” பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை நாலும் கலந்துனக்கு நான் தருவேன் ! கோலம் செய் தூங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு சங்கத் தமிழ் மூன்றும் தா “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் கிறிஸ்மஸ் கொண்டாடும் அனைத்து அன்புள்ளங்களுக்கும் எங்கள் நல்வாழ்த்துகளும் உரித்தாகுக !! நம் உள்ளத்தில் அமர்ந்திருக்கும் ஓங்காரத் தனிப்பொருள் எம்மை காக்கும் ஸ்ரீகணேஷரைத் துதித்து தங்களனைவருக்கும் இந்நாள் ஓர் பொன்னாளாக மிளிரவும் .. என்றும் வாழ்வில் வசந்தம் வீசிடவும் பிரார்த்திப்போமாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
தத்துவங்கள் தோன்றும் முறையில் முதற்கண் சுத்தமாயையில் இருந்து “ஓம்” என்ற பிரணவநாதமே தோன்றியது .. பிள்ளையார் பிரணவ வடிவினர் .. ஆதலால் “பிரணவன் “ என்றும் .. “மூத்தபிள்ளையார்” என்றும் அறியப்படுகிறார் ..
ஓங்காரநாத தத்துவம் சிவனையும் சுட்டி நிற்பதால் சிவனும் பிள்ளையாரும் ஒன்றே என்றும் கொள்ளமுடிகிறது .. பிரவணத்தை முற்றறிந்தவர் என்பதால் பிரணவன் .. பிரணவநாதன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார் .. “ஓம்” என்ற பிரணவமந்திர ரூபியான அவர் ஞானமேவடிவானவர் ..
அவரது திருமேனியை ஒருதத்துவவித்தென ஆன்றோர் விஸ்தரித்துள்ளனர் .. அவருடைய இருதிருவடிகளிலே வலது திருவடியை ”முற்றறிவு “ அதாவது ஞானசக்தி என்றும் .. இடது திருவடியை “முற்றுத்தொழில் “ அதாவது கிரியாசக்தி என்றும் உணர்த்தப்படுகின்றது .. அவ்விரு திருவடிகளின் துணையின்றி உயிர்கள் ஒன்றினை அறிந்துகொள்ளவோ செயலாற்றவோ முடியாது ..
ஸ்ரீகணேஷரின் பொற்பாதங்களில் சரணடைவோமாக !
“ ஓம் விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment