GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY " RAM NAVAMI " MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY & YOUR HOME LIGHTEN UP WITH THE DIVINE BLESSINGS OF LORD RAMA ON THIS RAM NAVAMI .. "JAI SHREE RAM "SWAMI SRANAM....GURUVE SARANAM



” நாடிய பொருள் கைகூடும் ஞானமும் புகழுமுண்டாம்
வீடியல் வழியதாக்கும் வேரியங் கமலை நோக்கும்
நீடிய அரக்கர்சேனை நீறுபட்டழிய வாகைசூடிய சிலைராமன் தோள்வலி கூறுவார்க்கே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ ஸ்ரீராம நவமி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக ! மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில்
ஸ்ரீராமாவதாரம் பரிபூரண அவதாரமாகும் ..
“ அறமே வாழ்வின் ஆன்மீகஜோதி ! அறத்தை வளர்ப்பதற்கும் .. மனிதனிடம் மறைந்து கிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் “ ..
ஸ்ரீமன் நாராயணனே ஸ்ரீராமனாக அவதாரம் செய்த புண்ணியமிக்க நன்னாளாகும் .. இந்நாளில் எதற்கும் உதவாத காம.. குரோத மோக .. லோப .. மத மாச்சார்யம் எனும் தீயகுணங்களை விட்டொழித்து அனைவரையும் நேசிக்கும் பண்பும் .. துன்பத்தில் கலங்காத மனதிடத்தையும் .. எடுத்தகாரியங்களில் வெற்றியையும் அருட்கடலாகிய ஸ்ரீராமச்சந்திரன் தங்களனைவருக்கும் தந்தருள்வாராக !
ஓம் தசரதாய வித்மஹே !
சீதாவல்லபாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !!
ராமநவமி .. பங்குனி அல்லது சித்திரை மாதம் வளர்பிறை நவமித் திதியில் அமைகிறது .. ஸ்ரீராமபிரானின் ஜனன காலத்தில் ஐந்து கிரகங்கள் உச்சம் பெற்று விளங்கின .. சூரியன் .. குரு .. சனி .. செவ்வாய் .. சுக்கிரன் எனும் ஐந்து கிரகங்களே அவை எனவே ராமஜாதகத்தை பூஜை அறையில் வைத்து பூஜைசெய்பவர்களுக்கு ஜாதகரீதியாக ஏற்படக்கூடிய நவக்கிரக தோஷங்களும் நீங்கும் .. வியாதிகளும் குணமாகும் .. ஐஸ்வர்யங்களும் பெருகும் என்பது நம்பிக்கை ..
நவமியில் பிறந்த நாயகரான ஸ்ரீராமர் உபதேசம் மூலமாக தன் கொள்கைகளை விளக்காமல் .. “ தானே ஓர் உதாரண புருஷராக ” வாழ்ந்து காட்டினார் ..
“ ஓகமாட ஓகபாணமு ! ஓக பத்னி வ்ரதுடே “ என்கிறது தியாகையரின் கீர்த்தனை ..
“ ஒருசொல் ! ஒருவில் ! ஒரு இல் “ இதன்படி வாழ்ந்தவரும் ஸ்ரீராமரே ! என நம் தமிழ் அதை நயம்பட உரைக்கிறது ..
ஸ்ரீராமநவமி அன்று ராமாயணம் படிக்க இயலாவிடின் சுருக்கமாக ஒன்பது வரியில் உள்ள இந்த வரிகளைப் பாராயணம் செய்தால் மன அமைதி .. மகிழ்ச்சி நிலவும்
இதனை தினமும் பாராயணம் செய்தால் ராமாயணம் முழுவதும் படித்த பலனைப் பெறலாம் .. எல்லா காரியங்களிலும் வெற்றிகிட்டும் ..
“ ஸ்ரீராம ரகுகுல திலகம்
சிவதனுசாக் ருஹீத சீதா ஹஸ்தகரம்
அங்குல் யாபரண சோபிதம்
சூடாமணி தர்ஸன கரம்
ஆஞ்சநேயம் ஆஸ்ரயம்
வைதேஹி மனோகரம்
வானர ஸைன்ய ஸேவிதம்
சர்வமங்கல கார்யானுகூலம்
சந்தம் ஸ்ரீராமசந்ரம் பாலயமாம் “
ராமன் நாமத்தை தினமும் சொல்பவர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் பொங்கி பெருகும் ..
ராம நாமமானது அஷ்டாட்சரமான
ஓம் நமோ நாராயணாய என்பதில் உள்ள - “ ரா “ என்ற எழுத்தையும் ..
பஞ்சாட்சரமான நமசிவாய என்ற எழுத்தில் - “ ம “ என்ற எழுத்தையும் சேர்த்து .. “ ராம “ என்றானது ..
பகவானின் ஆயிரம் நாமங்களுக்கு இணையானது ராமநாமம் .. நல்லது அனைத்தின் இருப்பிடமும் .. இக்கலியுகத்தின் தோஷங்களைப் போக்குவதும் .. தூய்மையைக்காட்டிலும் தூய்மையானதும் .. மோட்சமார்க்கத்தில் சாதகர்களின் வழித்துணையாகவும் .. சான்றோர்களின் உயிர்நாடியாகவும் விளங்குவது “ ஸ்ரீராம் “ என்னும் தெய்வீக நாமம் ஆகும் ..
“ நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே
தின்மையும் பாவமும் சிதைந்து தேயுமே
ஜென்மமும் மரணமும் இன்றித் தீருமே
இம்மையே ராம வென்றயிரண்டெழுத்தினால் “
என்னும் பாடல் இரண்டெழுத்து மந்திரமாகிய
“ ராம ” நாமத்தின் மகிமையை விளக்குகிறது ..
ஸ்ரீராமர் புகழை தினமும் ஜபித்தால் ஒருவைரம்போல மனதில் பதித்தால் .. துன்பம் எல்லாம் தொலைவில் ஓடும் .. இன்பம் எல்லாம் விரைவில் கூடும் ..
“ ஜெய்ஸ்ரீராம் “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 4 people, people smiling, people standing

No comments:

Post a Comment