சுவாமியே சரணம் ஐயப்பா!! பன்வேல் பாலகன் நாமம் போற்றி!! குருவின் பாதார விந்தங்கள் போற்றி! போற்றி!! Swamiye Saranam Iyyappa!Panvel balagane saranam Iyyappa!! Guruve Saranam! Saranam


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. 
சனிக்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனுக்குரிய விரதமாகிய கார்த்திகை விரதமும் கூடிவருவதால் .. ஆலயம் சென்று முருகனைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய பொன்னாளாக மிளிரவும் .. மகிழ்ச்சிகரமான நன்னாளாக அமைந்திடவும் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! .. 

சிவபெருமானின் நெற்றிக்கண்ணிலிருந்து தோன்றிய ஆறு அருட்சுடர் சரவணப்பொய்கையில் வந்து தங்கி .. ஆறு குழந்தைகாளாக உருமாறி நிற்க .. அக்குழந்தைகளை கார்த்திகைப் பெண்கள் அறுவர் வளர்த்தனர் .. சிவபெருமான் அன்னை பார்வதிதேவியுடன் பொய்கைக்கு எழுந்தருளி உமாதேவியார் அக்குழந்தைகளை வாரி அணைக்க ஆறு உருவங்களும் ஒர் உருவாய் .. ஆறுமுகக் குழந்தையாய் தேவியின் திருக்கரங்களில் பேரொளிப் பிரகாசமாய் எழுந்தருளியது .. 

கார்த்திகைப் பெண்களால் வளர்க்கப்பட்டதால் அவர்களுக்கும் மங்களம் உண்டாக ” கார்த்திகேயன் “ என்ற திருநாமத்தைச் சிவன் சூட்டியருளினார் .. இந்நாளில் கந்தனைப் போற்றி வணங்கும் அனைத்து அடியார்களுக்கும் அனைத்து நலங்களும் பெற்று வாழ்வார்கள் என்று திருவாய் மலர்ந்தருளினார் ..

கந்தனைப் போற்றுவோம் ! அனைத்து நலங்களும் பெற்று மகிழ்ச்சிகரமாய் வாழ்வோமாக ! “ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் .. நலமுடனும் .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SATURDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE SHOWER YOU WITH WEALTH .. HEALTH .. AND HAPPINESS ..
" OM MURUGA " ..

No comments:

Post a Comment