Swamy saranam....guruve saranam...pooja at ankleswar 31/3/22

 


*"குடிமல்லம்" - 2300 ஆண்டுகள் பழமையான "லிங்க" கோயில்.*
எத்தனையோ முறை திருப்பதி சென்றுள்ளோம் . இந்த முறை சென்றால் தயவுசெய்து இக்கோவில் தரிசனத்தை மட்டும் தவறவிடாதீர்கள் உலகப் பழம்பெறும் சிவலிங்கத்தை தரிசனம் செய்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். உங்கள் கர்மவினை முற்றிலும் நீங்கக்கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். இதை தரிசனம் செய்த பல மனிதர்கள் வாழ்க்கையில் அத்தனை ஆனந்த திருப்பங்களும் வாழ்வில் பிறந்த பயனையும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
திருப்பதியில் இருந்து 15 கிமீ தொலைவில் உள்ள "குடிமல்லம்" எனும் கிராமத்தில் உள்ள "பரசு ராமேஸ்வர" ஆலயத்தில் கிமு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த லிங்க வடிவம் காணப்படுகிறது. இக்கோயிலில் உள்ள செங்கல் கிபி ஒன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக அறியப்பட்டுள்ளது. பல்லவர், பாணர், சோழர் கால கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இவற்றில் பழமையானது நந்திவர்மன் காலத்து கல்வெட்டு.
லிங்கம் 5 அடி உயரம். தடிமன் 1 அடி. லிங்கத்தின் தண்டு பகுதி 4 அடி. நுனியில் உள்ள மொட்டு 1 அடி. தண்டுப் பகுதியில் ஓர் வேடன் உருவம் வலது கையில் ஆட்டை தொங்கவிட்டும், மறு கையில் சிறு பாத்திரமும், தோளில் வேட்டை கோடரி (பரசு) யும் வைத்துள்ளவாறு செதுக்கப்பட்டுள்ளது. மார்பில் பூணூல் இல்லை. ஜடாமுடி தரித்துள்ளது. லிங்கத்தின் கீழ் யோனி பீடம் (ஆவுடை) காணப்படவில்லை.
எனவே அக்காலத்தில் சிந்து சமவெளி நாகரீகத்தில் இருந்தது போல தமிழ்நாட்டிலும் (இந்தியாவின் பிற பகுதிகளிலும்) " இக்கோவில் கலை காணப்படுகிறது.
பழமையான சிவலிங்கம்.
இந்த குடிமல்லம் சிவன் கோயில் ASI (Archaeological Survey of India) -ன் கட்டுப்பாட்டில் உள்ளது.
ஆன்மீகத்தில் முன்னேற விரும்பும் ஒவ்வொரு மனிதனும் நிச்சயம் காண வேண்டிய சிவ ஸ்தலம்.
உண்மை மிகவும் சாதாரணமாக இருக்கும் என்பதற்கு இந்த ஊர் சிவலிங்கம் ஒரு உதாரணம். மக்கள் யாரும் இந்த ஊருக்கு வருவதில்லை. நன்கு விஷயம் அறிந்தவர்கள் மட்டுமே இந்த ஊர் கோயிலில் உள்ள சிவலிங்கத்தை காண வருகின்றனர். உண்மை ஆன்மீகத்திற்கான திறவுகோல் இந்த சிவ லிங்கம். உண்மையில் தேடுபவர்களுக்கு மட்டுமே உண்மைப் பொருள் விளங்கும். ஆன்மீக முன்னேற்றம் பெற விரும்பும் ஒவ்வொருவரும் வாழ்கையில் ஒரு முறையாவது அந்த சிவலிங்கத்தை நேரில் சென்று தரிசனம் செய்ய தவறாதீர்கள்.

*ஓம் சர்வம் சிவார்ப்பணம்.🙏*

No comments:

Post a Comment