SWAMIYE SARANAM IYYAPPA.....GURUVE SARANAM......

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED & DIVINE " AADI VELLI " ( FRIDAY ) WITH THE BLESSINGS AND GUIDANCE OF " MAA DURGA " .. MAY SHE EMPOWER YOU WITH HER NINE SWAROOPA OF .. NAME .. FAME .. HEALTH .. WEALTH .. HAPPINESS .. HUMANITY .. EDUCATION .. BAKTHI .. & SHAKTHI .. 
" JAI MATA DI " .. 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்களும் இரண்டாம் ஆடிவெள்ளி நல்வாழ்த்துகளும் உரித்தாகுக .. 
தங்களனைவரும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் பெற்று .. வினையற்ற செல்வம் பல்கிப் பெருகிடவும் அஷ்டலக்ஷ்மிகளைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 

மனிதனின் வாழ்க்கைத் தேவை அருளோடு வரும் பொருள்வளம் கொடுப்பவளான திருமகள் அஷ்டலக்ஷ்மிகளாக வணங்கப்படுகிறாள் .. 

சைவசமயமும் .. சாக்த சமயமும் அன்னைக்கு எந்தளவு முக்கியத்துவம் கொடுத்து சிறப்பிக்கிறதோ அதே அளவு ஸ்ரீவைஷ்ணவமும் தாயாருக்கு சிறப்பிடம் கொடுக்கிறது 
சைவத்தில் நவசக்தியாக வழிபடப்படும் தேவி .. வைஷ்ணவத்தில் ஆதிலக்ஷ்மி .. தனலக்ஷ்மி .. தானியலக்ஷ்மி .. சந்தானலக்ஷ்மி .. மஹாலக்ஷ்மி .. கஜலக்ஷ்மி .. விஜயலக்ஷ்மி .. வீரலக்ஷ்மி .. என்ற அஷ்டலக்ஷ்மிகளாக போற்றி வணங்கப்படுகிறாள் .. 

அன்னை ஒன்பது வடிவமாக அன்பர்களால் பார்க்கப்படுகிறாள் .. அன்னையின் இந்த ஒன்பது வடிவங்களுக்கும் தனித்தனி தத்துவங்கள் உள்ளன .. 

1 - முதலாவது உருவம் - “ மனோன்மணியாகும் “ இதன் தத்துவம் பக்குவப்பட்ட ஜீவாத்மாக்களின் பாவங்களை கழுவி .. களைந்து பரமாத்மாவோடு இணைப்பதாகும் .. 

2 - இரண்டாவதாக சொல்லப்படும் உருவம் 
“ சர்வபூதாமணி ” என்ற உருவத்தோற்றம் உயிர்களோடு ஒன்றி .. கலந்து .. அதன் பாவங்களை விலக்குவதாகும் .. 

3 - மூன்றாவது - பூமியில் விஷக்கிருமிகள் பெருகாமல் சூரியசக்தியால் நல்லவைகளை வளரச்செய்யும் 
“ பலபிரதமணி “ உருவமாகும் ..

4 - நான்காவது - சந்திரனில் இருந்து கிடைக்கும் காந்தசக்தியைக் கொண்டு பயிர் .. பச்சைகளை ..உயிர் இனங்களை தழைத்தோங்க செய்யும் “ பலவிகரணி “ வடிவமாகும் ..

5 - ஐந்தாவதாக - வானத்தில் உள்ள எல்லா பொருட்களையும் ஏற்று நின்று அவைகள் தன்னில் கலக்க செய்யும் “ கலவிசரணி “ உருவமாகும் ..
6 - ஆறாவதாக காற்றில் பிரணவமாய் நிற்கும் “ காளி “ 
7 - ஏழாவதாக நெருப்பில் வெப்பமாய் நின்று உயிர்வளரச் செய்யும் “ ரௌத்ரி “ 
8 - எட்டாவதாக - தண்ணீரில் குளிர்ச்சியையும் ஜீவசக்தியையும் நிலைபெறச் செய்யும் “ சேஸ்றா “ 
9 - ஒன்பதாவதாக - ஐம்பூதங்களையும் ஆட்சிசெய்யும் 
“ வாமை “ .. 

இந்த நவசக்தியரைக்குறிக்கும் வகையில்தான் பெண் குழந்தைகளுக்கு ஒன்பது புனிதபொருட்களான வெற்றிலை .. பாக்கு .. மஞ்சள் .. குங்குமம் .. அட்சதை .. சீப்பு .. தோடு .. கண்ணாடி வளையல்கள் .. ரவிக்கை ஆகிய
9 பொருட்களையும் தட்சிணையுடன் வைத்து கொடுத்து 
அண்ணமிடுகிறார்கள் .. 

ஆடிவெள்ளி நாளினிதே ! அங்கமனத்தூய்மையுடன் அன்னையைப் போற்றுவோம் ! அன்னையின் அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED AND A DIVINE " KRITHIKAI " AND MAY LORD MURUGA BLESS YOU AND GUIDES YOU AND SHOWER YOU WITH EVERY SUCCESS IN YOUR CAREER WITH GOOD HEALTH AND HAPPINESS TOO .. 
" OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நன்னாளில் 
“ ஆடிக்கிருத்திகையும் “ கூடிவருவது அதிவிசேஷமாகும் 
ஆலயம் சென்று கந்தப்பெருமானை தரிசனம் செய்து எல்லா வளமும் .. நலங்களும் பெற்று எடுக்கும் முயற்சிகள் யாவும் வெற்றிபெற கார்த்திகேயனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

” கிருத்திகை “ அல்லது ” கார்த்திகை ” என்ற நட்சத்திரம் முருகப்பெருமானுக்கு உகந்த நட்சத்திரமாகும் .. ஆடிமாதத்தில் வரும் கிருத்திகை நட்சத்திரம் சிறப்பானதாகும் .. உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் தங்கள் பிரார்த்தனைகளையும் .. நேர்த்திக்கடன்களையும் செலுத்தும் முக்கிய நாளாக இந்நாளை கொண்டாடுகிறார்கள் .. 

எல்லா முருகன் ஆலயங்களிலும் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் .. அபிஷேக .. அலங்காரங்கள் .. அர்ச்சனை .. வீதி உலா என விமரிசையாக நடக்கிறது .. 

ஆடிகிருத்திகையாகிய இன்று முருகனை வணங்கினால் வெற்றிமேல் வெற்றிகிட்டும் என்று ராமாயணத்திலேயே 
கூறப்பட்டுள்ளது . சீதையைத்தேடி ஆஞ்சநேயர் இலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டு திரும்பிவரும் வழியில் பேச்சுத்திறனுக்கு அதிபதியான முருகனை வணங்கியதால் “ சொல்லின் செல்வன் “ என்று ஸ்ரீராமனால் அழைக்கப்பட்டார் .. 

ஆடிக்கிருத்திகையில் முருகனாலயம் சென்று வாசனைமலர்களைத்தந்து வணங்கினால் எல்லா நலமும் பெற்று .. பேச்சுத்திறனும் சிறப்பாக அமையும் .. காவடி எடுத்தால் நம்முடைய கஷ்டத்தை அந்த முருகப்பெருமானே சுமப்பார் என்பது ஐதீகம் .. 

கங்கையாகிய ஆறு தாங்கிய “ ஆறு அக்கினி பொறிகள் “
மூலம் ஆறுமுகங்களோடு பிறந்த முருகன் ஆறுபெண்களால் வளர்க்கப்பட்டார் .. குழந்தையாய் வளர்ந்ததும் திருவிளையாடல்கள் புரிந்ததும்
” ஆறுநாட்களே ” என்று சொல்லப்படுகிறது .. இப்படி அனைத்திலும் “ ஆறு “ என்னும் எண் முக்கியமாய் அமையப்பெற்ற முருகனுக்கான நாமமும் “ சரவணபவ “ 
என்பதும் ஆறெழுத்தே ஆகும் .. 

சூரனைவதம் செய்யவேண்டி ஆறுமுகன் தோன்றியதும் .. அவரை கார்த்திகைப் பெண்கள் போற்றி வளர்த்தனர் .. குமாரன் வளர்ந்ததும் அவரை சேர்த்து ஒன்றாக்க உமையுடன் அங்கே எழுந்தருளிய சிவபிரான் கார்த்திகைப்
பெண்களைப் போற்றி வாழ்த்தி இனி கந்தன் இந்தப் பெண்களின் பெயரால் “ கார்த்திகேயன் “ எனவும் அழைக்கப்படுவான் என்று வாழ்த்தியருளினார் .. கார்த்திகை விரதமே கார்த்திகைப் பெண்களை நினைத்து நன்றிசெலுத்தும் விதமாக ஏற்படுத்தப்பட்ட ஒன்று எனக்கூறுவார்கள் .. 

ஆரவாரம் அலைமோதும் நம்வாழ்வில் அடிக்கடி முருகப்பெருமானை தரிசிக்க இயலாவிடினும் .. ஆண்டுக்கொருமுறையேனும் சுடராகப் பொலியும் கிருத்திகை நன்னாளிலாவது முருகனின் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து .. அவன் எழுந்தருளியுள்ள ஆலயங்களுக்குச் சென்று அகம் உருகி வழிபட்டு அவன் திருப்பாதங்களில் சரணடைவோமாக !

“ ஓம் சரவணபவாய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE DIVINE LORD VISHNU BLESS YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. AND HAPPINESS .. MAY ALL YOUR WISHES COME TRUE .. " OM NAMO NAARAAYANAAYA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று ஸ்ரீமன் நாராயணனுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

மும்மூர்த்திகளுள் ஒருவர் மஹாவிஷ்ணு .. இவர் திருமால் .. பெருமாள் .. மாயன் .. நாராயணன் என்றெல்லாம் அழைக்கப்படுகிறார் .. விஷ்ணு என்றால் எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள் .. அதனால்தான் கடவுள் எங்கும் உள்ளார் என்று கூறுகின்றோம் .. 

பரம்பொருளான இறைவனை அடைய அவனிடம் பக்திசெலுத்த பலவகைகள் உண்டு .. அவற்றுள் முக்கியமான வழி இறைவனின் திருநாமத்தைச் சொல்லிப்பாடுவது .. இதை “ திவ்யநாமசங்கீர்த்தனம் “ 
என்பர் .. கலியுகத்தில் நாம சங்கீர்த்தனம் ஒன்றே மிகச்சிறந்த வழி .. 

“ கெடும் இடரெல்லாம் கேசவாவென்ன நாளும் கொடுவினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக்கில்லார் “ 
பகவானின் திருநாமத்தை உச்சரிக்கும் பக்தர்களை யமதூதர்கள் நெருங்கவும் அஞ்சுவர் .. இதனால் நமது துயர்கள் அனைத்தும் விலகும் .. என்கிறார் நம்மாழ்வார் 

பகவான் நாமத்தை யாருடைய நாக்கு மறவாமல் உச்சரித்துக் கொண்டு இருக்கிறதோ அவன் சாஸ்திரங்களை அறிந்தவனாயினும் .. அறியாதவனாயினும் .. சுத்தனாயினும் .. அசுத்தனாயினும் .. யாராயினும் .. சத்திய ரூபத்தை அடைகிறான் .. பகவானுடைய நாமத்திற்கு அத்தகைய மகத்துவம் இருக்கிறது .. 

நாம சங்கீர்த்தனம் செய்பவன் பதிதைகளான பெண்டிர் . லோபிகள் .. பாஷாண்டிகள் நடுவில் இருந்தபோதிலும் சீக்கிரமே விடுதலையடைந்து விடுகிறார்கள் .. எல்லாவிதமான அசுத்தங்களையும் அகற்றி அபராதங்களிலிருந்து நிவாரணம் அளிப்பதும் .. அசுபங்களிலிருந்து மீட்டு சுகத்தை உண்டாக்குவதும் பகவானுடைய நாமம் மட்டுமே ! என்று பகவானின் நாம மஹிமைகளை பத்மபுராணம் நமக்குகூறுகிறது .. 

பாடும் பாட்டெல்லாம் பரந்தாமனின் பாட்டு ! நாளும் நடப்பதெல்லாம் நாராயணன் விளையாட்டு ! 
பிறவித்துன்பத்தினை துடைக்கவல்ல மஹாவிஷ்ணுவை
வணங்கித் .. துன்பமற்ற பெருவாழ்வு வாழ்வோமாக .. 
ஓம் நமோ நாராயணாய .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..PANVEL BALAGANE POTRI POTRI

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இரண்டாம் ஆடிச்செவ்வாயாகிய இன்று அன்னை துர்க்காதேவியைத் துதித்து தங்களனைவருக்கும் அன்னையின் அருட்கடாக்ஷ்மும் பெற்று அனைத்து ஐஸ்வர்யங்களையும் பெறுவீர்களாக ! 

ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! 
துர்க்காயை ச தீமஹி ! 
தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! 


ஆடிச்செவ்வாய் தேடிக்குளி என்றும் ! ஆடிப்பட்டம் தேடிவிதை ! ஆடிப்பெருக்கு கோடியாய்க் கிடைக்கும் ! என்பதெல்லாம் முன்னோர்வாக்கு ! 

ஆடிச்செவ்வாய்க் கிழமைகளில் பெண்கள் நல்லெண்ணை வைத்து .. மஞ்சள்பூசித் தோய்ந்து .. விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு வந்தால் மாங்கல்யபலம் கூடும் அனைத்து தோஷங்களும் நிவர்த்தியாகும் .. மாங்கல்யத்தடை நீங்கும் .. பிள்ளைப்பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம் .. 

தமிழ்மாதத்தில் நான்காவது மாதமான ஆடி தட்சிணாயன புண்யகாலமாகும் .. இது தேவர்களின் இரவு நேரம் என்று புராணங்கள் சொல்கின்றன .. இக்காலகட்டத்தில் பகல்பொழுது குறைவாக இருக்கும் 
பலத்தகாற்றும் .. வெயில்குறைந்தும் .. மழைச்சாரலும் இருக்கும் .. 

ஆடிச்செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள்
“ஒளவையார் விரதம் “ அனுஷ்டிப்பார்கள் .. இரவு 10.30 மணிக்குமேல் பெண்கள்மட்டுமே இதனை கடைபிடிப்பார்கள் .. மூத்தசுமங்கலிப் பெண்கள் வழிகாட்ட இளைய பெண்கள் விரதத்தைத் தொடங்குவார்கள் .. 

பச்சரிசிமாவில் வெல்லம் சேர்த்து கொழுக்கட்டை தயாரிப்பர் .. அதன்வடிவம் வித்தியாசமானதாக இருக்கும் .. அன்றைய நிவேதனங்கள் எதிலுமே உப்புபோடமாட்டார்கள் .. அனைத்தும் தயாரானதும் அன்னை ஒளவையாரை நினைந்து விளக்கேற்றி பூஜைகள் செய்வார்கள் .. 

ஒளவையார் அன்னையின் கதையினை ஒருவர் சொல்ல மற்றவர்கள் பக்தியோடு கேட்பர் .. இறுதியாக விரத நிவேதனங்கள் அனைத்தும் அந்த பெண்களே உண்பார்கள் .. ஆண்மக்களுக்கோ .. கணவர்க்கோ கொடுத்தலாகாது .. 

பூஜைமுடிந்த உடனே வழிபாடு நடந்த இடத்தை தூய்மைபடுத்திவிடுவார்கள் .. இந்தவிரதம் ஒவ்வொரு ஆடிச்செவ்வாய்க்கிழமைகளில் ஒவ்வொரு வீட்டிலும் நடத்துவர் .. இவ்வாறு விரதம் அனுஷ்டித்தால் குடும்ப ஒற்றுமை நிலைக்கும் என்பது ஐதீகம் .. 

அன்னையைப் போற்றுவோம் ! அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக ! 
ஓம் சக்தி ஓம் ! வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் ! 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS ' MAA DURGA ' MAY YOUR SOUL BRIGHTEN UP WITH JOY AND YOUR HOME LIGHTEN UP WITH THE DIVINE BLESSINGS OF GODDESS
DURGA .. " JAI MATA DI


 

SWMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HAPPINESS AND PEACE SURROUND YOU WITH HIS ETERNAL LOVE AND STRENGTH .. " OM MURUGA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையும் .. சஷ்டித் திதியுமாகிய இன்று சோமவார விரதமும் சேர்ந்து வருவதால் ஆலயம்சென்று சிவனையும் .. கந்தனையும் தரிசித்து .. அவர்களது அருட்கடாக்ஷ்ம் பெற்று .. செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெற்று .. மனதில் நிம்மதியும் .. சாந்தியும் நிலவிட கந்தவேளைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வர புத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! மனதிற்கும் அகம் என்று பொருள் உண்டு என்பதால் மனதளவில் உள்ள குழப்பங்களுக்கும் .. சஷ்டி விரதம் மூல்ம் பொருள் கிடைக்கலாம .. சஷ்டி விரதநாட்களில் சிரத்தையாக இருந்து விரதம் மேற்கொண்டவர்கள் அனைத்து சிறப்பையும் பெறமுடியும் என்பது நிச்சயம் .. மனதில் எழும் அசுர எண்ணங்களை அழித்து அகப்பை எனும் நல் உள்ளத்தில் நல்ல எண்ணங்க்ளும் .. பக்தி எனும் பாதையால் எழுந்த அமைதியையும் .. தந்தருளுவான் கந்தனே ! நாளெனசெயும் .. வினைதான் என்செயும் எமைநாடி வந்த கோளென்செயும் ..கொடுங்கூற்றென்செயும் குமரேசர் இருதாளும் .. சிலம்பும் .. சதங்கையும் .. ஷண்முகமும் .. தோளும் .. கடம்பும் எமக்கு முன்வந்து தோன்றிடினே ! ( என்றபாடலின்மூலம் முருகப்பெருமானின் சிறப்புகளை நாம் அறிந்து கொள்ளலாம் ) கந்தனைப் போற்றுவோம் ! அறியாமை எனும் அஞ்ஞான இருளை அகற்றி .. மெய்ஞானமாகிய மிளிர்கின்ற பரம்பொருளின் திருவருளையும் .. அருட்கடாக்ஷ்த்தையும் பெற்றிடுவோமாக ! சரணம் ! சரணம் ! ஷண்முகா சரணம் ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .

SWAMIYE SARANAM IYYAPPPA...GURUVE SARANAM SARANAM.....PANVEL BALAGAN PATHAM POTRI POTRIGOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. GOOD STRENGTH AND HAPPINESS .. " JAI SURYADEV " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிறுக்கிழமையாகிய இன்று நம் மன இருளைப்போக்கி நல்லாரோக்கிய வாழ்வினைத் தந்தருளும் சூரியபகவானுக்கு உகந்த நாளுமாகும் .. தங்களனைவரது கிரகதோஷங்கள் யாவும் நீங்கி அனைத்து நலமும் பெறுவீர்களாக .. ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! பாஸஹஸ்தாய தீமஹி ! தந்நோ சூர்யஹ ப்ரசோதயாத் !! நாம் நம் இருகண்களாலும் பிரத்தியட்சகமாகக் காண்பது சூரியனையேயாகும் ! சிவாலயங்களில் சூரியபகவான் தனித்தும் .. நவக்கிரககங்களுக்கு நாயகனாகவும் வீற்றிருக்கின்றார் .. ஏனைய ஆலயங்களில் நவநாயகர்களுக்கு நடுநாயகனாக வீற்றிருப்பதை நாம் காணமுடியும் .. இயற்கை ஏற்றிவைத்த ஒளிவிளக்காகிய சூரியன் தன் அருள் ஒளியால் அறியாமை என்னும் இருளகற்றி அறிவென்னும் ஒளிச்சுடரைத் தூண்டும் சக்திமிக்க பிரத்யட்ச தெய்வ வடிவாகத் திகழ்கிறான் .. ஆதவனை வணங்குவோருக்கு சுடர்மிகும் அறிவுடன் .. சுட்டும் விழிச்சுடரான கண்பார்வையும் கிட்டும் .. வாழ்வில் சகலசெயல்களிலும் வெற்றியை அருளவல்ல அகத்திய முனிவரால் அருளிய ஸ்ரீஆதித்யஹ்ருதயம் துதியை பாராயணம் செய்து ஸ்ரீராமச்சந்திரமூர்த்தி இராவணனை வென்றார் .. ஸ்ரீராமனுக்கு கவசமாக .. பாதுகாப்பாக ஆதித்யஹ்ருதயம் காத்தது .. ஆதித்யஹ்ருதய ஸ்தோத்திரத்தை நாமும் ஜபித்து துன்பங்கள் நீங்கி .. ஆயுள் .. ஆரோக்கியம் .. செல்வம் முதலிய அனைத்து நலன்களையும் பெறுவோமாக .. “ ஓம் ஆதித்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM...TODAY OUR 21ST DAY VIRIDHAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " SANKADAHARA SADURTHI " WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESHA .. MAY HE RELIEVE YOU FROM ALL THE OBSTACLES AND PAIN FROM YOUR LIFE AND SHOWER YOU WITH GOOD HEALTH AND HAPPINESS .. " JAI SHREE GANESHAAYA NAMAHA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று விநாயகப் பெருமானுக்கு உகந்த “ சங்கடஹர சதுர்த்தி விரதமும் “ அனுஷ்டிக்கப்படுகின்றது .. இந்நாளில் தங்களனைவருக்கும் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி பெறவும் .. சகலசௌபாக்கியங்களும் .. சுபீட்சமும் பெற்று மகிழ்வோடு வாழ விக்னவிநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! வக்ரதுண்டாய தீமஹி ! தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! விநாயகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிரத தினங்கள் இருந்தாலும் .. விரதத்தில் மிகச்சிறந்ததும் .. பழமையானதும் .. சங்கடங்கள் அனைத்தையும் தீர்க்கக்கூடிய சங்கடஹர சதுர்த்தியில் விரதம் இருந்தால் அளவுகடந்த ஆனந்தத்தை அடையலாம் .. சகல சௌபாக்கியங்களையும் பெறலாம் .. “ ஹர “ என்ற சொல்லுக்கு - அழித்தல் என்று பொருள் .. நமக்கு வரும் துன்பங்களையும் .. தடைகளையும் .. கஷ்டங்களையும் தேய்த்து அழிப்பதற்காக ஏற்பட்ட ஒருபூஜையே இந்த சங்கடஹர சதுர்த்தி பூஜையாகும் .. விரதத்தின் பலன்கள் - இவ்விரதத்தை கடைபிடிப்பதால் நீண்ட நாட்களாக தீராமல் உள்ள நோய்தீரும் .. வாழ்க்கையில் தொடர்ந்து பலவகை துன்பங்களுக்கு உள்ளாகிறவர்கள் நிலையான சந்தோஷத்தை அடையமுடியும் .. மிகச்சிறப்பான கல்வி அறிவு .. புத்தி கூர்மை .. நீண்ட ஆயுள் .. நிலையான செல்வம் .. நன்மக்கட்பேறு என பலவிதமான நன்மைகளை அடையமுடியும் .. சனிதோஷத்திற்கு உள்ளாகிறவர்கள் இவ்விரதத்தை அனுஷ்டித்தால் சனியின் தாக்கம் பெரும்பகுதி குறையும் விநாயகர் அகவலையும் .. கணேஷ காயத்ரியையும் பாராயணம் செய்து தியானித்தால் பலன் இரட்டிப்பாகும் .. சங்கடஹர கணபதி மந்திரம் - ஓம் ஸ்ரீம் கணாதிபதயே ! ஏகதந்தாய ! லம்போதராய ! ஹேரம்பாய ! நாலிகேர ப்ரியாய ! மோதபக்ஷணாய ! மமாபீஷ்ட பலம் தேஹி ப்ரதி கூலம் மே நஸ்யது ! அநுகூலம் மே ! வஸமானய ஸ்வாஹா !! பொருள் - பக்தர்கள் விரும்பும் வரத்தை அளிக்கும் சங்கடஹர கணபதியே ! தங்களை வணங்குகிறோம் ! தாங்கள் பூதகணங்களுக்குத் தலைவர் ! இடையூறுகளை விலக்கி நன்மைகளை அளிப்பவர் .. தங்கள் பக்தர்கள் அனைவருக்கும் வசமாகக்கூடியவர் .. தங்கள் அருளால் காரியசித்தி ஏற்படும் .. எதிர்மறையானவற்றை விலக்கி நன்மைகளைத் தரும் தங்களை மீண்டும் .. மீண்டும் .. நமஸ்கரிக்கின்றோம் !! கணபதியைப் போற்றி அவரது பொற்பாதங்களில் சரணடைவோமாக ! ஓம் விக்னேஷ்வராய நமஹ ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS 'MAA' DURGA ... MAY SHE ILLUMINATE YOUR LIFE WITH COUNTLESS BLESSINGS OF HAPPINESS .. GOOD HEALTH & GOOD FORTUNE .. " JAI MATA DI " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஆடிவெள்ளி முதலாம் நாளாகிய இன்று ஆலயம் சென்று துர்க்கை அம்மனை தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் மகிழ்ச்சிகரமான நன்னாளாகவும் .. அனைத்து சௌபாக்கியங்களும் தங்கள் இல்லம் தேடிவர அன்னையைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! துர்க்காயை ச தீமஹி ! தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! எத்தனை வெள்ளிக்கிழமைகள் வந்தாலும் .. வெள்ளிக்கு என்று ஒரு தனிப்பெருமை உண்டு .. ஆலயங்களில் சந்தனக்காப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கும் இறைவியின் திருக்கோலத்தைக் காண பக்தர்கள் கூட்டம் அலைமோதும் .. விரதம் இருந்து அம்பிகையை வழிபட்டால் இன்பங்கள் இல்லம் தேடிவந்துகொண்டேயிருக்கும் என்பது நம்பிக்கை .. எனவேதான் “ கோடி நன்மை தரும் ஆடிவெள்ளி “ அன்று தேடிச்சென்று வழிபடவேண்டிய ஆலயம் அம்பிகைக்குரிய ஆலயமாகும் .. அதுமட்டுமல்ல திருமகளை வழிபடுவதன் மூலமும் .. செல்வநிலை உயரும் .. எட்டுவகை லக்ஷ்மிக்கும் இனிய விழா எடுப்பது ஆடிமாதமாகும் .. கிழமைகளில் சுக்ரவாரம் என்றழைக்கப்படுவது வெள்ளிக்கிழமையாகும் துள்ளித்திரியும் சிங்கத்தில் ஏறி பவனிவரும் தூயவளாம் அம்பிகை .. வெள்ளிக்கிழமை அன்று வழிபட்டால் நல்ல காரியங்கள் இல்லத்தில் நடைபெற வழிபிறக்கும் என்பதை அனுபவத்தில் காணலாம் .. தமிழ்மாதங்களில் ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு தனிச்சிறப்பு உண்டு .. சூரியன் கடகத்தில் சஞ்சரிக்கும் மாதமான ஆடிமாதம் இறைவியை நாடிச்சென்றவர்களுக்கெல்லாம் கோடி கோடியாய் நற்பலன்கள் கொடுக்கும் மாதமாகக் கருதப்படுகின்றது காரணம் சந்திரன் வீட்டில் சூரியன் சஞ்சரிப்பதாகும் .. எனவே ஆடிவெள்ளியன்று மாலைநேரத்தில் அம்பிகையை .. ஆதிபராசக்தியை .. புவனேஸ்வரியை அலங்கரித்துப் பார்த்து வழிபாடு செய்தால் வளங்கள் அனைத்தும் வந்து சேரும் .. இன்றோடு துயர்விலக இனிய தனலக்ஷ்மியே ! மன்றாடிக்கேட்கின்றேன் வருவாய் இதுசமயம் ! என்று பாடுங்கள் .. லக்ஷ்மி இல்லம்தேடிவருவாள் .. நம்வாழ்க்கையில் அமைதி கிடைக்கவும் .. ஆனந்தம் வந்துசேரவும் .. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையிலும் உன்னதமான வழிபாடுகளி மேற்கொள்ளுங்கள் .. இனி வருடம் முழுவதும் வசந்தமே ! “ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY ALL YOUR PRAYERS BE ANSWERED ON THIS DAY AND MAY YOU BE BLESSED WITH PEACE AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. குருவருளும் .. திருவருளும் கூடிய இந்நன்னாளில் “ திருவோண “ நட்சத்திரமும் வருவது மிகவும் சிறப்புவாய்ந்தது .. ஆலயம் சென்று விஷ்ணுபகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. பகவானைத் துதித்து தங்களனைவரது துன்பங்கள் அனைத்தும் நீங்கி .. உறவினர் கொண்ட பகை அகன்று .. பகைவரும் நண்பர்களாக திகழ்வாராக .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளன்று நாராயணனை வழிபட்டு விரதங்காப்பது ஸ்ரவண விரதமாகும் .. தனிமனிதனின் உள்ளத்தை தூய்மையாக்கி ஆன்மீக ஆற்றலைத்தரும் 108 திவ்யதேசங்களில் ஒன்றான உப்பிலியப்பன் கோவிலில் மாதாமாதம் ஸ்ரவணம் என்கின்ற விழா பிரசித்தம் .. “ மாம் ஏகம் சரணம் வ்ரஜ “ - என்னை சரணடைந்தால் உன்னை காப்பேன் ! என்ற ’ சரமச்ஸ்லோகப் பகுதி ‘ எம்பெருமானின் வலக்கையில் வைரங்களால் பொறிக்கப்பட்டுள்ளது ..” தனக்கு ஒப்பாரும் மிக்காரும் இலார் ” என்ற பதத்திலேயே ஒப்பிலா அப்பன் - ஒப்பிலியப்பன் எனவும் அழைக்கப்படுகிறார் .. புராணக்கதை - திருவிண்ணகர் எனப்படும் ஒப்பிலியப்பன் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஒப்பில்லா அப்பனான ஒப்பிலியப்பன் திருப்பதி பாலாஜியின் அண்ணனாவார் .. ஒருமுறை மஹாலக்ஷ்மியின் ஒரு அம்சமான பூமாதேவி தானும் பெருமாளின் மார்பில் இடம்பெற வேண்டியபோது பூமியில் மார்கண்டேய மகரிஷியின் மகளாக பிறக்க அருள்புரிந்தார் விஷ்ணுபகவான் .. மார்கண்டேய மகரிஷியிடம் அவர் மகளாகப் பிறந்துள்ள “ துளசியை “ மணமுடித்துத் தரச்சொல்லி வேண்டினார் வயதான தோற்றத்தில் வந்த விஷ்ணுபகவான் .. அந்தக்கிழவருக்கு தன் சிறியவயது மகளைக் கொடுக்க விருப்பமில்லாமல் “ என்மகளுக்கு சரியாக உப்புகூட போட்டு சமைக்கத்தெரியாது அவளைத்திருமணம் செய்தால் உங்களுக்கு சௌகரியப்படாது “ என்று ஏதோ ஒரு காரணத்தைக்கூறி மறுத்தவரிடம் பெருமாளோ அதனால் என்ன இனிமேல் நான் உப்பே போடாமல் அனைத்தையும் உண்கிறேன் என்று வாக்களித்து விடாமல் பூமாதேவியை மணந்துகொண்டுவிட்டார் .. அதன் பிறகே வந்தவர் மஹாவிஷ்ணு என்பதை அறிந்த மகரிஷி மகிழ்ச்சி அடைந்தார் .. இதனால் அன்றிலிருந்து உப்பிலியப்பன் - உப்பு இல்லாத அப்பன் என்றும் அழைக்கப்பட்டு அந்த கோவிலில் படைக்கப்படும் எந்த உணவிலும் உப்பு சேர்க்கப்படுவதில்லை .. ஒவ்வொருமாத திருவோண நட்சத்திரத்தன்று இக்கோவிலில் அகண்டதீபம் .. வால்தீபம் ஆகியவை ஏற்றப்படுகின்றன .. இதை தரிசிக்கும் மக்களுக்கு குறைவில்லாத செல்வமும் .. அனைத்துத் துயர்களும் நீங்குமென்றும் நம்பிக்கை உள்ளது .. ஒப்பிலியப்பனைத் துதித்து சொல்லவேண்டிய ஸ்லோகம் “ என்னப்பன் எனக்காயிருளாய் என்னைப்பெற்றவனாய் ! பொன்னப்பன் .. மணியப்பன் .. முத்தப்பனென் அப்பனுமாய் .. மின்னப்பொன் மதிள்சூழ் திரு விண்ணகர்ச் சேர்ந்தவப்பன் தன்னொப்பா ரிலப்பன் ! தந்தனன் தன தாள் நிழலே ! ஸ்ரீமன் நாராயணன் பொற்பாதங்களில் சரணடைவோமாக! “ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM......PANVEL BALAGANE SARANAM SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காத்தருளும் ஸ்ரீமன் நாராயணனைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. குடும்பத்தில் நல் ஆரோக்கியமும் .. சுபீட்சமும் பெற்றிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! ஆண்டவனுடைய “ அனந்த கல்யாண குணங்களை “ அதாவது அவனுடைய எல்லையற்ற நற்பண்புகளை பற்பலவிதமாக எடுத்துரைத்துக் களிப்பதே விஷ்ணு சஹஸ்ரநாமத்திலுள்ள 1008 பெயர்களைக் கொண்ட ஸ்தோத்திரம் .. ஒவ்வொரு பெயரும் ஏதாவது ஒரு நற்குணத்தைக் காட்டும் .. இறைவனின் நாமங்களை உச்சரிப்பது புண்ணிய நதிகளில் நீராடுவதைவிடவோ .. பிராயச்சித்த கருமங்கள் செய்வதைவிடவோ உயர்ந்தது .. ஏனென்றால் அவையெல்லாம் பாவங்களைப் போக்குகின்றன .. அவ்வளவுதான் .. ஆனால் .. நாமங்களை உச்சரிப்பதால் பாவம் புரியத்தூண்டும் எண்ண ஓட்டங்களே கட்டுப்படும்! அதாவது பாவங்களின் ஆணிவேர் பிடுங்கி எறியப்படுவதே ! நாம உச்சரிப்பின் பெருமை .. விஷ்ணு சகஸ்ரநாமத்தின் பலன் - யார் இதனை தினமும் கேட்கிறார்களோ .. எவர் இதனைக் கொண்டு ஆண்டவனைத் துதிக்கின்றனரோ அவர்கள் இம்மையிலும் .. மறுமையிலும் சிறிதேனும் கெடுதலை அடையமாட்டார்கள் .. தருமத்தை விரும்புபவர் தருமத்தையும் .. பொருளை விரும்புபவர் பொருளையும் .. வம்சம் செழிக்கவிரும்புபவர் வம்சச்செழிப்பையும் பெறுவர் .. உள்ளத்தூய்மையும் .. புறத்தூய்மையும் கொண்டு பக்தியுடன் புருஷோத்மனை ஆயிரம் நாமங்களால் துதிப்பவன் நோயால் துன்புறுபவரானால் நோயிலிருந்தும் விடுபடுகிறார் .. சிறையில் அடைக்கப்பட்டவன் விடுபடுகிறான் .. ஆபத்தில் சிக்கியவன் மீள்கிறான் .. கடப்பதற்கு இயலாத இடையூறுகளை எளிதில் கடந்துவிடுகிறான் .. சிரத்தையும் .. பக்தியும் கொண்டவராக இந்த ஸ்தோத்திரத்தைச் சொல்பவர் ஆன்மசுகம் .. பொறுமை செல்வம் .. மன உறுதி .. நினைவாற்றல் .. புகழ் இவற்றைப் பெறுவார் .. ஸ்ரீவிஷ்ணு சஹஸ்ரநாமத்தை பராயணம் செய்து சகலசௌபாக்கியத்தையும் பெற எல்லாம் வல்ல ஸ்ரீமன் நாராயணன் அருள்புரிய வேண்டுகிறேன் .. “ ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

PANVEL BALAGANE POTRI POTRI.....GURUVE SARANAM SRANAM.......SWAMIYE SARANAM IYYYAPPA....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY & A HAPPY " GURU PURNIMA " TOO .. MAY GURU'S BLESSINGS ALWAYS SHOWER ON YOU FOREVER .. ' JAI GURUDEV ' அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. முதலாம் ஆடிச்செவ்வாயும் .. பௌர்ணமித் திதியுமாகிய இன்று ஆலயம் சென்று அன்னை துர்க்காதேவியைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. அன்னையின் அருட்கடாக்ஷ்ம் பெற்று நிறைந்தசெல்வம் தங்கள் இல்லம் தேடிவர பிரார்த்திக்கின்றேன் .. ஓம் மஹாதேவ்யை ச வித்மஹே ! துர்க்காயை ச தீமஹி ! தந்நோ தேவீ ப்ரசோதயாத் !! ஆடிச்செவ்வாய - ஆடிமாதத்தில்வரும் செவ்வாய்கிழமைகள் மிகவிசேஷமானவைகளாகும் .. “ ஆடிச்செவ்வாய் தேடிக்குளி ! அரைச்சமஞ்சளை பூசிக்குளி “என்பது பழமொழி .. அதாவது விரதம் இருந்து எண்ணய்தேய்த்து குளித்து அன்னையை வழிபட பெண்களின் மாங்கல்ய பலம் கூடும் என்பது ஐதீகம் .. இதுவே இவ்விரதத்தின் சிறப்பை உணர்த்துவதாக உள்ளது .. காரணம் .. செவ்வாய்கிரகம் .. சனிக்கிரகம்போல் ஒரு ஜாதகத்தருக்கு பெரும்தோஷத்தை (கஷ்டத்தையும்) ஏற்படுத்தக்கூடியது .. செவ்வாய் .. சனி .. போன்ற பாவக்கிரகங்கள் கோசாரமாக சஞ்சாரம் செய்யும்போது அதன் கதிர்வீச்சுக்கள் எம்மைத் தாக்கும் .. தீவிரமாகவரும் கதிர்களை நல்லெண்ணையில் (எள்) ஊறிய எமது உடம்பு தாக்கவிடாது தடைசெய்கிறது .. தீயகதிர்கள் எம் உடலில் தாக்கத்தினை ஏற்படுத்தாது தடுக்கவே இந்த எண்ணை முழுக்கு என யூகிக்க முடிகின்றது .. ஆடிச்செவ்வாயில் பெண்கள் எண்ணை வைத்து .. மஞ்சள்பூசித்தோய்ந்து விரதம் அனுஷ்டித்து அம்மனை வழிபட்டு மாங்கல்ய பலம் பெறுவோமாக ! “ தீர்க்கசுமங்கலிபவ “ ஆடி பௌர்ணமி - ஆடிமாதத்து “ பௌர்ணமியை “ஆஷாடபௌர்ணமி “ “ குருபூர்ணிமா “ .. “ வியாச ஜெயந்தி “ என்றும் அழைப்பார்கள் .. அனைவரும் மனதளவில் தங்களுடைய ஆஸ்தான அபிமான குருவாக ஏற்றுக்கொள்ளப்பட்டவருக்கு பூஜைகள் செய்தால் அவரிடம் இருந்து கற்றுக்கொண்ட வித்தைகளை முழுமையாக உள்வாங்கும் ப்ராப்தத்தை பெறுவது உறுதி இந்நாளில் துறவிகள் சாதூர்மாஸ்ய விரதத்தினை மேற்கொண்டு வியாசபூஜை செய்வார்கள் என்றும் கூறுவர் .. மஹாவிஷ்ணுவின் அவதாரமாகக் கருதப்படுபவர் வியாசர் .. வேதங்களை ரிக் .. யஜுர் .. சாமம் .. அதர்வணம் என்று நான்காக வகுத்தவர் .. வியாசரை குருபூர்ணிமா தினமான இன்று நினைந்து வணங்கவேண்டும் .. சீடர்களும் .. ஆன்மீக அன்பர்களும் தங்கள் குருவை நாடிச்சென்று வணங்கி குருவருள் பெற்றுக்கொள்ளவேண்டியது அவசியம் .. புதிய சீடர்கள் குருதீட்சையைப் பெறுவர் .. குருவருளும் .. திருவருளும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ்வோமாக ! “ குருவே சரணம் “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

SWAMIYE SARANAM...PANVEL BALAGANE SARANAM....GURUVE SARANAM...TODAY OUR 16TH DAY VIRIDHAM..GOOD MORNING DEAR FRIENDS WISH YOU ALL A SUCCESSFUL MONDAY AND A DIVINE " SOMAVAR " TOO .. MAY LORD SHIVA'S BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER & MAY YOU BE BLESSED WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " OM NAMASHIVAAYA " .. JAI BHOLE NATH .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் திங்கட்கிழமையாகிய இன்று சோமவார விரதமும் அனுஷ்டிப்பதால் ஆலயம் சென்று சிவபெருமானை வழிபடுவது சிறப்பு .. தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் வெற்றிகரமான நன்நாளாக அமைந்திடவும் .. அனைத்து நலன்களும் பெற்று மகிழ்ச்சிகரமான வாழ்வு மலர்ந்திடவும் எல்லாம் வல்ல ஈசன் அருள்புரிவாராக .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! சோமன் என்றால் உமையுடன் கூடிய சிவன் என்றும் .. சந்திரன் என்றும் பொருள்படும் .. தட்சனின் சாபத்தால் நாளுக்கு நாள் தேய்ந்துவருவதைக் கண்ட சந்திரன் மிகவும் கவலையுற்று சிவனைத் தஞ்சம் அடைந்ததால் சிவனும் மனமிரங்கி சந்திரனைத் தனது சடைமுடியில் வைத்துக்கொண்டார் ..இதனால் சந்திரனின் சாபம் பாதியாகக் குறைந்தது ..மாதத்தில் 15 நாட்கள் தேய்வதும் 15 நாட்கள் வளர்வதுமாக அவனது சாபம் மாறுதல் பெற்றது .. சந்திரனும் இவ்விரதத்தை அனுஷ்டிப்பவர்களுக்கு நற்கதியைக் கொடுக்கவேண்டும் என்று சிவனிடம் வரம்கேட்க ஈசனும் அவ்வாறே வரம் அளித்தால் சோமவார விரதமாக சிறப்பு பெற்றது .. சிவனும் சந்திரனைத் தன் திருமுடியில் தாங்கி சோமநாதர் ஆனார் சந்திரசூடகராக சந்திரமௌலீஸ்வரராகவும் அழைக்கப்பட்டார் .. ” நமசிவாய “ என்னும் ஐந்தெழுத்து மந்திரம் சிவனின் மூலமந்திரம் .. சிவம் என்றால் மங்களம் என்று பொருள் தீக்க்ஷை பெற்றிருந்தாலும் பெறாவிடினும் “ நமசிவாய “ என தாயைக்கூவியழைக்கும் சேய்போல் அழைக்க யாவருக்கும் உரிமை உண்டு .. கடல் தன்மயமாய் இருந்துகொண்டு அதில்வந்து சேரும் நீரையெல்லாம் தன்மயமாக்குவதைப் போல் சிவனும் தம்மைக் கூவியழைப்பவர்களை எல்லாம் சிவமயமாக்குகிறார் .. “ சிவத்தை அணைத்துக்கொண்டால் யமனும் நமை வணங்குவான் “ சிவனைப் போற்றுவோம் ! அனைத்திலும் வெற்றி காண்போமாக ! வெற்றி நிச்சயம்! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL BLESSED " PRADOSHAM " AND MAY LORD SHIVA REMOVE ALL THE OBSTACLES AND SINS FROM YOUR LIFE AND SHOWER YOU WITH ETERNAL SUCCESS .. " OM NAMASHIVAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையுமாகிய இன்று பிரதோஷ விரதமும் வருவதால் மாலையில் 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷவேளையில் ஆலயம் சென்று சிவபெருமானுக்கு நடக்கும் அபிஷேக ஆராதனைகளை நந்தீஸ்வரரின் இருகொம்புகளுக்கு ஊடாக கண்டு தரிசித்து அனைத்து பாவங்களிலிருந்தும் விடுதலைபெற்று இனியவாழ்வு மலர்ந்திட எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவாராக .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் !! ஒவ்வொரு மாதமும் வளர்பிறை .. தேய்பிறை என்னும் இரண்டு காலங்களிலும் திரயோதசி திதியில் வருவது பிரதோஷதினமாகும் .. இந்த நாளில் பிரதோஷவேளையில் ( மாலை 4.30 - 6.00 வரை ) சிவபெருமானை வழிபாடு செய்வதே இந்த விரதத்தின் நோக்கமாகும் .. இதனால் முற்பிறவிப் பாவங்களும் .. சகலதோஷங்களும் நீங்கி நலம்கிடைக்கும் .. பாற்கடலைக் கடைந்தபோது அதில் இருந்து பொங்கிவந்த ஆலகாலவிஷத்தை அமரர்களுக்கும் .. அடியார்களுக்கும் எவ்விததோஷமும் ஏற்படாதவண்ணம் சிவபெருமான் பருகியவேளையே பிரதோஷவேளையாகும் .. எனவே பிரதோஷகாலம் சிவனை வழிபடுவதற்கு உகந்தகாலம் ஆகும் .. பாம்பணிந்த பரமன் நஞ்சுண்டநாள் சனிக்கிழமை என்பதால் சனிப்பிரதோஷம் அதிவிசேஷமானது ஆகும் .. உலகைக்காக்கும் பொருட்டு நன்மையை நமக்குத் தந்து தீமையான விஷத்தை தான் ஏற்றுக்கொண்டார் .. இவ்வாறு உலகைக்காத்த உத்தமமான இறைவனை “ நமசிவாய “ என்ற ஐந்தெழுத்து மந்திரம் மூலம் மனமுருக பிரார்த்தித்தபடி பிரதோஷவேளையில் ஈசனையும் பிறையணிந்த பெருமானாக தேவியோடும் முருகனோடும் சோமஸ்கந்தமூர்த்தியாகத் தரிசித்து வழிபட்டு புண்ணியமாயிரம் பெறுவோமாக ! “ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..SWAMIYE SARANAM IYYAPPAA. GURUVE SARANAM SARANAM..PANVEL BALAGANE SARNAM IYYAPPA

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE 'MONTH OF AADI ' WITH THE BLESSINGS AND GUIDANCE OF GODDESS ' MAA ' .. MAY SHE ILLUMINATE YOUR LIFE WITH GOOD HEALTH .. STRENGTH AND HAPPINESS .. OM SHAKTHI OM JAI MATA DI .. அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சனிக்கிழமையாகிய இன்று ஆன்மீக மணம்கமழும் ஆடிமாதத்தின் ஆரம்பநாளுமாகும் .. அன்னையைத் துதித்து நோய் நொடி நீங்கி நல்லாரோக்கியமும் .. அச்டலக்ஷ்மிகளின் அருட்கடாக்ஷ்மும் தங்களனைவரும் பெற்றிடவும் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் பிசாசத்வஜாய வித்மஹே ! கட்கஹஸ்தாய தீமஹி ! தந்நோ மாரீ ப்ரசோதயாத் !! தெய்வீகப்பண்டிகைகள் தொடங்குகின்ற மாதம் ஆடிமாதம் .. அம்மனுக்கு உரியமாதமாக இது போற்றப்படுகிறது ..பூமிதேவி பூமியில் அம்மனாக அவதரித்தமாதம் பார்வதியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மன் மாதமாக இருக்கவேண்டும் என வரம் கொடுத்தார் .. சிவனுடைய சக்தியைவிட அம்மனுடைய சக்தி ஆடிமாதத்தில் அதிகமாக இருக்கும் ..ஆடிமாதத்தில் மட்டும் சிவன் சக்திக்குள் அடக்கமாகிவிடுகிறார் என்பது ஐதீகம் .. இம்மாதத்தில் ஆடிச்செவ்வாய் .. ஆடிவெள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன .. ஜோதிடசாஸ்திரத்தில் ஆடிமாதத்தை கர்கடக மாதம் என்பார்கள் .. வருடத்தை இரு அயனங்களாகப் பிரித்துள்ளனர் .. தைமுதல் - ஆனிவரை உத்தராயணம் .. இதுவே தேவர்களின் பகல்காலமாகும் .. ஆடிமுதல் - மார்கழிவரை தட்சிணாயனம் .. இதுவே தேவர்களின் இரவுக்காலமாகும் .. நம்முடைய ஒருவருடகாலம் என்பது தேவர்களின் ஒருநாள்தான் .. ஆடிமாதம் தேவர்களிம் மாலை நேர ஆரம்பமாகும் .. கடும் வெப்பம் அதற்குபின் மழை என்பதால் உடல்சீதோஷணம் பாதிக்கும் அதனால் நோய்களும் தாக்கும் .. இதனாலேயே ஆடிமாதங்களில் வீடுகளில் வேப்பிலைத் தோரணங்கள் .. அம்மன்வழிபாடு கூழ்வார்த்தல் போன்றவை நம்மக்கள் அக்காலத்திலேயே தோற்றுவித்து நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள் .. தெய்வ வழிபாடும் ஆயிற்று .. உடல்நலமும் சீராகிறது .. வேம்பும் எலுமிச்சையும் அம்மனுக்குப் பிடித்தமானவை இவை உடல்நலத்திற்கும் வியாதியைத் தடுப்பதற்கும் உதவுபவை .. ஆடிமாதத்தில் இருந்துதான் விரதங்கள் .. பண்டிகைகள் .. உற்சவங்கள் எல்லாம் ஒவ்வொன்றாக தொடங்குகிறது .. இந்தமாதத்தை அம்மன் .. அம்பாள் மாதம் என்றும் சிறப்பித்துக் கூறுவார்கள் ..அந்த அளவுக்கு வீடுகளிலும் .. கோயில்களிலும் விழாக்களும் .. விரதவழிபாடுகளும் களைகட்டும் ..இறை வழிபாட்டிற்கு உகந்த மாதமாக காலம் காலமாக பின்பற்றி வருகின்றனர் .. ஆடிமாத்தில் இறைபக்தி செலுத்தி எல்லாம் வல்ல அன்னையின் அருட்கடாக்ஷ்த்தினைப் பெறுவோமாக ! “ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..PANVEL BALAGANE POTRI.....GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED " DEVSHAYANI EKADASI DAY " AND MAY LORD VISHNU REMOVE ALL THE OBSTACLES AND SINS THAT STAND IN YOUR SPIRITUAL AND EARTHLY LIFE & SHOWER YOU WITH BEST HEALTH & HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. மங்களங்கள் யாவும் தங்கள் இல்லம் தேடிவரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று ஏகாதசித் திதியும் வருவது சாலச்சிறந்தது .. ஆலயம் சென்று விஷ்ணுபகவானைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் மங்களகரமான நன்னாளாக அமைந்திடவும் .. அறிந்தோ அறியாமலோ செய்த பாவவினைகள் நீங்கப்பெறுவதோடு அவரவர் அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியடையவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! வெள்ளிக்கிழமையும் சுக்லபட்சத் திதியில் (வளர்பிறையில்) வரும் ஏகாதசியை “ தேவசயனி “ என்றும் “ பத்ம ஏகாதசி “ என்றும் அழைப்பார்கள் .. மஹாவிஷ்ணுவிற்கு உகந்த நாளான ஏகாதசியைவிட சிறந்தது வேறு எதுவும் இவ்வுலகில் இல்லை .. விதிக்கப்பட்ட வழிமுறைகளின்படி விரதத்தை கடைபிடித்தால் மிகமோசமான பாபங்களும் அழியப்பெறும் .. பாபங்களிலிருந்து மீண்டு நற்கதி அடையலாம் .. ( அறிந்தே கொலைபாதகம் போன்ற கொடியபாவங்களை செய்தவர்களுக்கு எந்த சாஸ்திரத்திலும் மன்னிப்பே கிடையாது ) நாம் நம்முடைய பிரச்சினைகளிலிருந்து விடுபடுவதற்காக மற்றவர்களுக்கு துன்பம் விளைவிக்கக் கூடாது .. கடவுளின்மீது நம்பிக்கையுடனும் .. சிரத்தையுடனும் நம்சக்திக்கு ஏற்றாற்போல் நற்கருமங்களை செய்து வருவதால் பெரிய இடையூறுகளிலிருந்தும் கடவுள் அருளால் விடுபடமுடியும் .. நாடு சுபீட்சம் அடையும் .. மக்கள் வளமுடன் மகிழ்ச்சியாக வாழ்வர் .. தீயசக்திகள் அண்டாமல் பாதுகாக்கப்படுவர் .. தேவசயனி அல்லது விஷ்ணுசயனி என்றழைக்கப்படும் .. இந்நாளில் தான் விஷ்ணுபகவான் மற்றும் அனைத்து தேவர்களும் சயனிக்கும் தினமுமாகும் .. கார்த்திகைமாத ஏகாதசிவரை எந்தவிதமான சுபசடங்குகளையும் செய்யக்கூடாது என்று கூறுவர் .. சூரியபகவான் தன் தென் திசைகோள்சார பயணத்தை ( தட்சிணாயனம் ) தொடங்குவதாலும் தேவர்கள் அனைவரும் சயனித்திருப்பதாலும் அவர்களை வேள்வியின் ஆகுதிகளை ஏற்றுக்கொள்ள அழைக்க இயலாது .. இப்புராண நிகழ்வினை கேட்பவர்களதும் .. படிப்பவர்களதும் பாவங்கள் அனைத்தும் அழிவதோடு அல்லாமல் ஆன்மீகப்பாதையில் ஏற்படும் தடங்கல்களையும் நீக்கி உயர்வான நிலையை அடையச்செய்யும் .. ஏகாதசி விரதத்தை கடைபிடித்து பரந்தாமனின் அன்பிற்கும் .. அருளுக்கும் பாத்திரமாவோமாக .. “ ஓம் நமோ பகவதே வாசுதேவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..Swamy Sranam...Panvel Balagan Patham Potri Potri. Today 13th day viradham...Girive saraanam

SWAMIYE SARANAM IYYAPPA....TODAY OUR 11TH DAY VIRADHAM....PANVEL BALAGANE SARANAM IYYAPPA...GURUVE SARANAM....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT WEDNESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH EVERY SUCCESS IN YOUR CAREER AND GOOD HEALTH .. WEALTH AND HAPPINESS .. " OM NAMO NAARAAYANAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று இப்பிரபஞ்சத்தைக் காக்கும் கடவுளாகிய மஹாவிஷ்ணுவிற்கும் உகந்த நாளுமாகும் தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. எண்ணிய அனைத்து எண்ணங்களும் ஈடேறவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் நாராயணாய வித்மஹே ! வாசுதேவாய தீமஹி ! தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! நம் உடலுக்குள் உயிர் இருக்கின்றது .. அதுபோல் உயிருக்கு உயிராக இருப்பவர் விஷ்ணுபகவான் .. அந்தராத்மாவாக .. வேறுவிதத்தில் சொல்வதென்றால் .. நம் ஒவ்வொருவருக்குள்ளும் இருப்பது ஜீவாத்மா ! ஜீவாத்மாவுக்கே ஆத்மாவாக இருப்பது பரமாத்மா ! நமக்குள் பகவான் இருப்பதை உணர்ந்து கொண்டால் நம்வாழ்க்கை ஆனந்தமயமாகிவிடும் .. ஓம் என்பது - ஓரெழுத்தாகவும் .. நம என்பது - இரண்டெழுத்தாகவும் .. நாராயணாய என்பது - ஐந்தெழுத்தாகவும் .. ஆகமொத்தம் எட்டெழுத்தும் சேர்ந்து “ நாராயண அஷ்டாக்ஷ்ரம் எனப்படும் .. இதைத் தொடர்ந்து கூறிவர நிறைந்த ஆயுள் கிடைக்கும் .. எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும் .. தீமைகள் .. துன்பங்கள் தொடராது .. முகவசீகரம் கிடைக்கும் .. எல்லாச் செல்வங்களும் கிட்டும் .. காலையில் இதை கூறுபவன் - இரவில் செய்தபாவத்தை நாசம் செய்கின்றனர் .. மாலையில் கூறுபவர்கள் - பகலில் செய்த பாவத்தை நாசம் செய்கின்றனர் .. உச்சிப்பொழுதில் கூறுபவர்கள் - ஐந்துவித மகாபாதகங்கள் உபபாதகங்களிலிருந்தும் விடுபடுகின்றனர் .. எல்லா வேதங்களையும் ஓதிய புண்ணியத்தையும் அடைகின்றனர் .. ( மேற்கூறிய அனைத்தும் நாராயண உபநிஷத்தில் உள்ளவை ) குலந்தரும் செல்வந்தந்திடும் அடியார் படுதுயராயின வெல்லாம் நிலந்தரச் செய்யும் நீள்விசும்பருளும் அருளொடு பெருநிலமளிக்கும் .. வலந்தரும் மற்றுந்தந்திடும் பெற்றதாயினு மாயினசெய்யும் நலந்தருஞ் சொல்லை நான் கண்டுகொண்டேன் .. ” நாராயணா வென்னும் நாமமே ” .. பகவானைப் போற்றுவோம் ! நலமாயிரம் பெறுவோமாக! “ ஓம் நமோ நாராயணாய “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ....

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கந்தப்பெருமானுக்கு உகந்த நாளுமாகும் .. கந்தனைப் பிரார்த்தித்து தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய பொன்னாளாக மிளிரவும் .. செல்வாக்கும் .. சொல்வாக்கும் பெற்று மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன் .. வணங்குகின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹேஷ்வரபுத்ராய தீமஹி ! தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! செவ்வாய்க்கு அதிபதி முருகன் என்பதால் முருகனுக்குரிய கிழமை செவ்வாயாக உள்ளது .. இகபர சௌபாக்கியங்களை அருள்பவன் முருகன் .. இப்பிறவிக்கு தேவையான பொருட்செல்வத்தையும் தன் பன்னிருகைகளாலும் வாரி வழங்கும் வள்ளலாவான் .. முன்செய்தபழிக்குத் துணை முருகா ! என்னும் நாமப்படி முருகநாமத்தைச் சொன்னால் முன்வினைப்பாவம் நீங்கி புண்ணியம் சேரும் .. ” குன்று இருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்குமிடம் என்பர் ” .. மலையும் .. மலைசார்ந்த இடம் குறிஞ்சி .. குறிஞ்சிக்கடவுளாக முருகனே மலைகளின்மீது ஆட்சி செய்கிறார் .. தெய்வங்களில் உயர்ந்தவராகத் திகழ்வதால் அவரைத் “ தெய்வசிகாமணி “ என்று போற்றுவார்கள் .. ” சரவணபவ “ என்னும் ஆறெழுத்து மந்திரம் மிகவும் சிறப்பானதாகும் .. இதனை மனமுருகி சொல்பவர்கள் செல்வம் .. கல்வி .. முக்தி .. ( பிறப்பற்ற நிலை ) எதிரிகளை வெல்லுதல் .. ஆரோக்கியம் .. பயமின்றி இருத்தல் ஆகிய ஆறுபேறுகளையும் பெற்று மகிழ்வார்கள் என்று சாஸ்திரம் கூறுகிறது .. பிள்ளை என்று அன்பாய் பிரியம்காட்டும் கந்தவேளைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிடுவோம் ! ஓம் சரவணபவாய நமஹ ! வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் .. GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA .. MAY HE FULFILL ALL YOUR DESIRES AND SHOWER YOU WITH BEST HEALTH .. PEACE AND HAPPINESS .. " OM MURUGA "

Swamiye Saranam Iyyappa...Guruve Saranam..Today 9th day Viradham GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " SOMVAR " AND A SUCCESSFUL MONDAY TOO .. MAY THE BLESSINGS OF LORD SHIVA ALWAYS BE WITH YOU AND SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH .. & REMOVE ALL SINS AND SORROWS TOO .. " OM NAMASHIVAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையாகிய இன்று சிவபெருமானுக்கு உகந்த சோமவார விரதமும் அனுஷ்டிப்பதால் சிவாலயம் சென்று சிவபெருமானைத் தரிசித்து அறியாமல் செய்த பாவங்களுக்கும் நிவாரணம் பெறுவோமாக .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் வெற்றிகரமான நன்னாளாக அமைந்திடவும் .. நல்லாரோக்கியம் பெற்றிடவும் எல்லாம் வல்ல சர்வேஸ்வரனை பிரார்த்திக்கின்றேன் .. ஓம் தத்புருஷாய வித்மஹே ! மஹாதேவாய தீமஹி ! தந்நோ ருத்ரஹ் ப்ரசோதயாத் .. சோமவாரம் என்பது திங்கள் கிழமையைக் குறிக்கும் .. “ சோம “ - என்பது சந்திரனையும் குறிப்பதாக உள்ளது .. சந்திரனுக்கு தமிழில் திங்கள் .. மதி .. நிலவு .. என்ற பெயர்களும் உண்டு .. ஈசனையும் .. சந்திரனையும் குறிக்கும் சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடும் வழக்கம் புராண வரலாற்றைப் பின்பற்றியது .. ஒருமுறை தட்சனின் சாபத்தால் ஒளிகுன்றிய சந்திரனை தன் தலையில் சூட்டிக்கொண்டு சந்திரனின் பிறை தொடர்ந்து வளர அருள்செய்தார் ஈசன் .. இவ்வாறு ஈசன் சந்திரனை தலையில் சூட்டிக்கொண்ட தினமே சோமவாரதிங்கள் கிழமையாகும் .. சோமவார விரதம் மூலம் சிவனை வழிபடுவது மிகவும் எளிதானது .. உத்தமான விரதங்களுள் ஒன்று சோமவார விரதம் என்று வேதநூல்கள் கூறுகின்றன .. ஆலயத்தில் சுவாமிக்குமுன் பூஜை நேரத்தில் தீபாரதனைகள் செய்வார்கள் .. இதனை வெறும் சடங்காக நினையாமல் உலகின் தோற்றத்தையும் .. ஒழுக்கத்தையும் காட்டும் குறியீடாகக் கருதி இந்த தீபாராதனையை வழிபடல் வேண்டும் .. அதனால் சுகபோகமும் .. ஞானமும் கிட்டும் .. சோமவாரதினத்தன்று கணவனும் மனைவியும் இணைந்து கோவிலுக்குச் சென்று வருவது சிவசக்தியின் ஆசியால் காலம் முழுவதும் ஒற்றுமையாக கருத்துவேறுபாடின்றி இணைந்திருக்க வகைசெய்யும் .. மாத்ருகாரகனான சந்திரன் தாய் ஸ்தானத்தைக் குறிப்பவர் தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அவருடன் மனஸ்தாபம் இருந்தாலோ இந்தவிரதம் நிவர்த்தியைத் தரும் .. அனைவரும் சோமவார திங்களாகிய இன்று சிந்தையுள் உறையும் சிவனின் அன்பிற்கு உரியவர்களாகி சிவனது பொற்பாததில் சரணடைவோமாக .. ” ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE " AANI THIRUMANJANAM " .. WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD NATARAJA ( SHIVA ) MAY HE BLESS YOU & SHOWER YOU WITH GOOD STRENGTH .. PEACE AND MAY ALL YOUR WISHES COME TRUE .. " OM NAMASHIVAAYA " அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. இன்று சஷ்டித் திதியும் .. உத்திரம் நட்சத்திரமும் சேர்ந்து வருவது ஸ்ரீநடராஜப்பெருமானுக்கு ஓர் சிறப்புமிக்க நாளாகும் .. சிவாலயம் சென்று நடராஜபெருமானையும் .. சிவகாமியம்மையையும் வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் மனோதைரியமும் .. நல்லாரோக்கியமும் .. சகலசம்பத்துக்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் .. ஓம் சித்ஸபேசாய வித்மஹே ! சிதாகாசாய தீமஹி ! தந்நோ சபேச ப்ரசோதயாத் !! சிவபெருமானின் 64 மூர்த்திவடிவங்களில் மிகவும் அற்புதமானது நடராஜர் திருவுருவம் என்று போற்றப்படுகிறது .. இவரது நட்சத்திரம் திருவாதிரை .. இது வெப்பமானது .. அதற்கேற்ப சிவபெருமானின் கழுத்தில் தங்கிய விஷம் .. கையில் அக்னி .. உடலில் சுடுகாட்டுச் சாம்பல் .. என உஷ்ணமான திருமேனியனாக இருக்கிறார் . அவரைக் குளிவிப்பதற்காக வருடத்திற்கு ஆறு அபிஷேகங்கள் மிகச் சிறப்பாக நடைபெறுகின்றன .. நடராஜப் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறுமுறை விசேஷ அபிஷேகம் திருவிழாவாக நடத்தப்படுகிறது அவை - மார்கழி திருவாதிரை .. ஆனி உத்திர திருமஞ்சனம் .. இந்த இரு நாட்களிலும் சூரியோதயத்திற்கு முன்பே நடராஜருக்கு அபிஷேகம் செய்துமுடிப்பர் .. இதுவே ஆனித் திருமஞ்சனம் தவறாது அதிகாலை சிவாலயம் சென்று அபிஷேக ஆராதனைகளை தரிசிப்பதால் இப்பூவுலகில் கிடைத்தற்கரிய சகலபாக்கியங்களையும் பெற்று இன்புற்று வாழ்வர் .. சுமங்கலிப்பெண்கள் கலந்துகொண்டால் தீர்க்கசுமங்கலி பாக்கியத்தைப் பெறுவர் .. ஆடவர் மனதில் தைரியமும் .. உடல்பலமும்.. வளமும் கூடும் என்பது ஐதீகம் .. அபிஷேகத்திற்குப் பின் ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு பூஜை நடைபெறும் .. உச்சிவேளையில் ( மதியம் ) நடராஜர் ஆனந்தநடனம் ஆடியபடியே சித்சபையில் எழுந்தருள்வார் அவருடன் சிவகாமி அம்மையும் இருப்பார் .. பின் மஹாதீபாராதனை நடக்கும் .. அன்றிரவே கொடி இறக்கப்படும் .. நடராஜரின் திருப்பாதங்களில் வேதங்கள் சிலம்பாக ஒலிக்கிறது .. வலக்கை டமருகம் இசைக்கிறது .. இடக்கை அக்னியைத் தாங்கியிருக்கிறது .. அவரின் சிவந்த இதழ்கள் புன்முறுவலைக் காட்டுகின்றது .. பால்போன்ற வெண்ணீறு காற்றில் நறுமணம் பரப்புகிறது .. செஞ்சடை எட்டுத்திக்குகளிலும் விரித்தாடுகிறது வலக்கால் அசுரனை மிதித்து நிற்கிறது .. இடக்கால் குஞ்சிதபாதமாக ( தொங்கிய நிலையில் ) நமக்கு அருள்செய்கிறது .. “ இதயம் என்னும் கோயிலில் இறைவன் இடைவிடாமல் திருநடனம் ஆடிக்கொண்டே இருக்கிறார் “ இதைக்கண்டு தரிசித்தால் என்றும் நம் வாழ்வில் ஆனந்தமே ! “ ஓம் நமசிவாய “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..Today 8th day of our Viradham....Swamiye Saranam Iyyappa..Guruve Saranam Saranam