அன்பே தகழியாக ! ஆர்வமே நெய்யாக ! இன்புருகு சிந்தை இடுதிரியா என்புருகி ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணர்க்கு ஞானத்தமிழ் புரிந்த நான் “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. பௌர்ணமித் திதியும் .. ரோகிணி நட்சத்திரமும் கூடிவரும் இந்நாளில் ஸ்ரீவிஷ்ணு ஆலயத்தில் ஏற்றப்படும் தீபம் “விஷ்ணுவாலயதீபம் “ என்றழைக்கப்படுகிறது .. இந்நன்னாளில் பகவானைத் துதித்து சொல்வளமும் .. செல்வ வளம் பெற்றிடவும் பிரார்த்திப்போமாக !
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
அருட்பெரும் ஜோதியாம் ஆண்டவன் அருவமாகவும் .. உருவமாகவும் விளங்குவதுபோன்று அக்னியும் பிரகாசிக்கின்றது அக்னியிலே பலவிதமான தீபங்கள் தோன்றுவதுபோல் “சிவம்” என்ற நாமம் ஒன்றே பலதத்துவங்களைக் கடந்து பற்பல ஜோதிஸ்வரூபமாகக் காட்சி தருகிறது .. அக்னியின் சக்தியில் அழுக்குகள் களையப்படுகிறது ..
கார்த்திகை விழாவை குமாராலயதீபம் .. விஷ்ணுவாலயதீபம் .. சர்வாலயதீபம் என மூன்றாக ஆலயங்களிலும் .. இல்லங்களிலும் கொண்டாடுவர் ..
குமாராலயதீபம் - முருகன் ஆலயங்களில் கொண்டாடப்படும் .. கார்த்திகை மாதத்தில் மார்த்திகை நட்சத்திரத்தில் கூடிவரும் நாள் ..
விஷ்ணுவாலயதீபம் - விஷ்ணு ஆலயங்களில் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்தில் ரோகிணி நட்சத்திரம் கூடிவரும்நாள் ..
சர்வாலயதீபம் - ஏனைய இந்து ஆலயங்களிலும் வீடுகளிலும் கொண்டாடப்படும் கார்த்திகை மாதத்து முழுமதி திதியாகும் ..
கார்த்திகைத் தீபம் உயரமாக மலைமீது ஏற்றப்படுவதற்கு விஞ்ஞான விளக்கம் உண்டு .. சுழல்காற்றை சமன்செய்யும் குணம் அக்னிக்கு உண்டு .. தைமாதம் அறுவடையாக வேண்டிய பயிர்கள் பால்பிடிக்கும் பருவத்தில் காற்று சுழன்றடித்தால் விளைச்சல் பாதிக்கப்படும் .. அதனைக்குறைத்து திசைதிருப்பவே மலைமீதான தீபமும் .. வீடுகள்தோறும் ஏற்றிவைக்கும் தீபமும் பல்வழிகளில் பயன்படுகின்றன ..
குத்துவிளக்கின் 5 முகங்களும் அன்பு .. மன உறுதி நிதானம் .. சமயோசித்தபுத்தி .. சகிப்புத்தன்மை ஆகியவற்றைக் குறிப்பதாக ஆன்றோர்கள் சொல்வார்கள் .. வீடுகளில் விளக்கேற்றியபின் கோவிலுக்குச் சென்று கார்த்திகை தீபஜோதி தரிசனம் செய்வதால் தடை .. தோஷங்கள் நீங்கி .. சுபீட்சம் உண்டாகும் .. மன அமைதியும் .. மன உறுதியும் ஏற்படும் .. இல்லத்தில் இருந்த தீயசக்திகள் நீங்கி .. நமதுமனம் .. சொல் .. செயல் அனைத்தும் சுத்தமாகும் என்பது நம்பிக்கை ..
தீபவிளக்கு ஏற்றி அறியாமை இருள் அகன்று .. வளமான வாழ்வும் .. இறை அருளும் பெறுவோம்!
“ ஓம் நமோ நாராயணாய “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment