Swamy saranam. guruve saranam. Pooja today 28/3/22

 


புக்கத்துறை திருத்தலத்தில் அருள் புரியும் ஸ்ரீ பெருந்தேவி தாயார் சமேத ஸ்ரீ புண்டரிகவரதராஜ பெருமாள் திருக்கோயிலாகும். காஞ்சி தலத்தில் ப்ரம்ம தேவர் நடத்திய யாகத்தில் அக்னி ஜிவாலையில் காட்சி கொடுத்து அவிர்பாகம் ஏற்று அருளினார்.
கருவறையில் கிழக்கு நோக்கி, ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக காட்சி கொடுக்கிறார் ஸ்ரீ புண்டரீக வரதராஜர். ஸ்ரீ பெருந்தேவித்தாயார் தனி சன்னதியில் கோயில் கொண்டு அருள் புரிகிறார். நவராத்திரி விழாவின்போது தாயாரை வழிபடுவதால், அஷ்ட ஐஸ்வர்யங்களும் சித்திக்கும் என்பது ஆன்றோர் வாக்காகும். ஸ்ரீ ஆண்டாள் இங்கு தனி சன்னதியில் அருள் பாலிக்கிறார்.
ஸ்ரீ ஆண்டாள் சன்னதியில் உள்ள தூணில் புடைப்பு சிற்பமாக விளங்கும் ஆஞ்சநேயர் மிகவும் வரப்பிரசாதி.


No comments:

Post a Comment