பிள்ளைப் பிறையும் புனலும் சூடும் பெம்மான் என்று உள்ளத்து உள்ளித் தொழுவார் தங்கள் உறுநோய்கள் தள்ளிப்போக அருளும் தலைவன் சித்திவிநாயகனே “
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. “தை அமாவாசையாகிய “ இன்று நம் முன்னோர்களை பக்திசிரத்தையோடு நினைந்து தர்ப்பணம் செய்து அவர்களின் ஆசியைப் பெறுவோமாக !
மனிதப்பிறவி மகத்தான பிறவி ! மனிதனாகப் பிறந்தால்தான் இறைவனை எளிதில் அடையமுடியும் .. வேறு எந்தப்பிறவிக்கும் இந்தச் சிறப்பு கிடையாது .. வானுலகில் தேவராக இருந்தாலும்கூட இறைவனை தரிசிக்கத்தான் முடியுமே ஒழிய அவரோடு இரண்டறக் கலக்கமுடியாது .. இத்தகைய அரியமானிடப்பிறவியைத் தந்த நம் முன்னோருக்கு நன்றி தெரிவிக்க வாரிசுகள் நடத்தும் நன்றிக்கடனாக அமாவாசை மற்றும் பௌர்ணமித்திதியை எடுத்துக்கொள்ளலாம் ..
“ நன்றி மறவேள் “ எனும் வாக்கின்படி நாம் இந்த உலகுக்கு வரக்காரணமாக இருந்தவர்களைத் திருப்தி செய்தால்தான் நம்மால் இந்த உலகுக்கு வந்தவர்களைச் செவ்வனே காக்கமுடியும் .. முன்னோர்களே நம் சந்ததியைக் காத்தருள்வார்கள் !
தை அமாவாசையில் நாம் தரும் பிண்டமும் .. எள்ளும் .. தண்ணீருமே அவர்களுக்கு உணவு .. பிண்டம்தான் ஆத்மரூபமாக உள்ள முன்னோர்களின் பசியைத் தீர்க்கும் உணவாகும்
இந்நாளில் கடற்கரையிலோ .. புண்ணிய நதிக்கரையிலோ நீராடி .. வேதவிற்பன்னர் வழிகாட்டுதலுடன் நீத்தார் வழிபாட்டிற்குரிய பூஜையையும் ஏழைக்கு அவர்களது பரிபூரண ஆசிகளைப் பெற்று அனைத்து தடைகளையும் தகர்த்திடுவீர்களாக !
” ஓம் பித்ருதேவோ பவ “
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..
No comments:
Post a Comment