PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
கலங்கி நிற்கிறோம் ஐயனே...
தவறு செய்த குழந்தையை
சமயத்தில் தாயே அடித்து விடுவாள்.
ஆனால் ஆறுதல் தேடி
அந்தத் தாயிடமே
குழந்தை சரணடையும்.
தாயும் அரவணைத்துக் கொள்வாள்...
அதுபோல செய்வதுஅறியாது இப்போது
உன்னையே சரணடைகிறோம் ஐயனே..
ஐயனே உன் அன்பையும்,
கருணையையும்
தோற்கடிக்க கூடிய
மற்றொரு அன்பையும்,
கருணையையும்,
உலகில் யாரும்,
எப்போதும், எங்களுக்கு
தரப் போவதே இல்லை ஐயனே...
உன்னை தவிர....!
நீயே உற்ற துணை என் ஐயனே...
இன்பமே எந்நாளும் துன்பமில்லை...
அருள் செய் என் ஐயனே...
ஸ்வாமியே சரணம் ஐயப்பா...

குலதெய்வங்கள் என்றால் என்ன ..? அவர்களின் பெருமை என்ன...? ஏன் ஒரே கோத்திரத்தில் பெண் எடுப்பதில்லை ? குலதெய்வம் விஞ்ஞானத்தோடு எப்படி ஒத்துபோகின்றது...? என்பவைகளை பற்றி. சற்று விரிவாக ஆராயலாம்..வாருங்கள் !!!!!


நம் முன்னோர்கள் அதாவது நம் தந்தை வழி பாட்டன்
பாட்டிமார்கள் வணங்கி வந்த தெய்வம் தான் நம்குல
தெய்வமாகும். இந்த தந்தை வழி பாட்டன்மார்
வரிசையில், மிகப்பெரிய
ஒழுங்கு ஒன்று இருப்பதை கூர்ந்துகவனித்தால்
உணரலாம். அதுதான்‘ கோத்திரம்’ என்னும்
ஒரு ரிஷியின் வழிவழிப் பாதை.
பிற கோத்திரத்தில் இருந்து பெண்கள் வந்து இந்த
வழிவழி பாதையில் நம் தாத்தாக்களின்
வாழ்க்கை துணையாக கை பிடித்திருப்பார்கள்.
எக்காரணம் கொண்டும் ஒரே கோத்திரத்தில் பெண்
சம்பந்தம் ஏற்பட்டிருக்காது. இதனால்,
ரிஷி பரம்பரையானது சங்கிலி கண்ணி போல
அறுடாமல், ஒரே சகோதரத்துவத்தோடு வந்த வண்ணம்
இருக்கும். இது ஒரு முக்கியமான ஒழுங்கு சார்ந்த
விஷயமாகும்.
இந்த உலகத்தில் ஆயிரம் கோயில்கள் இருக்கின்றன.அந்த
கோயில்களுக்கு அவர்கள் போயிருக்கலாம்
போகாமலும் இருக்கலாம்.
அதற்கு உத்தரவாதமில்லை.
ஆனால், குலதெய்வ
கோயிலுக்கு, நாம் பக்தி என்கிற
ஒன்றை அறிவதற்கு முன்பே, நம் தாய் தந்தையரால்
அங்கு கொண்டு செல்லப்பட்டு,
முடி காணிக்கை என்ற முதல் மொட்டை மற்றும்
காதுகுத்து என்று தொடர்ந்து வணங்க வைக்கவும்
படுகிறோம். இதன்படி பார்த்தால், குலதெய்வ
சன்னிதியில் சென்று நாம் நிற்கும் போது, நம்
பரம்பரை வரிசையில் போய் நிற்கிறோம்.
இந்த வரிசை தொடர்பை வேறு எங்காவது, எந்த
விதத்திலாவது உருவாக்க முடியுமா?
அது மட்டுமல்ல. ஒரு மனிதனின்
பிறப்புக்கு பின்னே இப்படியொரு பரம்பரை வரிசை
இருப்பதை நினைக்க கூட தெரியாமல், அதிகபட்சம்
இரு பாட்டன் பாட்டி பேருக்கு மேல் தெரியாமல்
அல்லவா நம் வாழ்க்கைப்போக்கு உள்ளது?
இந்த வழி வழி போக்கில் ஒருவர்
மூட்டை மூட்டையாக
புண்ணியத்தை கட்டியிருக்கலாம். இன்னொருவர்
பாவமே கூட பண்ணியிருக்கட்டுமே!
நாம்
அங்கே போய் நின்று நம் பொருட்டு பிரத்யேகமாக
வெளிப்படும் அந்த சக்தியை தொழும் போது, நம்
முன்னோர்களும் பித்ருக்களாக
இருந்து நம்மை ஆசிர்வாதிக்கிறார்கள்.
இது எத்தனை தூரப்பார்வையோடு,
வடிவமைக்கப்பட்டஒரு விஷயம்?”
குலதெய்வம்
குலத்தினை காக்கும் தெய்வம் குலதெய்வம் ஆகும்.
தெய்வங்களில் மிகவும் வலிமையான தெய்வம்
குலதெய்வம் ஆகும். குலதெய்வமே நமக்கு எளிதில்
அருளினை தரும். மேலும் மற்ற தெய்வ
வழிபாடுகளின் பலன்களையும் பெற்று தரும்.
குலதெய்வம் பெரும்பாலும்
சிறு தெய்வமாகவே காணப்படும். ஆனால் அதன்
சக்தியை அளவிடமுடியாது. சிறு தெய்வம்
என்று அலட்சியப் படுத்தக்கூடாது.
எமன் கூட
ஒருவரின் குலதெய்வத்தின் அனுமதி பெற்று தான்
உயிரை எடுக்கமுடியும்.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும்
கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.
நம் குடும்பத்தை பற்றி அறிய யாரிடம் குறிகேட்க
சென்றாலும் குறிசொல்பவர் நம்குல
தெய்வத்தை அழைத்து அதனிடம்
கேட்டே நம்மை பற்றிய விபரத்தை சொல்ல
முடியுமே தவிர அவரால் தன்னிச்சையாக
எதையும் சொல்ல முடியாது.
இதை உணர்ந்த
மந்திரவாதிகள்
ஒருவருக்கு செய்வினை செய்யும்காலத்தில்
யாருக்கு செய்வினை செய்ய இருக்கிறாரோ
அவரது குல தெய்வத்தினை மந்திர கட்டு மூலம்
கட்டுப்படுத்தி விட்ட பின்பே தான்
செய்வினை செய்வார்.
மந்திரவாதிகள் தாங்கள்
வசப்படுத்திய தேவதைகளின் மூலம் மற்றவர்களின்
குலதெய்வத்தின் விபரங்களைஎளிதில்
பெற்று விடுகிறார்கள்.
மந்திர
கட்டுகளுக்கு கட்டுப்படாத குலதெய்வங்களும்
உண்டு. அவை அந்த
மந்திரவாதிகளை அழித்தவரலாறும் உண்டு.
குலதெய்வம் என்பது நமது முன்னோர்களில்
தெய்வமாக மாறிவிட்ட புண்ணிய ஆத்மாக்கள் ஆகும்.
அந்த புனித ஆத்மாக்கள் தங்களின்குலத்தினை
சார்ந்தவர்களை கண்ணும் கருத்துமாக பேணிக்
காக்கும் வல்லமை படைத்தவை.
எனவே தான் அந்த
தெய்வங்கள் குலதெய்வங்கள் என்று சிறப்புடன்
அழைக்கப்படுகின்றன.
குலதெய்வங்களும்
கர்மவினைகளை நீக்க வல்லவை.
யாருக்கு கர்மவினைகள் மிக அதிகமாக
இருக்கிறதோ அவருக்கு குலதெய்வமே தெரியாமல்
போவதும் உண்டு.
பொதுவாக பெண்கள் மட்டும் இரண்டு குல
தெய்வங்களை வணங்குபவர்களாக இறைவன்
படைத்திருக்கிறான்.
பிறந்த வீட்டில் ஒரு தெய்வம்
புகுந்த வீட்டில் ஒரு தெய்வம்.
திருமணத்திற்கு முன் பிறந்த வீட்டின்
குலதெய்வத்தை வணங்குபவர்கள் திருமணம்
முடிந்தவுடன் கணவனின் வீட்டில் உள்ள
குலதெய்வத்தை வணங்க ஆரம்பிக்கிறார்கள்.
பிறந்த
வீட்டின் குலதெய்வத்தை வணங்குவதுகிடையாது.
பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வருடத்திற்கு ஒரு முறை
செய்யும் வழிபாடு அவர்களை ஆண்டு முழுவதும்
காப்பாற்றும். புகுந்த வீட்டில் எந்த பிரச்சினையும்
சமாளிக்ககூடிய ஒரு ஆற்றலை தரும்.
இதுவரை யாரும் பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு வழிபாடு செய்யாமல் இருந்தால்
பிறந்த வீட்டின்
குலதெய்வத்திற்கு திரு விழாகாலங்களில்
வழிப்பாட்டை மேற்கொள்ளுங்கள்.
ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல
வேரூன்ற வேண்டுமனால் குலதெய்வ
வழிபாடு மிக, மிக முக்கியம். குலதெய்வதோஷம்
இருந்தால், மற்ற தெய்வங்களின் அருள் கிடைக்காது.
குலதெய்வத்தின் அனுமதி அல்லது அனுகிரகம்
இல்லை என்றால் ஒருவர் என்னதான் சக்தி வாய்ந்த
ஹோமம், யாகம் செய்தாலும்,
ஆலயங்களுக்கு சென்றாலும் எதிர்பார்த்த பலன்
தருமா என்பது சந்தேகம்தான்.
எனவே உங்கள்
குலதெய்வத்தின்
கோவிலுக்கு அடிக்கடி (குறைந்தது வருடம்
ஒரு முறையாவது) செல்லுங்கள். அபிஷேக
ஆராதனைகள் செய்யுங்கள்.
அக்கோவிலுக்கு உதவுங்கள்.
பூஜைகள் நடைபெற
ஏற்பாடு செய்யுங்கள். பிறகு பாருங்கள் உங்கள்
வாழ்க்கைபோகும் போக்கை…
அடிப்படையில் இந்துமதம் பற்றற்ற
தன்மையை போதிக்கிறது,
அதாவது அனைத்தையும் துறந்து தியானம், தவம்
மூலம் இறை நிலையை அடைவது. ஆனால் இந்த
குலதெய்வம் மனிதன் லௌகீக
வாழ்க்கைக்கு தேவையான பலன்களை அளிக்கிறது
எந்த ஒரு வம்சத்திலுமே 13
வம்சாவளியினருக்கு மேல் அவர்கள்
தொடர்ந்து வணங்கும் குல தெய்வம் இருக்க
முடியாது என்பது தெய்வக்கணக்கு.
ஏதாவது ஒரு கட்டத்தில் வழி வழியாக வந்தவர்களின்
வம்சத்தினருக்கு குழந்தை பேறு இல்லாமலோ,
அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச
விருத்தி அடையாமலோ அல்லது ஏதாவது
காரணத்தினால் வம்சம் அழிந்து விடும்.
ஆகவே ஒரு வம்சத்தின் குலதெய்வம் என்பது 13
வம்சாவளிகளுக்கு மட்டுமே தொடர்ந்து கொண்டு
இருக்கும்.
விஞ்ஞான ரீதியிலேயே இதற்கான பதிலைக்
காண்போமா.....?
விஞ்ஞான முறையில் யோசித்தால்
ஒரு குழந்தை ஆணா,
பெண்ணா என்பதை முடிவு செய்வது ஆணே.
ஒவ்வொரு குழந்தைக்கும் 23+23 க்ரொமொசோம்கள்
உள்ளன என்பதை அறிவோம். இது தாய் மூலம் 23
தந்தை மூலம் 23 என்பதையும் அறிவோம்.
இதிலே பிறக்கப் போகும் குழந்தை ஆணா,
பெண்ணா என்பதைத் தந்தையின்
க்ரொமொசொமே முடிவு செய்கிறது. தாயிடம் xx
க்ரோமோசோம்கள் மட்டுமே இருக்கின்றன.
தந்தைக்கோ, xy என இருவிதமான மாறுபட்ட
க்ரோமோசோம்கள் உள்ளன.
ஆணின் y யுடன் பெண்ணின்
x சேர்ந்தால் ஆண் குழந்தையும் இருவரின் x+x
சேர்ந்தால் பெண் குழந்தையும்
பிறக்கின்றது என்பதை விஞ்ஞானம் அறுதியிட்டுக்
கூறி உள்ளது.
ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்
கூடாது என்பதன் காரணமும் இதை ஒட்டியே.
ஒரே கோத்திரத்தில் பிறந்த பெண்ணோ,
ஆணோ ஒருவரை ஒருவர்
அறியாதவர்களாகவே இருந்தாலும் அவர்கள் சகோதர,
சகோதரியாகவே கருதப் படுகிறார்கள் என்பதை நம்
சனாதன தர்மம் திட்டவட்டமாய்க் கூறும்.
ஏனெனில்
பெண் குழந்தையை உருவாக்கும் x க்ரோமோசோம்
இருவரிடமும் இருக்கையில் ஆண்
குழந்தையை உருவாக்கும் y க்ரோமோசோம் மட்டும்
ஆணிடம் தான் உள்ளது. பெண்ணிற்கு y
க்ரோமோசோம்கள் தந்தை வழி வருவதில்லை.
ஆனால் அதே ஆண் குழந்தைக்குத் தந்தையிடம்
இருந்து y க்ரோமோசோம்கள் வருகின்றன. ஏனெனில்
அவன் மூலம் தான் வம்சம் மீண்டும் வளரப்
போகின்றது வழி வழியாக.
வழிவழியாக என்பதில் இருந்தே புரிந்திருக்க
வேண்டுமே, முப்பாட்டனார், பாட்டனார், மகன், பேரன்,
கொள்ளுப் பேரன், எள்ளுப் பேரன் எனத்
தொடர்ந்து இது ஒவ்வொருவரிடமும்
விதைக்கப்பட்டுத் தொடர்ந்து காப்பாற்றப்
பட்டு வருகின்றது.
இதன் முக்கியத்துவம்
குறித்து அறிந்தே நம் முன்னோர்கள் ஆண்
குழந்தைகளுக்கு முக்கியத்துவம்
அளித்திருக்கின்றனர்.
இதே முப்பாட்டி, பாட்டி, மகள், பேத்தி,
கொள்ளுப்பேத்தி, எள்ளுப்பேத்தி என x
க்ரோமோசோம்கள் வழி வழியாக வருவதில்லை. தன்
தாயிடம் இருந்தும், தந்தையிடம் இருந்தும் x
க்ரோமோசோம்கள் மகளுக்குக் கிடைக்கின்றது.
ஆனால் இயற்கையின் மாபெரும் அதிசயமாக y
க்ரோமோசோம்கள் பெண்களுக்குக்
கடத்தப்படுவதில்லை என்பதோடு தந்தையிடம்
இருந்து மகன் பெறுவதும் அவன் பரம்பரையின் y
க்ரோமோசொம்கள் மட்டுமே.
ஒரு ஆணால் மட்டுமே இந்த y க்ரோமோசோம்களைத்
தன் மகனுக்கு அளிக்க முடிகிறது.
பெண்ணிற்கோ எனில் ஆணின் y க்ரோமோசோம்கள்
கிடைப்பதில்லை.
ஆணின் y க்ரோமோசோம்கள்
ரொம்பவே பலவீனமான ஒன்று.
மேலும்
தொடர்ந்து காலம் காலமாக இந்த y க்ரோமோசோம்கள்
அவரவர் பரம்பரை ஆண் மக்களுக்குச்
சென்று கொண்டிருப்பதால் இன்னமும் பலவீனம் ஆகிக்
கொண்டிருக்கிறதாம்.
13 தலைமுறைக்கு மேல்
அது வலுவிழந்து பயனற்று போய்விடும். அதனால்
ஆண் வாரிசு ஏற்பட வாய்ப்பு இல்லை. மேலும்
ஏற்கெனவே பலவீனமான y க்ரோமோசோம்கள் மேலும்
பலவீனம் அடைய கூடாது என்பதாலும்,
பரம்பரை நோய்கள் தொடர
கூடாது என்பதாலுமே சொந்த ரத்த
உறவுகளுக்கிடையே திருமணம்
தவிர்க்கப்படுகிறது ...
திருச்செந்தூர் ஆலயத்தில் தினமும், மூலவர் நடை திறப்பதற்கு முன்பாக முதன்முதலில் ஆலயத்தின் கொடி மரத்துக்குத்தான் பூஜை நடைபெறும். இந்த கொடி மரம் பொதிகை. மலையிலிருந்து வரப்பெற்ற சந்தன மரமாகும். இந்த கொடிமரம் சந்தன கொடிமரம் என்பது பல பேருக்கு தெரியாது.
திருச்செந்தூருக்கு கொடிமரம் வந்த கதை!...
முன்னொரு காலத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா நடைபெறவில்லை. காரணம் அங்கு கொடிமரம் இல்லை. ஆகவே திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு கொடிமரம் வைக்க வேண்டுமென்று ஊர் கூடி பேசி முடிவெடுத்தனர்._
உடனே ஆறுமுகம் ஆசாரி என்பவர் தலைமையில் 21 பேர் கொண்ட குழு காக்காச்சி மலைக்கு (மேற்கு தொடர்ச்சி மலை) கொடி மரம் வெட்ட கிளம்பினர்...
திருச்செந்தூர் மந்தை அருகே உள் அம்மன் கோயிலில் அந்தக் குழுவினர் வேண்டச்சென்றனர். அம்மன் கோயில் முன்பு மற்றவர்கள் நின்று கொண்டனர்...
அம்மனை வணங்க ஆறுமுகம் ஆசாரி மட்டும் கருவறைக்குள் நுழைந்து அம்மனை வணங்கினார். அப்போது அம்மன் கண்களில் இருந்து நீர் வழிந்தது......
பயந்து போய் படபடத்து போன ஆசாரி, அம்மனே! ஏன் இந்த நிலை. தங்கள் கண்களில் நீர் வழிய காரணம் தான் என்ன? என்று கேட்டார்.....
அம்மன் ‘மகனே, நீங்கள் செய்யும் பணி நல்ல பணி தான். ஆனால் அந்த பணியில் ஈடுபடும் உன்னை தவிர வேறு யாரும் உயிரோடு திரும்ப மாட்டார்கள். அதை நினைத்து தான் எனக்கு வருத்தமாக உள்ளது. இதை நீ அவர்களிடம் சொல்லி விடாதே. இது ஆண்டவன் கட்டளை. இந்த நிலை தெரிந்த காரணத்தினால் தான் என கண்களில் கண்ணீர் வந்தது’ என்று கூறினார்.....
உடனே அதிர்ந்து போன ஆறுமுகம் ஆசாரி அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தார். இதை வெளியே உள்ளவர்களிடமும் சொல்லக்கூடாது. சொன்னால் தெய்வக்குத்தமாகி விடும்.
அதே நேரம் நம்பி நம்மோடு வருபவர்களை காப்பாற்ற வேண்டும். என்ன செய்ய என்று குழம்பினார்.....
ஆயினும் கலங்காமல் முருகன் மீது பாரத்தை போட்டு விட்டு களக்காடு அருகே உள்ள ஏர்வாடிக்கு வந்தார். அங்கு சின்னதம்பி மரக்காயர் என்ற மந்திரவாதி ஒருவரை சந்தித்தார். அவரிடம் முருகப் பெருமானுக்கு கொடிமரம் வெட்ட வந்த கதையை கூறி உதவிக்கு கூப்பிட்டனர்....
சின்னதம்பி மரக்காயரின் மனைவி பாத்திமாபீவி அவரை தடுத்தார். "நான் நேற்று முன்தினம் இரவு பயங்கர கனவு கண்டேன். அதில் உமது உயிருக்கு ஆபத்து உள்ளதாக அறிகுறி காட்டுகிறது....
எனவே கொடிமரம் வெட்ட நீங்கள் செல்ல வேண்டாம”| என்று கூறினாள்.....
ஆனால் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை. மனைவி உடனே அழுதாள், "நமது குடும்பம் உம்மை நம்பித்தான் உள்ளது. தயவு செய்து செல்ல வேண்டாம்” என்று தடுத்து கூறியும் சின்னதம்பி மரக்காயர் கேட்கவில்லை.
*விதி யாரை விட்டது.*
அவர் ஆறுமுகம் ஆசாரி குழுவினருடன் களக்காட்டு மலைக்கு சென்றார். அவர்கள் திருச்செந்தூரில் இருந்தே 21 மாட்டு வண்டிகளில் வந்து இருந்தார்கள். அந்த வண்டிகள் அணிவகுத்து களக்காடு மலையை நோக்கி சென்றது. ஆனால் அவர்களுக்கு தேவையான கொடிமரம் கிடைக்கவில்லை. அலைந்து திரிந்து பார்த்தார்கள் பக்கத்தில் எந்த இடத்திலும் சரியான மரம் கிடைக்கவில்லை.
எனவே காக்காச்சி மலை என்று அழைக்கப்படும் மேற்குத் தொடர்ச்சி மலையான பொதிகை மலை உச்சிக்கு சென்றனர். அங்கு அற்புதமான நல்ல உயரமான சந்தனமரம் ஒன்று இருந்தது.
''ஆகா இந்த மரம் தான் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு ஏற்ற கொடிமரம'' என்றார்.ஆறுமுக ஆசாரி. அவர், சின்னதம்பி மரக்காயரிடம் இம்மரத்தை பற்றி கேட்கிறார். ரம்மியமான வாசனையுடன் இருக்கும் அந்த அற்புத மரத்தை குறித்து மை போட்டு பார்க்கிறார் மாந்திரிகரான சின்ன தம்பி மரக்காயர்.....
அப்போது அந்த மரத்தில் அடி மரத்தில் சுடலைமாடனும், மேல் முனையில் சங்கடகாரனும் உள்பட 21 தேவதைகள் இருந்தது தெரிய வந்தது.....அந்த 21 தேவதைகளையும் விரட்டி விட்டு தான் மரத்தினை வெட்ட வேண்டும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பித்தனர்.
முதலில் மந்திரம் மூலம் தேவதைகளை விரட்ட மை போட்டார் மரக்காயர். மற்றவர்களை கோடாரி கொண்டு, வெட்ட சொன்னார். கோடாரி மூலம் வெட்டப்பட்ட மரம் கோடாரியை திருப்பி விட்டது. உடனே அந்த கோடாரி, மரத்தை வெட்டிய 20 பேர்களின் கழுத்தில் பட்டது. அலறியபடி 20 பேரும் ரத்த வெள்ளத்தில் சரிந்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மரணம் அடைந்தனர்.
இதனால் ஆறுமுக ஆசாரி அதிர்ச்சி அடைந்தார். "ஐயோ" நான் என்ன செய்வேன்? என்று மந்திரவாதி சின்னதம்பி மரக்காயரிடம் சென்ற போது, அவரும் ரத்தம் கக்கி இறந்து இருந்தார்.
அடுத்த வினாடி ஆறுமுக ஆசாரிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
இதற்கிடையில் அந்த மரத்தில் இருந்த 21 மாட தேவதைகளும் மரத்தை விட்டு கீழே இறங்கி ஆறுமுக ஆசாரியை விரட்டியது. உயிருக்கு பயந்த அவர் காக்காச்சி மலையை விட்டு ஓடினார். அடுத்து பொதிகை மலைக்கு வந்தார்.
அந்த இடத்தை விட்டு கீழே இறங்கி ஓட ஆரம்பித்தார். இறுதியில் தாமிரபரணி ஆற்றங்கரையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் வந்து அய்யனார் காலை பற்றிக் கொண்டு காப்பாற்ற கூறி கத்தினார்._
சொரிமுத்து அய்யனார் 21 மாட தேவதைகளையும் அழைத்து சமாதானம் செய்தார்.
‘முருகன்.. எனது சகோதரன் தான்.. அவன் கோவிலுக்கு தானே கொடிமரம் செல்கிறது. பிறகு ஏன் தடுக்கிறீர்கள்’ என்று கூறினார்._
அதற்கு சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் நாங்கள் வசிப்பதற்கு இது போன்ற வேறு சந்தன கொடிமரம் இல்லை என்றும்,திருச்செந்தூர் ஆலயத்தில் இந்த கொடிமரம பிரதிஷ்டை செய்யபட்ட பின்பு தங்களை தொடந்து இந்த கொடி மரத்திலேயே வாசம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்றும்,தங்களுக்கு முதல் பூஜை நடத்திய பின்பே மூலவருக்கு பூஜைகள் நடத்த வேண்டும் என்று சொரி முத்தையனாரிடம் வேண்டினர்.
சொரி முத்தையனாரும் அவர்களது வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு, சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை அவர்களே வெட்டி, அதை திருச்செந்தூரில் கொண்டு சேர்த்து ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும், அவர்களை அந்த கொடி மரத்திலேயே தொடந்து வாசம் செய்து கொள்ளும்படியும் உத்தரவிட்டார்.
அதன்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் அந்த சந்தன மரத்தை வெட்டினார்கள்._
பின் 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டினர். அந்த சந்தன மரத்தை அப்படியே தூக்கி வைத்து திருச்செந்தூர் நோக்கி கொண்டு சென்றார்கள்._
அம்மரமே தற்போது திருச்செந்தூரில் கொடி மரமாக வைக்கப்பட்டுள்ளது._
சொரி முத்தையனார் உத்திரவின்படி சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளும் இந்த கொடிமரத்தில. வாசம் செய்து வருகின்றனர்._
இப்போதும் திருச்செந்தூர் ஆலய்த்தில் மாசி திருவிழா நடைபெறும் போது ஆடு வெட்டி சுடலை மாடனுக்கும், சங்கட கரகாரனுக்கும் படைத்து விட்டுத்தான் தேர் ஒட வேண்டிய வேலைகளை செய்வார்கள்._
மாசி திருவிழா தேர் ஓடும் போது அதிலேயும் சங்கட கரகாரன் தேர் மேல் ஏறி "சரி போகலாம்" என்று கூறியவுடனேதான் தேர் நகரும்.
மேற்கண்ட தகவலை *"கொடி மரக்காவியம்" என்றும் வில்லுப்பாட்டு கதையில் இருந்து தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் அருகில் உள்ள கிளாக்குளம் கிராமத்து வில்லுப்பாட்டு கலைஞர் சண்முக சுந்தரம் கூறியுள்ளார்.
இந்த கதை நெஞ்சை பதற வைப்பது போல் உள்ளது அல்லவா?
திருச்செந்தூர் ஆலயத்தில் உள்ள கொடிமரம் பிரமாண்டமானது.
அதை 21 மனிதர்கள் கொண்டு வருவது என்பது இயலாதது.
ஆனால் சுடலை மாடன், சங்கட காரன் உள்பட 21 மாட தேவதைகளும் சேர்ந்து அந்த மரத்தினை வெட்டி, 21 மாட்டு வண்டியையும் ஒன்றாக கட்டி அதில் தூக்கி வைத்து வந்த சம்பவம் ஒரு மலைப்பான விசயமாக இருப்பதாலும் இதை நம்பியே தீர வேண்டும்.
ஏன் என்றால் இப்போது போல் முன்பு போக்குவரத்து வசதி எல்லாம் கிடையாது.
எனவே 21 மாட்டு வண்டி நேராக திருச்செந்தூர் நோக்கி வரும் போது சாலையில் தடை எதுவும் இருந்திருக்காது._
சொரிமுத்து அய்யனாரின் ஆசியுடன் சுடலை மாடன், சங்கட காரன் உள்பட 21 மாட தேவதைகளும் இன்றளவும் வாசம் செய்து வரும் பொதிகை மலையில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனமரமே தற்போது திருச்செந்தூரில் கொடிமரமாக இருப்பதால் இந்த கொடி மரத்திற்கு முதலில் பூஜைகள் நடைபெற்ற பின்னரே மூலவருக்கான நடை திறக்கபட்டு நிர்மால்யம், அபிஷேகம் மற்ற பூஜை எல்லாம் நடைபெற்று வருகிறது..
தினமும் காலை ஐந்து மணிக்கு கொடிமரத்துக்கு பூஜைகள் நடைபெறும் போது, இரண்டு பேர் மந்திரத்தை பகிர்ந்து சொல்ல, அவர்களுடன் சேர்ந்து மற்றவர்கள் ஒவ்வொரு மந்திரத்தின் முடிவிலும் நமஸ்காரம் செய்வார்கள்.
இதற்கான அனுமதி இலவசம்.....
அதிகாலையில ் நடைபெறும் இந்த கொடிமர பூஜையில் கலந்து கொண்டால் சுடலைமாடன், சங்கடகாரன் உள்பட 21 மாட தேவதைகளின் ஆசிகள் கிடைக்கப்பெற்று உங்கள் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படுவது என்பது உறுதி!_
இந்த கொடிமர பூஜையில் நீங்கள் கலந்துகொண்டால் உங்கள் வாழ்க்கையில் நிச்சயமாக நல்ல திருப்பம் உண்டாகும்._
நம்பிக்கையுடன் இந்த கொடிமர பூஜைக்கு போய் தான் பாருங்களேன்..!_
ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.......
.
பெற்றதாய்தனை மகமறந்தாலும்
பிள்ளையைப்பெறும் தாய் மறந்தாலும்
உற்றதேகத்தை உயிர் மறந்தாலும்
உயிரை மேவிய உடல் மறந்தாலும்
கற்ற நெஞ்சகம் கலை மறந்தாலும்
கண்கள் நின்றிமைப்பது
மறந்தாலும்
நற்றவத்தவர் உள்ளிருந்தோங்கும்
நம் குருவினை நான் மறவேன்

குருவின் குருவாம் பன்வேல் குடியிருக்கும்
பாலகனை நான் மறவேன்

சுவாமியே சரணம் ஐயப்பா!!