PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

சுவாதி நட்சத்திரக்காரர்கள் செல்ல வேண்டிய திருத்தலம்…!

 






சுவாதி நட்சத்திரக்காரர்கள் வாழ்க்கையில் சந்திக்கும் துன்பங்களையும் தோஷங்களையும் நீக்கிட செல்ல வேண்டிய தலம் சென்னை பூந்தமல்லியில் இருந்து 8 கி.மீட்டர் சென்றால் சித்துக்காடு என்னும் ஊரில் இருக்கும் அருள்மிகு தாத்திரீஸ்வரர் கோவில்.
சித்தர்கள் வாழ்ந்த காடு. இன்னும் அரூபமாகவே இருக்கிறது. சித்தர்கள் வாழ்ந்த இடம் இது. குறிப்பாக படுக்கை ஜடாமுடி சித்தர், பிராணதீபிகா சித்தர் இங்கு தவம் செய்யும் போது இக்காட்டில் இருந்த நெல்லிமரத்தின் கீழ் சிவலிங் கத்தை உருவாக்கி நெல்லியப்பர் என்று அழைத்தார்கள். தாத்திரீஸ்வரர் என்றால் சமஸ்கிருதத்தில் நெல்லி என்று பெயர். சித்தர்கள் தவம் இருந்ததன் காரண மாகவும், காடு போன்று இருந்ததாலும் இது சித்தர்காடு என்றழைக்கப்பட்டது. நாளடைவில் இது சித்துக்காடு என்று மருவிவிட்டது.
இங்கு மூலவர் தாத்திரீஸ்வரர். தாயார் பூங்குழலி. இங்கு சிவனுக்கு அருகில் உள்ள நந்திசாந்தமாக மூக்கணாங்கயிறு இல்லாமல் காட்சியளிக்கிறது. பிரகாரத் தில் ஆதிசங்கரர், மகாலட்சுமி, சரஸ்வதி சன்னிதிகள் உண்டு. கோயில்களில் இருக்கும் தூண்களில் சித்தர்களின் சிற்பங்கள் உண்டு. ஒரு தூணில் படுக்கை ஜடாமுடி சித்தரின் சிற்பமும், நந்தி மண்டப தூணில் பிராண தீபிகா சித்தரின் சிற்பமும் உள்ளன. பிராண சித்தர் பக்தர்களுக்கு உயிர் காக்கும் காப்பாளனாக இருந்து அருள்புரிகிறார்.

No comments:

Post a Comment