SWAMY SARANAM.. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE " THAIPUSAM " TOO .. THE WORD THAIPUSAM IS A COMBINATION OF THE NAME OF THE MONTH - THAI & THE NAME OF THE STAR (NAKSHATRAM) - PUSAM .. THIS PARTICULAR STAR IS AT IT'S HIGHEST POINT DURING THE FESTIVAL IT COMMEMORATES THE OCCASION WHEN GODDESS PARVATI GAVE LORD MURUGA A VEL (SPEAR) SO HE COULD VANQUISH THE EVIL DEMON SOORAPADMAN .. STAY BLESSED .. " OM MURUGA "

” பூசத்தின் நாயகனே ! பூவுலகம் காப்பாயாக ! 
புள்ளிமயில் ஏறிவரும் வடிவழகா ! 
தைமாத ஓரத்திலே தங்கரதம் கண்டவரே ! 
காவடியில் உன்முகம் கண்டோம் கதிர்காமா ! 
செந்தூர்க் கடலினிலும் பரங்குன்றத் தரையினிலும் பழமுதிர்ச்சோலையிலும் பழனிமலை மீதினிலும் 
தணிகைமலைக் காவடியில் தெய்வமகள் உடனுறையும் சுவாமிமலை அருளினிலும் அரங்கேற்ற வந்தவரே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த வந்தனங்களும் .. இனிய “ தைப்பூசத் திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! இந்த தைப்பூசத்திருநாளிலே தாங்கள் தொடங்கும் செயல்கள் யாவும் தொய்வின்றி இனிதே நடந்தேறிடவும் .. நல்லாரோக்கியமும் .. செல்வ வளமும் பெருகிடவும் எல்லாம் வல்ல முருகப்பெருமானைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !!
தமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும் 
27 நட்சத்திரமண்டலங்களில் எட்டாவது நட்சத்திரமாக பூசம் அமைகின்றது .. தைமாதத்தில் வரும் பூசம் நட்சத்திரம் புண்ணியநாளாகவும் .. தைப்பூசவிழாவாகவும் கொண்டாடப்படுகிறது ..
தைப்பூச நன்னாள் சிவசக்தி ஐக்கியத்தையும் மேம்பாட்டையும் விளக்கும் புனிதமான பெருநாளாகும் 
சிவாம்சமான சூரியன் மகரராசியில் இருக்க .. சக்தி அம்சமான சந்திரன் கடகராசியில் (பூசநட்சத்திரம்) ஆட்சிபெற்றிருக்க .. சூரிய சந்திரர்கள் பூமிக்கு இருபுறமும் நேர்கோட்டில் நிற்றல் தைபூசத்துடனிணைந்த பௌர்ணமியில் மட்டுமே நிகழும் ..
தேவர்களுக்கும் .. அசுரர்களுக்கும் இடையே ஏற்பட்ட போரில் தேவர்களால் அசுரர்களை அழிக்கமுடியவில்லை .. எனவே பல்வேறு ஒன்னல்கள் கொடுத்துவந்த அசுரர்களை அழிக்கவேண்டி சிவபெருமானிடம் தேவர்கள் முறையிட .. கருணைக்கடலாம் எம்பெருமான் தேவர்களின் முறையீட்டை ஏற்று தனது தனிப்பட்ட சக்தியால் உருவாக்கிய அவதாரமே கந்தன் !
சிவனின் நெற்றிக்கண்ணில் இருந்து வெளியான 6 தீப்பொறிகள் 6 அழகான குழந்தைகளாயின .. 6 கார்த்திகைப் பெண்களால் அக்குழந்தைகள் வளர்க்கப்பட்டன .. அப்படி அவதரித்தவரே கந்தன் என்னும் முருகன் ..
அன்னை பார்வதிதேவி ஆண்டிக் கோலத்தில் பழனி மலையில் வீற்றிருக்கும் முருகப்பெருமானுக்கு ஞானவேல் வழங்கியது தைப்பூச நாளில்தான் .. அதன் காரணமாகவே பழனிமலையில் தைப்பூசத்திருவிழ மற்ற அனைத்து முருகன் கோவில்களை விடவும் வெகுசிறப்பாகக் கொண்டாடப்படுகிறது ..
சக்தி அளித்த வேல் பிரம்ம வித்யா சொரூபமானது அந்த வேலினைக்கொண்டே முருகன் அசுரகுலத்தை அழித்து தேவர்களைக் காத்தான் .. அந்தவேலினை வழிபட்டால் தீயசக்திகள் நம்மைத் தாக்காமல் இருப்பதுடன் அந்த சக்திகள் நமக்கு நல்லருள் நல்கும் என்பது ஐதீகம் ..
இத்தினத்தில்தான் ஆண்டவன் முதலில் ஜலத்தையே படைத்தார் .. அதிலிருந்து பிரமாண்டம் உருவானது .. இதனை நினைவூட்டத்தான் ஆலயங்களில் இத்தினத்தில் தெப்போற்சவம் நடைபெறுவதுண்டு ..

உலக சிருஷ்டியின் சிருஷ்டிகாத்தாவின் மாபெரும் சக்தியின் உண்மையை உள்ளத்தில் இருத்தி .. அச்சம் இல்லாத நிம்மதியான பெருவாழ்வை எதிர்கொள்ள இத்தைப்பூச நன்னாளிலே சிவசக்தி முருகனின் பேரருளை நாடி வழிபடுவோம் ! 
“ தைப்பூசவிழாகாணும் முருகனுக்கு அரோஹரா “ 
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..


Image may contain: 1 person, standing and outdoor

No comments:

Post a Comment