ஞாயிறு கோயிலுக்குள் நுழைந்ததுமே உங்கள் மனசுக்குள் பூப்பூக்கும். ஆலயத்திற்கு வந்திருக்கிறோமா அல்லது ஏதாவது சோலைக்குள் தவறி நுழைந்து விட்டோமா என்ற ஐயம் எழும். ஆம். எங்கு திரும்பினாலும் பசுமை பசுமை.
அருகம்புல் தோட்டம், மலர்ச்செடிகளின் கூட்டம் என்று இயற்கையே இறைவனாகக் காட்சியளிக்கும் உணர்வுஎழும்.
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலான தொன்மை
மிக்க ஞாயிறு ஆலயத்தின் சிறப்பை ஒரு
ஞாயிற்றுக்கிழமை முழுக்கச் சொல்லிக்
கொண்டே போகலாம்.சுந்தரமூர்த்தி
நாயனாரின் துணைவியான தெய்வமகள்
சங்கிலி நாச்சியார் அவதரித்த பூமி. சாகுந்தல
காவியம் போற்றும் கன்வமகரிஷி முக்தி பெற்ற
புண்ணிய இடம். ஆதிசங்கரரால்
சொர்ணாம்பிகை ஸ்தாபிக்கப்பட்ட கோயில்
என்று பட்டியல் தொடர்ந்து கொண்டே
போகும்.கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கும் இந்தக் கோவிலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என்று பார்ப்போம். இந்தக் கோவில் எழுந்ததே ஒரு மன்னனின் கண்கள் குருடானதால்தான்! பலநூறு
ஆண்டுகளுக்கு முன்னால் சிவ பக்தனான சோழமன்னன் ஒருவன் ஆந்திரத்தில் உள்ள
நெல்லூர் வரை, படையெடுத்துச் சென்று
வெற்றி வாகை சூடிவந்தான். போரில் இழந்த கண்ணை இந்த இறைவனை வேண்டி திரும்பப் பெற்றதாக வரலாறு.
புஷ்பரதீஸ்வரர் கோவில் ஒரு சிவ ஸ்தலமாகும். மூலவர் புஷ்பரதீஸ்வரர் (ஞாயிறு) ஈஸ்வரன் கோவில் பழமையான சிவன் கோவிலில் ஒன்றாகும். தொண்டை மண்டலத்தில் உள்ள நவகிரஹ ஸ்தலங்களில் சூரியனுக்குரிய ஸ்தலம் இந்த புஷ்பரதீஸ்வரர் ஆலயமாகும்.
No comments:
Post a Comment