சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!!


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
வெள்ளிக்கிழமையாகிய இன்று தங்களனைவருக்கும் அனைத்து சங்கடங்களும் நீங்கி சகலசௌபாக்கியங்களும் 
மகிழ்ச்சியும் பெற்றிட வெற்றி விநாயகரைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
வக்ரதுண்டாய தீமஹி !
தந்நோ தந்தி ப்ரசோதயாத் !! .. 

சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டிப்பவர்கள் இன்று மாலையே விரதத்தை ஆரம்பிக்கலாம் .. 
ஒவ்வொருமாதமும் தேய்பிறையில் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி விரதத்தை “ சங்கடஹர சதுர்த்தி விரதம் “ என்பர் .. 
” சங்கடம்” என்றால் துன்பம் என்றும் .. “ஹர” என்றால் ஒழிப்பது என்றும் .. ‘சங்கடஹர’ என்றால் சங்கடங்களில் இருந்து விடுதலை .. துன்பங்களிருந்து விடுதலை என்பதாகும்.. 

இவ்விரதம் இருப்பதால் நினைத்த காரியம் கைகூடும் .. வீண்பழி அகலும் .. பகைவர்களும் நண்பர்களாவார்கள் .. தீவினை அகலும் .. மனச்சுமை நீங்கும் .. சனிபகவானின் பார்வையால் ஏற்படும் தோஷங்களும் .. சகலரோகங்களும் நீங்குகின்றன .. 

அன்னை பார்வதி தன் பதியை அடைய கணபதியே சங்கடஹர சதுர்த்தி விரதத்தைச் சொல்லி அருளினார் .. இந்திரன் .. சிவன்.. 
இராவணன் .. போன்றோர் இவ்விரதத்தினால் நற்பயன் அடைந்திருக்கின்றனர் .. அனுமன் சீதையைக் கண்டது .. தமயந்தி நளனை அடைந்தது .. அகலிகை கௌதமரை அடைந்தது .. பாண்டவர்கள் துரியோதனாதியரை வென்றது போன்றவை நிகழ்ந்ததும் சங்கடஹர சதுர்த்தி விரதமகிமையால்தான் .. 

கிரகங்களில் அழகோடு கவர்ச்சியும் இருந்ததால் சந்திரனுக்கு ஆணவம் ஏற்பட்டது .. சிறிய எலியின்மீது பெரிய விநாயகரின் நர்த்தனக்காட்சியைக் கண்டு ஆகாயத்தில் சந்திரன் பரிகசித்துச்
சிரித்தான் .. வெகுண்ட விநாயகர் சாபத்தால் சந்திரன் ஒளிமங்கிப்போனான் .. தேவர்கள் விநாயகரை சரண்புகுந்து சந்திரனை மன்னித்து அருளும்படி கூறினார்கள் .. விநாயகரும் சாந்தமடைந்து பதினைந்து நாட்கள் ஒளிமங்கிப்போகவும் .. பதினைந்து நாட்கள் ஒளி அதிகரிக்கவும் அருளினார் .. 

விநாயகரைப் போற்றுவோம் ! குடும்பத்தில் சுபீட்சமும் .. அனைத்து காரியங்களிலும் வெற்றி அடைந்திடுவோம் ! 
‘ ஒம் விக்னேஷ்வராய நமஹ ’ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD GANESH .. 
MAY HIS BLESSINGS BRING YOU ETERNAL SUCCESS IN YOUR CAREER TODAY AND FOREVER MORE .. " JAI GANESH "

No comments:

Post a Comment