SWAMY SARANAM....GURUVE SARANAM....






ஒன்றை உணரா மனதிலே
நின்று போகும் ஆவலே
ஒன்றை உணர்ந்த பின்னிலே
வந்திடாதோ காவலே
கன்றை காக்க ஓடியே
வந்து தாங்கும் தாயைப் போல்
ஒன்றில் கலந்த மனதையே
நின்று தாங்கும் ஒன்றுமே 
அன்று போகும் சலனமும்
தீர்ந்திடாத துயரமும்...
சென்று ஒன்றில் கலந்ததால்
என்றும் உண்டு நன்மையே
ஒன்று நீயே என்பதால் 
ஒன்றி மனதில் வேண்டியே 
உன்னை இங்கு போற்றுவோம்
சரணம் என்று சொல்லுவோம்
சகலத்தீமை வெல்லுவோம்
பாலகன் நாமம் சொல்லியே
பாவ வினைகள் நீக்குவோம் 

SWAMY SARANAM... GURUVE SARANAM......,MALA DHARNAM AT SANNIDHANAM..PANVEL BALAGANE SARANAM IYYAPPA...












குருவின் கையாலே மாலையிட்டேன் இந்நாளில்
அனுதினமும் உனை துதித்து தொடங்கிடுவேன் விரதமே
பெருவழிப் பயணம் முழுதும்
வழித் துணையாய் வருவாய் பாலகா

தினம் தினம் உன் எழில் முகம் காண்கையிலே
என் எண்ணம் இலேசாகிப் பறக்குதய்யா
என்றுமே பழி பாவம் இல்லாத நல்ல
அமைதியைத் தாருமய்யா

வாய்மொழியின்றி நிற்கின்றேன்
வாஞ்சையோடு குரு செய்யும் பூஜையில் 
உந்தன் அழகினைப் பாடுதற்கு
உன்மத்தம் ஆகுதையா

இழந்திட ஏதுமில்லை
உந்தன் அருளொன்றே நிலையாகும்
உன்னை புகழ்ந்து பாமாலை நித்தமும் தருகின்றேன்
உந்தன் அருள் ஒன்றே போதுமைய்யா 

விதி மாற்றும் வள்ளலே
கதி  தந்த சீலனே –சபரி
பதி தன்னில் வாழ்கின்ற ஐந்து மலை வாசனே
சரணம் சரணம் உந்தன் பதியே சரணம்

SWAMY SARANAM...GURUVE SARANAM...MALADHARNA AT MUMBAI ...ALANGARAM BEFORE POOJA...SWAMY SARANAM....PANVEL BALAGARE SARANAM SARANAM...



சாமி சரணம் என்றால் பயமில்லை
சாமி சரணம் என்றால் சுயநலமில்லை
சாமி சரணம் என்றால் ஆணவம் இல்லை
சாமி சரணம் என்றால் பணிவு உண்டு
சாமி சரணம் என்றால் பொறுமை உண்டு
சாமி சரணம் என்றால் பிறர்நலம் உண்டு
சாமி சரணம் என்றால் தனிவழி இல்லை
சாமி சரணம் என்றால் எல்லாம் அவன் செயல்
சாமி சரணம் என்றால் ஆசை இல்லை
சாமி சரணம் என்றால் துன்பம் இல்லை
சாமி சரணம் என்றால் மரணமும் இல்லை
சாமி சரணம் என்றால் பிடிவாதம் இல்லை
சாமி சரணம் என்றால் மன்னிப்பு இருக்கும்
சாமி சரணம் என்றால் சாந்தம் இருக்கும்
சாமி சரணம் என்றால் சலனங்கள் இல்லை
சாமி சரணம் என்றால் எதிர்பார்ப்பு இல்லை
சாமி சரணம் என்றால் துன்பமும் இன்பம்
சாமி சரணம் என்றால் சரணாகதி