சந்நிதானத்தில் இன்று அனுகிரஹ பூஜை..

பாலகரின் அனுகிரஹம்
பெற நான்
என்ன செய்ய வேண்டும்??

என் தலையிலே
உன்
இருமுடி பையை
ஆண்டாடு நான்
சுமக்க வேண்டும்!

உன் தலையிலே மின்னும்
வைர கீரிடமாய்
நான் இருக்க வேண்டும்!

உன் கண்ணில்
நான் இமையாய்
இருக்க வேண்டும்!

உன் நெற்றியில்
குருசுவாமி வைக்கும்
சந்தன பொட்டாக
நான் 
இருக்க வேண்டும்!

உன் விரலில்
அலங்கரிக்கும்
வைர மோதிரமாய்
நான்இருக்க வேண்டும்!

உன் கையில்
நான் ரேகையாய்
இருக்க வேண்டும்!

உன் காலில்
நான் கொலுசாய்
இருக்க வேண்டும்!

உன் காலில்
குரு அர்ச்சரிக்கும்
பூவாய் நான்
இருக்க வேண்டும்!

உன் உடலில்
நான் நிழலாய்
இருக்க வேண்டும்!

உன் உயிரில்
நான் ஜீவனாய்
இருக்க வேண்டும்!

குருவின் கையில்
சுடராய் நடனமிடும்
ஜோதியாய் நான்
இருக்க வேண்டும்!


பாலகரே.
நான் இப்படி எல்லாம்
இருக்க உன் வரம்
வேண்டும்...உன்
அனுகிரஹம் வேண்டும்!!

சுவாமியே சரணம் ஐயப்பா!! குருவே  சரணம் ஐயப்பா!!

















No comments:

Post a Comment