கடலுக்குள் திருக்கோயிலா? எப்படி எதை வைத்துக் கட்டியுள்ளனர்?

 







பாவ்நகர் (கோலியாக் என்னும் கடற்கரை கிராமத்திலிருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அரபிக்கடலின் நடுமத்தியில் அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலுக்குச் சென்று எப்படி சுவாமியை தரிசிப்பது? கடற்கரையிலிருந்து 1 கி.மீ. கடலுக்குள் நடந்தால் கடவுளை தரிசித்த மெய்சிலிர்க்கும் அனுபவத்தைப் பெறலாம்.
எப்படி நாம் கடலுக்குள் போவது? என கூட்டத்திற்கு தலைமை தாங்கி நிற்கும் ‘இந்தக் கடல் அலைகள் உள்வாங்கி நமக்கு வழிவிடுவதற்காக காத்திருக்கின்றோம். தினமும் அதற்குரிய திதி வரும்பொழுது கடல் கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கி கோயிலுக்கு அப்பால் சென்று காத்திருக்கும். காலை 8 மணி அளவில் கடலரசன் நமக்கு வழிவிடுவான். மறுபடி சமுத்திரராஜன் 6 மணி அளவில் கோயிலை மூழ்கடித்து கரை வரை வந்து விடுவான். அதற்குள் நாம் கடலுக்குள் நடந்தே சென்று மகாதேவரை வழிபட்டு விட்டு வந்துவிட வேண்டும். தினமும் இத்திருக்கோயிலில் பூஜையும் நடக்கின்றது.’’
எங்கிருக்கின்றது என்று நாம் கேட்க கடலுக்குள் தூரத்தில் பறக்கும் இரண்டு கொடிகளைக் காட்டி ‘‘அங்குதான் கோயில் . அவைகளே கோயிலின் கொடி கம்பங்கள்’’ . இத்திருக்கோயிலின் தல வரலாற்றினை அறிந்து கொள்வோம்.

கி.மு. 900த்தில் மகாபாரதத்தில் பாரத போர் நடந்த காலகட்டம். பாண்டவர்கள் போரில் கௌரவர்கள் 100 பேர்களையும் கொன்று விடுகின்றனர். இதனால் பாண்டவர்களை பிரம்மஹஸ்தி தோஷம் பீடித்துக் கொள்கின்றது. இந்த தோஷம் தொலைய புதிதாக சிவலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்வித்து தவமிருந்து வழிபட்டு சிவனருளால் நீங்கப் பெறுவது வழக்கமாக நிலவி வந்தது.
அதன்படிக்கு உறவினர்களைக் கொன்ற தங்களது களங்கம் நீங்க தாங்கள் எங்கிருந்து தவம் செய்து சிவபெருமானை வழிபடுவது? என பாண்டவர்கள், கிருஷ்ண பெருமானிடம் வேண்டிக் கேட்டுக் கொண்டனர். கிருஷ்ண பரமாத்மா, அவர்களிடம் ஒரு கருப்பு கொடியினையும், ஒரு கருப்பு பசுவினையும் கொடுத்து, எந்த இடத்தில் பசுவும், கொடியும் வெள்ளை நிறமாக மாறுகின்றதோ அந்த இடத்தில் அவர்கள் சிவனை நோக்கி தவமிருக்க வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார். பல காலம் கொடியை ஏந்தியபடி, பாண்டவர்கள் பசுவின் பின்னாலேயே சென்றனர். கோலியாக் கடற்கரை வந்து சேர்ந்த உடன் கொடியும், பசுவும் வெள்ளை நிறத்திற்கு மாறின. மகாதேவர் அழைப்பிற்கு இணங்கி அவர்கள் இந்தத் திருவிடத்திற்கு வருவதற்கு வசதியாக ஆண்டவன் கட்டளையை ஏற்று கடல் உள்வாங்கி வழிவிட, தீவு திடல் போன்ற இந்த மணல் மேட்டிற்கு வந்தடைந்த ஐந்து பேரும் ஆழ்ந்த தவத்தில் ஆழ்ந்து போயினர்.
அவர்களின் தவக் காலம் முற்றிய வேளையில், சிவ வழிபாடு செய்து அவர்களது களங்கத்தைப் போக்கிக் கொள்வதற்கு தோதாக, அவர்கள் ஐவர் முன்னிலையிலும் சிவபெருமான் ஐந்து சிவலிங்கங்களாகப் பிரசன்னம் ஆனார். இறைவன் சுயம்பாக எழுந்தருளியதால் இன்புற்ற ஐவரும், நந்தி தேவர்களையும் பிரதிஷ்டை செய்வித்து, தமிழ் வருடமாகிய பவ வருடத்தில் ஆகஸ்டு மாதத்தில் கி.மு. 900வாக்கில் அமாவாசை இரவன்று திருக்கோயிலை எழுப்பி வேத ஆகம முறைப்படி வழிபட்டு வரலாயினர். இறைவனுக்கு அபிஷேகிக்க அங்கே ஓர் சுனையைத் தோண்டினார்கள். அந்த நீர் உப்பு கரிக்காமல் இனிப்பாக இருக்கும் பேரதிசியம் நிலவி வருகின்றது. அவர்களது மேலான வழிபாட்டினை ஏற்றுக் கொண்ட சிவபெருமான், அவர்களது பிரம்மஹஸ்தி தோஷம் என்னும் களங்கத்தைப் போக்கி அருளியதால், அருள்மிகு நிஷ்களங்க மகாதேவர் என்னும் திருநாமத்தை இத்திருவிடத்தில் ஏற்றுக் கொண்டு இங்கு வந்து வழிபடுபவர்களின் பாவம், சோகம், களங்கம் ஆகியவற்றை நீக்கி அருளுகின்றார்.
தலபுராணத்தைக் கேட்டவண்ணம் இருந்த நம்மை, ‘‘வாருங்கள்! சிவபக்தர்களே! நம்மை நிஷ்களங்க மகாதேவர் அழைக்கின்றார்.கடல் அலை கொஞ்சம் கொஞ்சமாக உள்வாங்கத் தொடங்குகின்றது. கடலுக்குள் நடக்கத் தொடங்குகின்றோம்.
நடையா அது! நீர் மேல் நடப்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தணல் மேல் நடப்பதைப் பார்த்திருப்போம். 300 அடி ஆழக் கடலுக்குள் நாம் நடக்கின்றோம்.
நன்றி
இணையதளம்

No comments:

Post a Comment