GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY & THIS DAY IS KNOWN AS " PONGAL OF THE CATTLES " .. IT IS CALLED ' MAATTU PONGAL ' .. IT'S SORT OF THANKS GIVING TO COW WHICH PROVIDES MILK & ORGANIC MANURE OR FERTILIZER & BULL WHICH DRAWS THE PLOUGH .. STAY BLESSED

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் 
தைப்பொங்கல் நாளின் மறுநாளாகிய இன்று உழவுத்தொழிலுக்கு உறுதுணையாக விளங்கும் ஆவினத்திற்கு நன்றி கூறும்நாளே இந்நாளாகும் .. 

“ பொங்கலோ பொங்கல் ! மாட்டுபட்டி பெருக ! 
பால்பானை பொங்க ! நோவும் பிணியும் தெருவோடு போக “ .. என்றுகூறி மாடு உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர் .. 

மேலும் திருவள்ளுவர் தமது திருக்குறளின் மூலம் தமிழின் பெருமையையும் .. தமிழர்களின் பெருமையையும் உலகிற்கு தெளிவாக என்றும் அழியாத வகையில் வெளிப்படுத்தியுள்ளதால் இந்நாளை “ திருவள்ளுவர் தினமாகவும் “ கொண்டாடுகின்றனர் .. 

மற்றும் உடன்பிறந்தாருக்கான “ கணுப்பிடி “ என்றும் “காக்காப்பிடி” என்ற வழக்கமும் இந்நாளில் உண்டு .. இது சகோதரர்களின் நலனுக்காகச் சகோதரிகள் வேண்டிக்கொள்ளும் ஓர் நாளாகும் .. 

“ மஞ்சள் குங்குமத்துடன் நிறைந்த சுமங்கலியாக .. நிர்மலமான மனதுடன் தானும் .. அதேபோலவே வளமான வாழ்க்கையுடன் தங்கள் சகோதர்களும் நீடூழிவாழவேண்டும் என்று பஞ்சபூதங்களிடம் மங்கையர்கள் பிரார்த்தனை செய்துகொள்வார்கள் .. 

இன்றையதினம் முதல்நாள் செய்த சர்க்கரைப் பொங்கலுடன் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறச்சாதம் .. தயிர்சாதம் போன்றவற்றை ஒவ்வொரு கைப்பிடி பிடித்து காகத்திற்கு அர்ப்பணிப்பார்கள் .. இதுவே “கணுப்பிடி” .. “ காக்காப்பிடி “ என்பர் ..

நாமும் முகனூலில் உள்ள நம் அனைத்து உடன்பிறவா அன்புச் ச்கோதரர்களின் நல்லாரோக்கியத்திற்காகவும் நல்வாழ்விற்காகவும் பஞ்சபூதங்களைப் பிரார்த்திப்போமாக ! 
“ மங்களங்கள் பொங்கட்டும் ! வண்ணங்களாய் உங்கள் எண்ணங்களும் மிளிரட்டும் “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் 


No comments:

Post a Comment