GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A HAPPY & A PROSPEROUS TAMIL NEW YEAR & VISHU .. MAY THE SUN RADIATE ALL THE GOODNESS OF LIFE IN THE COMING YEAR & ALWAYS .. " JAI SURYA DEV "SWAMY SARANAM...GURUVE SARANAM

” மதமும் இனமும் மனதினை ஆளாமல்
மனிதமும் புனிதமும் மலையாய் உயரட்டும் !
இடரும் இன்னலும் இனிமேலும் துளிராமல் 
வளரும் வெண்ணிலவாய் வருங்காலம் பிறக்கட்டும் !
செல்வம் பெருகி வருமை தீர
இல்லாமை என்ற நிலையும் மறைய
நல்வினை புரிந்து நன்மை பெற்றிட
வருவாய் சித்திரை தமிழ் புத்தாண்டே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. அனைத்து தமிழ் அன்புள்ளங்களுக்கு
” இனிய சித்திரைத் தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகளும் அன்பு மலையாள நட்புகளுக்கு
” இனிய “ விஷுக்கனி “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக பிறக்கும் விகாரி வருட சித்திரைத் தமிழ் புத்தாண்டு தங்கள் அனைவரது வாழ்விலும் மகிழ்ச்சியும் .. நோயற்ற வாழ்வும் .. குறைவற்ற செல்வமும் .. நீண்ட ஆயுளும் பெற்று வளமுடன் வாழ எல்லாம் வல்ல சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றோம் !
ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே !
பாஸஹஸ்தாய தீமஹி !
தந்நோ சூர்ய ப்ரசோதயாத் !!
சித்திரை மாதம் முதலாம் நாள் ஞாயிற்றுக்கிழமை
(14.04.2019) ”விகாரி வருடம்” புத்தாண்டாக மலர்கிறது
சூரியன் சித்திரை மாதத்தில் மேஷராசியில் சஞ்சரிப்பதையே “ சித்திரை வருடப் பிறப்பு ” என்கின்றனர் ..
தமிழ் ஆண்டுகள் அறுபது ஆண்டுகளைக் கொண்டச் சுற்றுகளைக்கொண்டது .. பிரபவ - என்னும் பெயருடைய ஆண்டில் தொடங்கி .. அட்சய என்னும் பெயருடைய ஆண்டில் முடியும் .. மீண்டும் பிரபவ ஆண்டுத் தொடங்கி அறுபது ஆண்டுகள் நடக்கும் .. இந்த வரிசையில் 33வது ஆண்டின் பெயரே “விகாரி” ஆகும் .. விகாரி என்றால் - எழில்மாறல் ..
ஆண்டுதோறும் ஆறுபருவங்கள் மாறி மாறி வருகின்றன .. அவற்றுள் வசந்தம் பொங்கும் சிறப்பைக் கொண்டதுதான் சித்திரை மாதம் .. இந்த மாதத்தில் இளவேனிற்காலம் இன்பமுடன் எழுகிறது
“ வந்தது வசந்தம் “ என்று அனைவரும் மங்களம் பொங்க குதூகலிக்கும் பொன்னான நாள் சித்திரைத் திங்களின் முதல் நாள் ..
சித்திரை மாதத்தை “ சைத்ர விஷு “ என்றும் கூறுவர் சித்திரை வருஷப்பிறப்பு தினத்தை கேரளமக்கள்
” விஷுக்கனி காணல் “ என்று கொண்டாடுகின்றனர் .. அன்றையதினம் வீட்டிற்கு வருவோருக்கெல்லாம் பணம் கொடுப்பதனை இன்னும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் ..
சித்திரை புத்தாண்டு பிறந்த ஞாயிற்றுக்கிழமையில் மருத்துநீர் தேய்த்து ஸ்நானம் செய்து .. புத்தாடை தரித்து ஆலயம் சென்று தெய்வ வழிபாடு செய்து சூரியனுக்குப் பொங்கல் .. பூஜைகள் செய்து .. குரு .. பெற்றோர் முதலிய பெரியோரை வணங்கி ஆசிபெற்று பந்துமித்திரர்களுடன் அளவளாவி .. அறுசுவை உண்டிகள் அருந்தி .. அரிய தவத்தால் பெற்ற மானிடப்பிறவியில் செயற்பாலானவற்றைச் சிந்தித்து
ஏழை எளியோருக்கு தான தருமங்களைச் செய்து மங்களமாக வாழக்கடவர் ..
“ ஓம் சூர்யாய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: 2 people, text
Image may contain: 1 person, text

No comments:

Post a Comment