#உத்திரமேரூர் சுந்தரவரதராஜ பெருமாள் கோயிலில்
பெருமாள் நின்றும், இருந்தும், கிடந்துமாக மூன்று நிலைகளில் உள்ள கோயில்களில் சுந்தர வரதபெருமாள் கோயிலும் ஒன்று. கோயிலின் கட்டுமானம் தனிச்சிறப்பானது. வெளியில் இருந்து பார்ப்போருக்கு 5 நிலை கோபுரம்தான் தெரியும். உள்ளே நுழைந்தால் வலப்பக்கம் பாழடைந்த மண்டபம் தென்படும். நேராக சென்று படிக்கட்டுகளில் ஏறி, கருடாழ்வார் அனுமதி பெற்று உள்ளே நுழைந்தால் நின்றகோலத்தில் நான்கு கரங்களுடன் கூடிய பெருமானைக் காணலாம். ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிய திருக்கோலமது.
வரதர் என்றாலே வரப்பிரசாதிதான். இந்த சுந்தர வரதரும் பேருக்கேற்றார்போல, வரம் தரும் வரதராகவே இருக்கிறார். இந்த சன்னதியின் இருபுறமுமாக வளையும் படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால் அமர்ந்த கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தருகிறார்.
அடுத்த படிக்கட்டுகளில் ஏறிச்சென்றால், ஆதிசேஷன் மீது கிடந்த திருக்கோலத்தில் அனந்த பத்மநாபராக காட்சி தருகிறார். கோயிலின் சுற்றுப்பிரகாரங்களில் தெற்கு நோக்கி அச்சுத வரதர், மேற்கு நோக்கி அனிருத்த வரதர், வடக்கு நோக்கி கல்யாண வரதர் என பார்க்க பார்க்க திகட்டாத திருக்கோலங்களில் அருள்பாலிக்கிறார் பெருமாள்.
மடி மீது தேவியை அமர வைத்துக்கொண்டு இருக்கும் வராக பெருமாளையும், ஸ்ரீதேவி, பூதேவியருடன் வைகுண்ட பெருமாளையும் இங்கு தனித்தனி சன்னதிகளில் தரிசிக்கலாம்.
No comments:
Post a Comment