PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம் செய்வதன் மகிமை!

மனித இதயத்தை தசைநார்கள் சூழ்ந்துள்ளதைப் போல, நார்களால் சூழப்பட்ட தேங்காயைப் பக்தன் தேர்ந்தெடுக்கிறான். அவனது இதயத்தில் உள்ள களங்கமான எண்ணங்களை தேங்காயில் உள்ள நீருக்கு ஒப்பிடலாம். தேங்காயில் துவாரமிட்டு அதை வெளியேற்றி, நவநீதம் என்னும் சுத்தமான எண்ணங்களை பசு நெய்யாக உள்ளே ஊற்றுகிறான். தேங்காயின் துளையை அடைத்து ஐயப்பனின் திருவடியை மனதில் நினைத்து தலையில் வைக்கிறான். பக்தியுடன் சரணம் கூறி சுமந்து செல்கிறான். நெய்யை ஐயப்பனுக்கு அபிஷேகம் செய்கிறான். அதாவது, தனது உள்ளத்தில் உள்ள ஆழ்ந்த பக்தியை ஐயப்பனுக்கு காணிக்கையாக்குகிறான். இதன் காரணமாக ஜென்ம சாபல்யம் பெற்ற ஆனந்தம் அடைகிறான்.
Temple images



167th Sadguru Sri Thyagabrahma Aradhana - 2014 (21.1.2014)

All of us are aware of the glorious tradition of the musical tribute being paid to Saint Thyagaraja Swamy on Pushya Bahula Panchami, generally in January. This is conducted annually at Thiruvaiyaru, Thanjavur District, Tamil Nadu and also many centres throughout India and abroad.

On this day special abhishekam to his idol and unchavrithi from his house to the samadhi is also conducted. The main attraction of the Thyagaraja music festival is the group performance by the prominent musicians of the Pancharathna Krithis. To honor the works and pay homage to the great saint Thyagaraja, what can be a better idea than the performance of Pancharathna Krithis, his five compositions that came to be popularly known as the five gems. Thyagaraja is admired for his five gems even today. He is and will remain the role model for all those associated with Carnatic music.

The Pancharatna Krithis are:
Jagadananda Karaka - Raga Naatai,
Dudukugala - Raga Gaula,
Sadhinchene - Raga Arabhi,
Kanakana Ruchira - Raga Varali,
Endaro Mahanubhavulu - Raga Sri.

The Mahakaleshwar Temple is the most famous temple in the city of Ujjain. This temple of Lord Shiva is devoted to one of the twelve ‘Jyotirlingas’ in India. The temple is built in five levels and decorated with idols of deities like Omkareshwars Shiva, Parvati, Ganesh, Kartikeya and Shiva’s Bull – Nandi. The temple also has a towering ‘shikhara’.Its shikhara soaring into the skies, evokes primordial awe and reverence with its majesty. The Mahakal dominates the life of the city and its people, even in the midst of the busy routine of modern preoccupations, and provides an unbreakable link with past traditions. Bhasm Arti, one of the important ritual of this temple is a symbolic representation of Death and Life. This unusual sacrament that involves smearing the linga with hot ashes from the burning ghats is a mark of respect the Destroyer of the universe, Lord Shiva.

Mahakalam Lavanyam Madhura Karunarasa varithim |
Mahalingam Mangalaroopam Jyothir swaroopam sirasa namami||

With theblessings of our Guruswamy One more beautiful sabarimala season ends again one year of waiting. .. lord you are my life... you are everything.. I will remember what you have given experience while my journey to ur pilgrimage with my guruswamy ... swamiye sharanam ayyappa

திருவிடைமருதூர் தைப்பூசம் காவேரி ஆறு

பொங்கல், தைப்பூசம் விழாக்கள்


திருச்செந்தூரில் குவியும் பக்தர்கள்

நெல்லை : பொங்கல் மற்றும் தைப்பூசம் விழாக்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வருவதால் திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர். முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்குவது திருச்செந்தூர் ஆகும். குன்று இருக்கும் இடத்தில்தான் முருகன் இருப்பார். ஆனால் மாறாக கடற்கரையில் இருக்கும் திருச்செந்தூர் முருகனை தினமும் ஆயிரக்கணக்கானோர் தரிசனம் செய்கின்றனர். பொங்கலை முன்னிட்டு முருகனை வணங்கி விட்டுத்தான் வீட்டில் பொங்கல் இட வேண்டும் என்று மக்கள் குடும்பத்துடன் நடந்து பயணிப்பர். 

ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், சங்கரன் கோவில், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி, நெல்லை பகுதியில் உள்ள பக்தர்கள் நெல்லை - திருச்செந்தூர் மெயின் ரோடு வழியாக நடைபயணம் செய்கின்றனர். விதவிதமாக அலங் கரிக்கப்பட்ட சப்பரத்தினை வாகனத்தில் வைத்துக் கொண்டு வேல்முருகனுக்கு அரோகரா என்று கோஷ மிட்டபடி நடந்து வருகின்றனர். விதவிதமான காவடி எடுத்தும், ஒரு அடி முதல் 8 அடி வரையிலான வேல் குத்தி நடந்து வருகின்றனர். கடந்த ஆண்டு ஜனவரி 14ம் தேதி பொங்கலும், 27ம் தேதி தை பூசமும் வந்தது. இதனால் பக்தர்கள் இரு பிரிவாக பிரிந்தபடி முருகனை தரிசிக்க வந்தனர். 

ஆனால் இந்த ஆண்டு 14ம் தேதி பொங்கலும் 17ம்தேதி தைபூசமும் வருகிறது. இது பக்தர்களுக்கு பெரிதும் ஆனந்தம் அளித்துள்ளது. இதுகுறித்து ஒய்வு பெற்ற ஆசிரியர் நல்லபெருமாள் கூறுகையில், பெரும்பாலும் பொங்கலும், தைபூசமும் அடுத்தடுத்து வருவது அபூர்வம். இந்த ஆண்டு பொங்கலும், தைபூசமும் அடுத்தடுத்து வருகிறது. இதனால் இரு பண்டிகைக்கும் சேர்த்தே ஏராளமான பக்தர்கள் நடைபயணம் செய்து வருகின்றனர் என்றார். நடைபயணம் செய்யும் பக்தர்கள் முருகனுக்கு அரோகரா என கோஷமிட்டு செல்வதாலும், ஜொலிக்கும் மின்சார விளக்குடன் சப்பரத்தில் செல்வதாலும் நெல்லையில் இருந்து  திருச்செந்தூர் வரை சாலைகள் எல்லாம் மின் விளக்கால் அலங்கரிக்கப்பட்டது போல ஜொலிக்கிறது.

சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது


சபரிமலை, ஜன. 15-சபரிமலை பொன்னம்பல மேட்டில் மகர ஜோதி தோன்றியது

சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு பூஜை மிகவும் பிரச்சித்தி பெற்றது ஆகும். இந்த காலங்களில் நாடு முழுவதும் இருந்து பக்தர்கள் விரதமிருந்து மாலை அணிந்து இருமுடிதாங்கி சபரிமலைக்கு சென்று அய்யப்பனை தரிசித்து செல்வது வழக்கம். 

அதன்படி 2013–14–ம் ஆண்டுக்கான மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் கடந்த நவம்பர் மாதம் 15–ந்தேதி திறக்கப்பட்டது. 41 நாள் சிறப்பு பூஜைக்கு பின்னர் மண்டல பூஜை கடந்த மாதம் 26–ந்தேதி சன்னிதானத்தில் நடைபெற்றது.

அதன்பின்னர் சபரிமலை நடை அடைக்கப்பட்டு மீண்டும் மகர விளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30–ந் தேதி நடை திறக்கப்பட்டது. மகரவிளக்கு தினத்தில் அய்யப்பனுக்கு அணிவிப்பதற்காக திருவாபரணங்கள் கடந்த ஞாயிறன்று பந்தளம் வலிய கோயிக்கல் கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. முன்னதாக 11–ந்தேதி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு அய்யப்ப பக்தர் குழுவினரின் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி எருமேலியில் நடந்தது.

இந்த நிலையில், தொடர்ந்து நடைதிறந்து தீபாராதனை நடைபெற்றது. தீபாராதனை முடிந்து, சில நிமிடங்களில், பொன்னம்பலமேட்டில் மகர நட்சத்திரம் காட்சி தந்தது. தொடர்ந்து, மகரஜோதி மூன்று முறை காட்சி தந்தது. மகரஜோதி தரிசனத்தை லட்சகணக்கான மக்கள் பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர். அங்கு தரிசனத்திற்காக கூடியிருந்த பக்தர்கள் சாமியே... சரணம் அய்யப்பா... என மகர ஜோதியை தரிசனம் செய்தனர். 
சன்னிதானம் மட்டுமின்றி பண்டித்தாவளம், நீலிமலை உச்சி, மரக்கூட்டம், சபரி பீடம், அப்பச்சி மேடு ஆகிய இடங்களில் இருந்து மகர ஜோதியை காண வசதி செய்யப்பட்டு இருந்தது.


With four days to go for the January 14 Makaravilakku, the high point of the pilgrimage season, Sabarimala has turned into a sea of humanity with lakhs of pilgrims pouring in each day.

The heavy rush of Saranam-chanting pilgrims has made access to the temple tough and 12 to 16 hours of waiting in the queue for a darshan has become the norm. All entry points to the hills are choked with vehicles of all kinds arriving from across the country, especially Tamil Nadu, Andhra Pradesh and Karnataka. Police barricades that regulate the flow of crowds get broken frequently because of the push of the pilgrims.

velukudi vaikunda Ekadasi video


வைகுண்ட ஏகாதசி

வைகுண்ட ஏகாதசி அன்று செய்யக்கூடாதது
மார்கழித் திங்கள் உஷாக் காலத்தில் வைகுண்ட (ஆலய) வாசல்கள் திறந்தேயிருப்பினும்; பகவான் அதன் வழியே வெளியே வந்து காட்சி தரும் நாள் தான் வைகுண்டு ஏகாதசி ஆகும். அன்றைய தினம் அதிகாலையில் சொர்க்க வாசல் எனும் வடக்கு வாசல் திறந்திருக்கும் அதன் வழியே பகவான் எமக்கு அருள் மழை சொரிய வருகின்றார். 

அந்நேரமே சொர்க்க வாசல் திறப்பு விழா எனப்பெறுகின்றது. தாலா ஜங்காசுரனுடனும் (முரன்) அவனது மகன் மருவாசுரனுடனும் பரந்தாமன் போரிட்டுக் களைத்து ஒரு பெரிய குகையில் அயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கும் வேளையில் விஷ்ணுவின் ஆற்றல் ஒரு தெய்வீகப் பெண்ணாக உருவெடுத்து அசுரர்களை தன் ஓங்காரத்தால் பஸ்பமாக்கியது. 

விஷ்ணு விழித்து நிலைமையை உணர்ந்து அத்தேவதைக்கு ஏகாதசி எனப் பெயரிட்டு உன்னை விரதம் இருந்து போற்றுவோருக்கு நான் அனைத்து நன்மைகளையும் தருவேன்'' என வரம் அளித்து அச்சக்தியை மீண்டும் தன்னுள் ஏற்றுக் கொண்டார். 

எனவே ஏகாதசி எனும் சக்தி விழிப்புடன் இருந்து பரந்தாமனின் அருளும், வரமும் பெற்ற இந்நாளில் நாமும் கண் விழித்து விரதத்தை அனுஷ்டித்தால் பரந்தாமனின் அருள் பரிபூரணமாகக் கிடைக்கும் என்றும் நீங்காப்புகழுடன் அனைத்து ஐஸ்வரியங்களையும் பெற்று வாழலாம். 

வைகுண்ட ஏகாதசியன்று, திருவரங்கத்தில் சொர்க்கவாசல் திறக்கப்படுகிறது. காலப்போக்கில், வைணவக்கோயில்கள் அனைத்திலும் சொர்க்க வாசல் திறப்பது ஒரு திருவிழாவாகவே நடைபெறுகிறது. பெருந்திரளான மக்கள் இதில் பங்கு கொள்கின்றனர்.

எல்லையற்ற பலன்களை வைகுண்ட ஏகாதசி விரதம் தருவதால், இவ்விரதம் மிகச் சிறப்பாக மதிக்கப்படுகிறது. எனவே காயத்ரியை விட சிறந்த மந்திரமில்லை; தாயை விட சிறந்த தெய்வமில்லை; ஏகாதசியை விட சிறந்த விரதமில்லை என்ற வழக்கும் ஏற்பட்டது.
சபரிமலை, ஜன.5-சபரிமலையில் ரூ.6½ கோடி செலவில் மாளிகைப்புறம் கோவில்கள் நவீனப்படுத்தப்படுகின்றன

சபரிமலையில் உள்ள மாளிகைப்புறம் அம்மன் கோவில் மற்றும் உப கோவில்களை ரூ.6½ கோடி செலவில் நவீனப்படுத்த தேவசம் போர்டு தீர்மானித்துள்ளது.

சபரிமலையில், சாமி அய்யப்பனை தரிசனம் செய்த பக்தர்கள், மாளிகைபுறம் அம்மன் கோவிலில் தரிசனம் செய்வது வழக்கம். இந்த கோவில் பல ஆண்டுகாலமாக சீரமைக்கப்படாமல் அப்படியே இருக்கிறது. கோவிலை சுற்றிலும் மணி மண்டபம், உப தெய்வங்கள், நாகராஜர், மலை தெய்வங்கள், நவக்கிரகங்கள் அமைந்து உள்ளன.

இவற்றை சீரமைப்பதற்காக திட்டுகளை உடைத்து ஒரே சமதளத்தில் வாஸ்து சாஸ்திர அடிப்படையில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்குகிறது.

கடந்த 2010-ம் ஆண்டில் தேவசம் கமிஷனராக கே.ஜெயகுமார் இருந்தபோது தயாரிக்கப்பட்ட அறிக்கை திட்டப்படி மாளிகைப்புறம் கோவில்கள் கட்டப்பட வேண்டும் என்றும், கருவறை பகுதியை அடிப்படையாக கொண்டு உள்ளே பலிவட்டம் சுற்றுப்பிரகார வழி போன்றவை அமைக்கப்பட வேண்டும் என்றும் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டது.

இந்த புதிய திட்டப்படி மாளிகைப்புறம் கோவிலின் முன்புறம் உள்ள நடைப்பந்தல் மற்றும் பிரசாதம் தயாரிக்கும் இடம் ஆகியவற்றை அகற்றிவிட்டு, புதிய தூண்கள் கட்டப்பட்டு, சாமான்கள் வைக்கும் அறை, சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளது. சுற்றம்பலத்தின் வெளியே சீவேலிப்புரை மற்றும் வெளிப்பகுதியில் மணிமண்டபமும் அமைக்கப்படும். இவை ரூ.6½ கோடி செலவில் நிறைவேற்றப்படும்.

இதுபற்றி சபரிமலை கோவில் தந்திரி கண்டரரு மகேஸ்வரருவின் கருத்து என்ன? என்பதை கேட்டு அறிந்து கோவில்கள் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சபரிமலை “மாஸ்டர் பிளான்” என்ற புதிய திட்டப்படி அப்பம் -அரவணை பிரசாத தயாரிப்பு அமையும் இடமும் தேர்வு செய்யப்படும்.

அதுபோல் பஸ்மக்குளத்தின் சீரமைப்பு பணிகளை எந்த அளவில் நடைமுறைப்படுத்தலாம் என்றும் கலந்து ஆலோசனை நடத்தி மாற்றி அமைக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

14-ந்தேதி மகர விளக்கு பூஜை மற்றும் ஜோதி தரிசனத்திற்காக லட்சக்கணக்கிலான பக்தர்கள் சபரிமலைக்கு வருவார்கள் என்பதால், போக்குவரத்து வசதி, குடிநீர் வசதி, மருத்துவ வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளை கேரள அரசும், தேவசம் போர்டும் முழு வீச்சில் செய்து வருகிறது.

நிலக்கல், பம்பை மற்றும் சன்னிதானம் பகுதியில் உள்ள கடைகள், ஓட்டல்களில் பொருட்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகிறதா? தரமானவைதானா? என அதிகாரிகள் மற்றும் போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஏழு பிரகாரம் கொண்ட கோயில்


இந்தியாவிலேயே ஏழு பிரகாரங்களைக் கொண்ட கோயில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் மட்டுமே. இந்தப் பிரகராங்களின் வாசல் சுவர்களின் நடுவில் கோபுரம் அமைக்கப்பட்டிருக்கும். பொதுவாக முதன்மை வாசல் கிழக்கு நோக்கி இருக்க வேண்டும். ஆனால், இங்கு தெற்கு நோக்கி அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. கோயிலின் பரப்பு 6 லட்சத்து 31 ஆயிரம் சதுரஅடி. அதாவது 156 ஏக்கர். ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டதற்கு காரணம் உண்டு. உடலின் நடுவே ஆத்மா உள்ளது போல, கோயிலின் நடுவே பரமாத்மா இருக்கிறார். மனித உடல் ஏழு தாதுக்களால் ஆனதாகச் சொல்வதுண்டு. இதன் அடிப்படையிலேயே ஏழு பிரகாரம் அமைக்கப்பட்டது.

ஆஞ்சனேயர் செந்தூரமானது ஏன்?


அஞ்சனை மைந்தன் ஆஞ்சனேயன் சிவ சொரூபம் என்பார்கள். குழந்தை ஆஞ்சனேயர் சூரியனைப் பிடிக்கச் சென்று தாடை வீக்கம் பெற்று, அதனைத் தன் மாறாத அடையாளமாகவே கொண்டவர். இவர் செந்தூர ஆஞ்சனேயர் என்ற அடையாளமும் கொண்டவர்தான். அவரது தாடை வீக்கத்திற்குக் காரணம் தெரியும். செந்தூர நிறத்திற்குக் காரணம் என்ன?
இதற்கு காரணமாகக் கதை ஓன்றை சொல்கிறார்கள் வடநாட்டில். ஸ்ரீராமரை ஓரு கணம் கூட விடாமல் கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டே இருக்க விருப்பம் கொண்டவர் அனுமான்.
காட்டிலும், போரிலும் இருந்தவரை இதற்குத் தடையொன்றும் ஏற்படவில்லை. நாட்டிற்கு வந்து பட்டாபிஷேகத்திற்குப் பிறகு அன்னை சீதாப்பிராட்டியுடன் தனித்து இருக்க வேண்டிய காலமான இரவின் உச்சிக் காலமும் வந்தது. ஸ்ரீராமர் தன் அறையில் இருக்க, அவர் பாதத்தின் அருகே, ராமர் முகத்தையே பார்த்துக்கொண்டு அனுமன் அமர்ந்திருந்தாராம். சிறிது நேரத்தில் சீதா தேவி வர, அனுமன் எழுந்து வெளியே போகாமல் அங்கேயே அமர்ந்திருந்தாராம். கண்ணைச் சிறிதளவும் ஸ்ரீராமர் முகத்தைவிட்டு அவர் அகற்றவில்லை.
சீதா தேவி, அனுமனுக்கு விடை கொடுக்கக் கூறி கண் அசைத்து ஸ்ரீராமருக்குக் உணர்த்த, ஸ்ரீராமரும் அனுமனுக்குத் தெரிவிக்கும் முகமாக, “நெற்றி உச்சியில் சிவந்த குங்குமம் வைத்திருக்கும் சீதா தேவியுடன் இருக்கும் நேரமிது. அதனால் விடியற் காலையில் எழுந்து வா ஹானுமான்” என்கிறார்.
சீதா தேவியின் உச்சிப் பொட்டைப் பார்த்த அனுமன், கடைத் தெருவிற்கு பாய்ந்து ஓடிச் சென்றார். இரவானதால் பூட்டியிருந்த கடைகளின் கதவையெல்லாம் உடைத்து, ஓவ்வொரு கடையாக குங்குமம் எங்கே இருக்கும் என்று தேடினார். ஹோலிக்கு பூசப்படும் வண்ணப்பொடிக் கடை அரையிருளில் அவர் கண்ணில் பட்டது. கடைக் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே போனவுடன், அவரது மனதில் பளிச்சென்று எண்ணமொன்று தோன்றியது. அங்கிருந்த பொடியில் விழுந்து புரண்டார். உடம்பெல்லாம் பூசிக் கொண்டார்.
இப்பொழுது யாரால் தன்னை ஸ்ரீராமனிடம் இருந்து பிரிக்க முடியும் என்ற கனிந்த பக்தி எண்ணத்துடன், அவரது அறைக்குச் சென்றார். இதற்குள் மூன்றாம் சாமம் ஆகிவிட்டதால் கதவைத் திறந்து கொண்டு, தம்பதியராய் ஸ்ரீராமரும், சீதையும் வெளியே வந்தார்கள். அனுமனின் இந்த புதிய வண்ணத்தைப் பார்த்து இருவரும் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள். பின்னர் அனுமனிடம் காரணம் கேட்க, சீத்தம்மாவுக்கு உச்சிப் பொட்டு மட்டுமே குங்குமம். தனக்கு உடலெல்லாம் குங்குமம் எனவே தனக்கே ராமனுடன் எப்போதும் இருப்பதற்கான உரிமை உள்ளது என்று பணிவுடன் கூறியுள்ளார்.
அனுமன் பிரம்மச்சாரியாக இருப்பதால் அவருக்கு இவ்விஷயம் தெரியவில்லை என்று உணர்ந்த பின் இருவரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு “ஹனுமான் உன் உடம்பில் பூசப்பட்டு இருப்பது குங்குமமில்லை செந்தூரம்” என்று சொல்லி மீண்டும் சிரிக்கத் தொடங்கி விட்டார்களாம். ஸ்ரீராம பக்தியின் தீவிரத்தைக் காட்டும் செந்தூர ஆஞ்சனேயரின் பல திரு உருவத்தை, திருமலையில் காணலாம்.