில் இருந்து உருவானவள் .. மேற்குதிசையின் அதிபதி .. கல்விக்கு அதிபதியான சரஸ்வதி என்ற கலைவாணியின் அம்சமானவள் .. நான்முகனின் அம்சமாய்த் தோன்றியவள் .. நான்குமுகங்கள் .. நான்கு கரங்கள் .. கமண்டலம் அக்ஷமாலையைப் பின்னிருகரங்களில் ஏந்தி முன்னிருகைகளில் அப்யவரதம் காட்டுவாள் .. ருத்ராக்ஷ்மாலை தரித்து அன்னவாகனத்தில் அமர்ந்திருப்பவள் ..
ஞானம் தந்து அஞ்ஞானம் நீக்குபவள் .. அன்னை ப்ரஹ்மியின் காயத்ரி மந்திரத்தை தினமும் ஜபித்துவந்தால் மாணவர்களுக்கு ஞாபக மறதி நீங்கி .. ஞாபகசக்தி அதிகரிக்கும் ..
ஓம் ப்ரஹ்ம்ஹ சக்தியை வித்மஹே ! 
தேவர்ணாயை தீமஹி ! 
தந்நோ ப்ரஹ்மி ப்ரசோதயாத் !!
“ ஓம் சக்தி ஓம் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment