மன்னன் மலையமான் வம்சத்தினர் சங்க காலத்தில் திருக்கோயிலூர் மற்றும் அதனை ஒட்டிய நிலப்பரப்பை ஆண்டு வந்தனர்.
இக்காலக்கட்டத்தில் வாழ்ந்த சங்கப் புலவர் கபிலர் கடை ஏழு வள்ளல்களில் ஒருவரான பாரியின் நெருங்கிய நண்பராவார். முடியுடை மூவேந்தர்கள் பாரியையும் அவன் ஆண்ட பரம்பு நாட்டையும் முற்றுகையிட்டு அழித்துவிட பாரி வள்ளல் தன் இரு மகள்கைளையும் அங்கவை , சங்கவை..........
(சிவாஜி படத்தில வாங்க பழகிக்கலாம்தான் உடனே ஞாபகம் வரும் ..............)
பாரிவேளின் மகள்கள் தான் அங்கவை, சங்கவை. அங்கவை, சங்கவை இருவரும் அன்பும், அழகும், பண்பும் ஒருங்கே அமையப்பெற்றிருந்தனர்.
கபிலரின் பொறுப்பில் ஒப்படைத்துவிட்டு இறந்துவிட்டான்.
அதன் பிறகு கபிலர் தனது நண்பரின் மகள்களைத் திருக்கோயிலூர் மலையமான் திருமுடிகாரியிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் நீத்த இடம்தான் திருக்கோயிலூர் பெண்ணையாற்றின் நடுவே உள்ள சிறு குன்றாகும். இக்குன்றே கபிலர் குன்று என இப்பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
தனித்த பாறையும், அதன் மேல் சிறு கோவில் அமைப்பில் கட்டப்பட்ட கட்டிடமும் கொண்டது கபிலர் குன்று. குறுகிய படிக்கட்டுகள் வழியாக இக்குன்றை அடையலாம்.கோயிலின் உள்ளே சிவலிங்கம் உள்ளது. செங்கல்களால் கட்டப்பட்ட கட்டிடத்தின் பழைமை மாறாமல் இன்று மெருகூட்டப்பட்டுள்ளது. இக் கட்டிடம் 16 ம் நூற்றாண்டு கட்டிட பாணியைச் சேர்ந்தது என தொல்லியில் அறிஞர்கள் குறிப்பிடுகின்றனர். கோயிலின் மேல்புறம் நான்கு பக்க மேல்பகுதிகளிலும் சுவாமி சிற்பங்கள் தெரிகின்றன. அச்சிலையின் மேற்பகுதியில் இரண்டு ஆண் உருவங்களும், இரண்டு பெண் உருவங்களும் தெரிகின்றன