நமசிவாய ! நமசிவாய ! நமசிவாய ! ஐந்தெழுத்து சிவபெருமான் ஆட்சி செய்யும் பீடமாம் ஆறெழுத்து சரவணனும் காட்சி நல்கும் மாடமாம் நைந்து வாழும் மக்களுக்கு நோய் நொடியைப் போக்கிட நன்மருந்தைக் கொடுக்க வந்த நீலகண்டன் மந்திரம் நாவினுக்கு உகந்த நாமம் நமசிவாய மந்திரமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று கார்த்திகைமாத சோமவார பிரதோஷமும் .. ஞானத்தை அளித்து பாவத்தை மட்டுமன்றி ஆணவத்தை இறக்கிவைக்கும் தலமாகிய திருவண்ணாமலையில் பரணி நட்சத்திரத்தில் அண்ணாமலையானுக்கு “மஹாபரணிதீபம் “ ஏற்றும் ஓர் புனிதமான நன்னாளுமாகும் .. இந்நாளில் இருந்து தங்கள் வாழ்வும் ஓர் தீப ஒளியாக என்றும் மிளிரவும் .. சகல ஐஸ்வர்யங்கள் பெருகவும் எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவாய தீமஹி !
தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !!
சோமவார பிரதோஷம் சிவனுக்கு மிகவும் உகந்தது .. அதிலும் கார்த்திகைமாத சோமவார பிரதோஷம் மிகவும் சிறப்புவாய்ந்ததாகும் .. இந்நாளில் சிவனுக்கு நடைபெறும் விசேஷ அபிஷேக ஆராதனைகளில் பங்கேற்பதால் மிகவும் சிறந்த பலன்களைப் பெறலாம் என்பதால் சிவனுக்கு சங்காபிஷேகமும் நடைபெறுகின்றது ..
சிவபெருமான் அபிஷேகப்பிரியர் என்பதாலும் .. அப்பெருமானுக்கு செய்யும் எல்லா அபிஷேகத்தையும்விட சங்கால் செய்யும் அபிஷேகம் மிகவும் சக்தி வாய்ந்தது என்பதாலும் சங்காபிஷேகத்தை கண்குளிரக்கண்டு இறைவனை வழிபடுவதால் பலவகையான தோஷங்கள் நீங்கி சகல செல்வத்துடன் பெருவாழ்வு வாழலாம் ..
ஒவ்வொருவர் வீட்டில் உள்ள நீரிலும் கார்த்திகை மாதத்தில் திருமால் குடியிருக்கிறார் .. சங்கு லக்ஷ்மியின் அம்சமாகும் .. எனவே சங்காபிஷேகம் சிவ வைணவ ஒற்றுமையையும் இதனைக் கடைபிடிப்பவர்களை தம்மோடு ஈஸ்வரன் இணைத்துக் கொள்வார் என்றும் புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது ..
கார்த்திகை சோமவாரத்தில் சிவனையும் விஷ்ணுபகவானையும் வில்வ இலைகளால் அர்ச்சித்து வழிபாடு செய்தால் லக்ஷ்மிகடாக்ஷ்ம் உண்டாகும் ..
சிவதரிசனம் செய்வோம் ! வாழ்வில் நிம்மதியும் சந்தோஷமும் பெறுவோம் !
“ ஓம் நமசிவாய ”
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
No comments:
Post a Comment