அலகாபாத் பெயர் இப்பொழுது பிரயாகராஜாக மாறி விட்டது.இங்கு மிகவும் முக்கியமானது திரிவேணி சங்கமம் ஆகும்.கங்கை,யமுனை மற்றும் கண்ணுக்கு தெரியாத சரஸ்வதி நதிகள் சேரும் இடம் சங்கமம் ஆகும்.சங்கமத்துக்கு செல்ல, யமுனை நதியின் கரையில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் படகில் செல்ல வேண்டும்.கங்கை நீர் செம்மண் நிறத்திலும் யமுனை நீர் நீல நிறத்திலும் கலப்பதை காணலாம். அங்கு ஆற்றில் இறங்கி குளித்து விட்டு சங்கல்பம் செய்யவிட்டு திரும்பி வரும்போது படகில் இருந்தபடியே கங்கையில் தண்ணீரை பாட்டிலில் எடுத்துவரலாம். அதுவே கங்கா தீர்த்தமாகும்.
கரையில் தெரியும் பெரிய கோட்டை அக்பர் கட்டிய கோட்டையாகும். அதனுள் ஒரு ஆல மரம் உள்ளது அது அட்சயவடம் என்று அழைக்கபடுகிறது. அங்கு ஒரு பாதாள கோயில் உள்ளது. இங்கு ஆதிகேசவன் ( பாம்பின்) சிலை இருக்கிறது.வரும் வழியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது.15 அடி நீளத்தில் அங்கு ஆஞ்சநேயர் சயன கோலத்தில் காட்சியளிக்கிறார். அருகில் சங்கர விமான மண்டபம் உள்ளது.காஞ்சி மடத்தால் கட்டப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது.
அடுத்தது தாரகஞ்சிலுள்ள வேணி மாதவர் ஆலயம். இங்கு மாதவரும்,திருவேணியும் இருக்கிறார்கள். அடுத்தது சர்ப்பராஜா எனப்படும் வாசுகி ஆலயம். இது நாகபாசு எனப்படும் இடத்தில கங்கை கரையில் இருக்கிறது. இந்த கோயிலுக்கு முன்புறமுள்ள மண்டபத்தில் பீஷ்மரின் பிரமாண்ட சிலை உள்ளது.
நேருவின் பிறந்த வீடான ஆனந்தபவனும், பழம் பொருள் காட்சியகமும், பிர்லா கோவிலும் மற்ற பார்க்க வேண்டிய இடங்கள்.
காசி
காசியில் நாம் பார்க்க பல இடங்கள் உள்ளன.சுமார் இரண்டு நாட்கள் தங்கி பார்க்கவேண்டும்.
காசியில் முதலில் அதிகாலை கங்கையில் குளித்துவிட்டு விஸ்வநாதரையும் விசாலாஷியையும், அன்னபூரணியையும் தரிசிக்கலாம். விஸ்வநாதருக்கு இரண்டு கால பூஜை நாட்டு கோட்டை சத்திரத்தாரால் நடத்தப்படுகிறது. விசாலாஷி கோவிலைதரிசனம் செய்யலாம்..
காசியில் முதலில் அதிகாலை கங்கையில் குளித்துவிட்டு விஸ்வநாதரையும் விசாலாஷியையும், அன்னபூரணியையும் தரிசிக்கலாம். விஸ்வநாதருக்கு இரண்டு கால பூஜை நாட்டு கோட்டை சத்திரத்தாரால் நடத்தப்படுகிறது. விசாலாஷி கோவிலைதரிசனம் செய்யலாம்..
கேதரீஸ்வரர் கோவில்- கேதார் படித்துறையில் குமாரசாமி மடத்துக்கு அருகில் உள்ளது. இங்கு நாமே கங்கா தீரத்தை கொண்டு வந்து சாமியை அபிஷேகம் செய்யலாம்.
துண்டி விநாயகர் கோயில் கடைதெருவில் உள்ளது. பஞ்சகங்கா கட்டத்தில் பிந்து மாதவர் கோவில் உள்ளது.தசாவமேத படித்துறை அருகில் உள்ள வராகி கோவிலுக்கு காலை ஐந்து மணிக்குள் செல்லவேண்டும்.மேல்தளத்திலிருந்து கீழேயுள்ள பாதங்களை மட்டும் தரிசிக்கலாம்.
காசி பல்கலை கழகம் போகும் வழியில் அனுமன் ஆலயம் உள்ளது. இதன் அருகில் குரங்கு கோவில் எனப்படும் துர்க்கை கோவில் உள்ளது.காசி பாரத இந்து பல்கலைகழகத்துக்குள் உள்ள புது விஸ்வநாதர் ( பிர்லா ) கோவில் மதன் மோகன் மாளவியாவால் கட்டப்பட்ட மிகவும் அருமையான கோவில் ஆகும்.
துளசி மனாசு கோவில் ராமாயணம் எழுதிய துளசி தாசரின் நினைவாக கட்டப்பட்டுள்ளது. மாடர்ன் முறையில் ராமாயண காட்சிகள் பார்வைக்கு வைக்கபட்டுள்ளன.கால பைரவர் கோவில் விஸ்வநாதர் கோவிலுக்கு வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு காசிகயிறு வாங்கலாம்..
காசியில் கங்கை செம்பு, ருத்திராட்சம், ஸ்படிகமாலை, பூஜை தட்டு, பூஜை மணி, ஜப மாலை முதலிய பூஜை சாமான்களும், செப்பு கிண்ணங்களில் அடைக்கப்பட்ட காசி தீர்த்ததையும், விஸ்வநாதர், அன்னபூரணி, விசாலாட்சி விக்கிரகங்களும், படங்களும் வாங்குவது உத்தமம்.
















No comments:
Post a Comment