PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022
குரு உபதேசம்: 
அடக்கம்:

அடக்க குணம் வருகிறது ரொம்பவும் கஷ்டம். அதுவும் கல்வி கற்க கற்க "தான் அறிவாளி" என்ற அஹங்காரமும் ஏறிக் கொண்டேதான் வரும். அடக்கம் வேண்டும் என்பதற்காகவேதான் "குருகுலவாசம்" என்று வைத்து, வீட்டை விட்டுப் பிள்ளைகளை அங்கே அனுப்பி வைத்தார்கள்.
குரு நல்லவராக இருந்தால் அவரிடம் பக்தியாய் இருப்பதில் நமக்கு என்ன பெருமை? யோக்கியதை இல்லாத ஒருவர் குருவாக இருந்தாலும் அவரிடம் அடங்கி இருந்தாலே மனது நல்ல பக்குவம் அடையும். நல்ல எண்ணம், சீர்திருத்தம் எதுவானாலும் அடக்கம் வேண்டும். அப்படி இருந்து கொண்டு செய்தால் சாஸ்திர விரோதமாகப் போக வேண்டியே வராது. நாம் நினை என்றால் மனம் ஒன்றை நினைக்க வேண்டும். நினைக்காதே என்றால் நினைக்காமல் இருக்கவேண்டும். அப்போதுதான் நமக்கு மனம் ஸ்வாதீனமாயிற்று. நமக்கு சித்த ஸ்வாதீனம் இருக்கிறது என்று அர்த்தம்.
மனசாட்சிக்கு எப்படித் தோன்றுகிறதோ அப்படிச் செய்கிறேன் என்று சொல்வது தப்பு. மனசு ஒரு தனி மனிதனைச் சேர்ந்தது. எனவே அது எவ்வளவு தூரம் அவனது சுயநலத்தை விட்டு விலகிப் பேசும் என்று சொல்ல முடியாது. வீடு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. துணி அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. உடம்பு அழுக்கு இல்லாமல் இருந்தால் போதாது. நம் மனம் அழுக்கு இல்லாமல் இருக்கவேண்டும்.

குருவின் துணையால் மட்டுமே நம்முடைய மனதில் உள்ள அழுக்குகளை போக்கும் உபாயங்களை அடையமுடியும்.

நம் நல்லெண்ணங்களில் ஆய்வுநடத்தி சரியான வழிகாட்டுதல் குருவினால் மட்டுமே தரமுடியும்.

குருவின் பாதாரவிந்தங்களில் சரணடைதல் ஒன்றே அனைத்து துன்பங்களையும் விடுவிக்கும்.
.

No comments:

Post a Comment