சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வியாழக்கிழமையாகிய இன்று அனைவராலும் வணங்கப்படும் குருநாதர் ஷீரடிபாபாவினதும் நாளும் ஆகும் .. சாயினாதரைத் துதித்து தங்களனைவருக்கும் மனதில் அமைதி கிட்டவும் .. வாழ்வில் அனைத்திலும் வெற்றியடைந்து தங்களது இலக்கை அடையவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் ஷீரடிவாஸாய வித்மஹே !
சச்சிதானந்தாய தீமஹி !
தந்நோ சாய் ப்ரசோதயாத் !! 

1 - பாபாவின் பொன்மொழிகள் -
நீ எப்போதும் வாய்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் .. நீ அளித்த வாக்குறுதிகள் யாவற்றையும் நிறைவேற்ற வேண்டும் .. 
விசுவாசமும் பொறுமையும் பெற்றிடு ..அப்போது நீ எங்கே இருந்தாலும் எல்லா நேரங்களிலும் நான் உன்னுடனேயே இருப்பேன் .. 

2 - சாயிநாமத்தை இடைவிடாமல் ஜபித்துக்கொண்டு சங்கடங்களை தைரியமாக நேருக்கு நேராக சந்தித்தால் எல்லா ஆபத்துக்களும் பறந்தோடிவிடும் .. சாயிநாமத்தின் சக்தி அவ்வளவு பிரமாண்டமானது .. (சாயி இராமாயணம்)

3 - எந்தவித சம்பிரதாயமான பூஜைமுறைகளையோ .. விரதங்களையோ .. எனது பக்தனிடமிருந்து நான் எதிர்பார்ப்பது இல்லை .. 
எந்த சூழ்நிலையிலும் என்மீது மாறாத நம்பிக்கை வைத்திருப்பவனையே மிகவும் நேசிக்கிறேன் .. (பாபா)

4 - பாபாவின் பாதங்களில் உங்கள் அகங்காரத்தை சமர்ப்பித்தால் தவிர ஒரு வேலையிலும் நீங்கள் வெற்றிபெற முடியாது .. அகங்காரத்தை ஒழிப்பவர்களுக்கு வெற்றி உறுதி அளிக்கப்படுகிறது .. (பாபா) 

பாபாவைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்திலும் வெற்றி பெறுவோமாக ! வெற்றி நிச்சயம் !! 
” ஓம் சாய் ராம் “ .. வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. MAY THE BLESSINGS OF SHIRDI SAI FILL YOUR LIFE WITH HAPPINESS AND OPEN ALL THE DOORS OF SUCCESS NOW AND FOREVER MORE .. " OM SAI RAM " ..

No comments:

Post a Comment