PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS - WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS & GUIDANCE OF LORD GANESHA .. LORD GANESHA IS OUR MENTOR & PROTECTOR .. MAY HE ENRICH YOUR LIFE BY GIVING GREAT BEGININGS & REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE TOO .. " JAI SHREE GANESHA "

” விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான் விநாயகனே வேட்கை தணிவிப்பான் !
விநாயகனே விண்ணிற்கும் மண்ணிற்கும் நாதனுமாய் நன்மையினால் கண்ணில் பணிமின் கனிந்து “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் செவ்வாயும் .. சதுர்த்தியும் கூடிவரும் இந்நாளில் கணங்களுக்கெல்லாம் அதிபதியாகிய கணபதியைத் துதித்து சகல கிரகதோஷங்களும் நீங்கி .. இகபர சுகங்கள் யாவும் பெற்றுய்வீர்களாக !
ஓம் தத்புருஷாய வித்மஹே !
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !!
ஓம்கார பிரணவத்தின் நாயனாய் திகழும் வினாயகரின் உடலில் நவக்கிரகங்கள் அடங்கி உள்ளன ..
விநாயகரின் நெற்றியில் - சூரியன் உறைந்துள்ளான்
அதேபோல் நாபியில் - சந்திரனும்
வலது தொடையில் - செவ்வாயும்
இடது தொடையில் கேதுவும்
வலதுகையில் - புதனும்
இடது மேல்கையில் - ராகுவும்
வலது மேல்கையில் - சனியும்
இடது கீழ் கையில் - சுக்ரனும்
தலையில் குருபகவானும் இடம் பெற்றுள்ளனர் .. எனவே விநாயகரை தரிசனம் செய்தாலே நவக்கிரகங்களையும் வழிபட்டு துதித்ததற்கான அனைத்து பலன்களும் கிட்டும் ..
வினாயகப்பெருமானின் முன்பாக அமர்ந்து அவருக்கு உகந்த ஸ்லோகத்தை மனதை ஒருமுகப்படுத்தி பாராயணம் செய்துவந்தால் மனதில் விரும்பிய விஷயங்கள் மகிழ்ச்சியளிக்கும் விதத்தில் விரைவில் நடந்தேறும் .. காரியசித்திமாலை பாடல்களை காலை மதியம் .. மாலை என மூன்றுவேளைகளிலும் சொல்லி வந்தால் நினைத்தகாரியங்கள் கைகூடும் .. மனம் அமைதி காணும் ..
“ ஓம் ஸ்ரீ விக்னேஷ்வராய நமஹ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
Image may contain: one or more people

No comments:

Post a Comment