” உண்ணமுலை உமையாளொடும் உடன் ஆகிய ஒருவன் உண்ணாமுலை பெண் ஆகிய பெருமான் மலை திருமாமணி திகழ மண்ணுறு திருமணி புரையும் மேனி விணுயர் புட்கொடி விறல் வெய்யோனும் கழுவப்பட்ட அழகிய நீலமணிபோலும் திருமேனியையும் வானுற ஓங்கிய கருடக்கொடியையும் உடைய வென்றியை விரும்புவோனும் வான்கதிர்த் திருமணி வயங்கும் சென்னி வாலிய ஒளியையுடைய விளங்கும் உச்சியையும் உடைய மண் ஆர்த்த்ச்ன்ச் ச்ருவித்திரள் மழலை (ம்) முழவு அதிரும் அண்ணாமல் தொழுவார் வினை வழுவா வண்ணம் அறுமே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் .. “ கார்த்திகைத் தீபத்திருநாள் “ நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. கார்த்திகை மாதமும் கார்த்திகை நட்சத்திரமும் சேர்ந்த “ திருக்கார்த்திகைத் திருநாளில் “ முருகப்பெருமானையும் .. அண்ணாமலை .. உண்ணாமுலையம்மனையும் போற்றித் துதித்து .. தங்களனைவரது துயர் களைந்து சகலசௌபாக்கியங்களும் பெற்று .. வாழ்வில் அனைத்துச் செயல்களிலும் வெற்றிகாண பிரார்த்திப்போமாக !
“ கண்ணார்கழல் காட்டி நாயேனை ஆட்கொண்ட அண்ணாமலையானைப் பாடுதும் காண் அம்மானாய் “ - மாணிக்கவாசகர் -
” எண்ணை கரைகிறது ! திரி கரிகிறது “ ஆம் தீபம் என்பது தன்னைக் கரைத்துக் கொண்டு .. மற்றவர்களுக்காக ஒளிவழங்குகிறது .. பிறர்நலம் பேணுவதற்காகத் தன் உயிரைத் தியாகம் செய்யவேண்டும் என்பதே கார்த்திகை விளக்கின் தத்துவம் ..
அதுமட்டுமல்ல தீபத்தின் ஒளி மனிதர்களுக்குமட்டுமல்ல பிற உயிரினங்களின் மீதும் உயிரற்ற பொருட்கள் மீதும்படுகிறது .. புழு .. கொசு .. நிலம் .. நீர்வாழ் மற்றும் பிராணிகள் மீதெல்லாமும் படுகின்றது .. தீப ஒளி எப்படி எல்லார்மீதும் பரவுகிறதோ அதுபோல் மனிதனின் மனதில் எழும் “அன்புஒளி “ எல்லார்மீதும் படவேண்டும் என்பதையே கார்த்திகைதீபம் நமக்கு உணர்த்துகிறது ..
தமிழ் மக்களின் வாழ்பியலில் கலாசார பண்பாடுகளில் சிறப்புக்குரிய ஒளித்திருநாள் கார்த்திகைதீபம் .. பஞ்சபூதங்களான நிலம் .. நீர் .. நெருப்பு .. காற்று .. ஆகாயம் இவைகளால் ஆனது பிரபஞ்சம் .. அவற்றுள் நெருப்பை வழிபடுவதுதான் தீபத்திருவிழா !
பஞ்சபூதலிங்கத்தில் அக்னிலிங்கமாய் முதன்மையாய் விளங்குவது திருவண்ணாமலையாம் அருணாசலமே!
இங்குள்ள குன்றின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியானது உலகம் முழுவதும் உள்ள அஞ்ஞான இருளை நீக்கி .. மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் .. இந்த திருத்தலத்தில் இருக்கும் மலையே சிவனாக வணங்கப்படுகிறது .. இங்கு ஈசன் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ...
இங்குள்ள குன்றின் சிகரத்தில் ஏற்றப்படும் ஜோதியானது உலகம் முழுவதும் உள்ள அஞ்ஞான இருளை நீக்கி .. மெய்ஞான ஒளியைப் பரப்பும் சிவஞான ஜோதியாகப் பிரகாசிக்கும் .. இந்த திருத்தலத்தில் இருக்கும் மலையே சிவனாக வணங்கப்படுகிறது .. இங்கு ஈசன் மலையாக இருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார் ...
ஆண்டிற்கொருமுறை நினைத்தாலே முக்திதரும் திருவண்ணாமலியில் மட்டும் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் திருத்தாண்டவம் செய்கிறார் .. முதலில் விநாயகர் .. முருகன் .. உற்சவர் - அண்ணாமலையார் .. அம்பிகை .. சண்டிகேஸ்வரர் என்னும் பஞ்சமூர்த்திகளும் ஒருங்கே காட்சிதர மாலைவேளையில் சிலநிமிடங்கள் மட்டும் அர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தின் வெளியே வந்து மலையைநோக்கி திருத்தாண்டவம் புரிய .. மகாதீபம் ஏற்றப்படுகிறது .. அதன்பின் பஞ்சமூர்த்திகளும் திருவீதியுலா வருகின்றனர் ..
எனவே அலையாக வரும் பக்தர்கள் அனைவரும் மலைமீது ஒளிவீசும் மங்காத ஜோதியான அருட்கடலாம் ஆண்டவரை வணங்குவோம் ! வளம் நலம் அனைத்தும் பெறுவோம் !
“ அருள்மிகு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவடி மலரடி போற்றி ! போற்றி ! போற்றி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
“ அருள்மிகு அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் திருவடி மலரடி போற்றி ! போற்றி ! போற்றி “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment