SWAMIYE SARANAMIYYAPPA....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று ஏகாதசி விரதமும் வருவதால் விஷ்ணு ஆலயம் சென்று மஹாவிஷ்ணுவைத் தரிசிப்பது சாலச்சிறந்தது .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன்னாளாக அமைந்திடவும் .. மனநலமும் .. உடல்நலமும் ஆரோக்கியமாகத் திகழவும் பெருமாளைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் நமோ நாராயணாய வித்மஹே ! 
வாசுதேவாய தீமஹி ! 
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !! 

இன்று “ அபரா ஏகாதசி “ விரதம் .. இந்த ஏகாதசி விரதத்தினால் ஒருவர் மக்கள் மத்தியில் பேரும் .. புகழும் .. அடைவதோடு அளவில்லா செல்வத்தையும் பெறுவர் என்று ஞான நூல்கள் கூறுகின்றன .. இன்றைய நாளில் மஹாவிஷ்ணுவை திரிவிக்ரமனாக வணங்கவேண்டும் .. 

இந்த ஏகாதசிவிரதம் ஒருவர் செய்த பாவங்கள் அனைத்தையும் அழிப்பதோடு அவருக்கு அளவில்லா செல்வத்தையும் வாரிவழங்குவதால் இப்பெயர் ஏற்பட்டது ..

அதோடு இந்த அபரா ஏகாதசி பிரபாவத்தால் பிரம்மஹத்தி ..
பிறரை நிந்திப்பது .. போரில் புறமுதுகிடுதல் .. குருநிந்தனை .. பிசாசு பிறவி .. போலிமருத்துவம் செய்தல் .. போலிஜோதிடம் கூறுதல் .. போன்ற பாவங்களிலிருந்தும் விடுதலை அளிப்பதோடு அவர்களுக்கு சுவர்க்கப்ராப்தியை அளிக்கவல்லது என்று ஸ்ரீகிருஷ்ணர் யுதிஷ்டிரமகாராஜாவிற்கு அவருடைய வேண்டுதலின் பெயரில் எடுத்துரைத்தது .. 

மஹாவிஷ்ணுவை பக்திசிரத்தையுடன் வணங்கி.. வழிபட்டு சகலபாவவினைகளையும் நீக்குவோமாக .. 
“ ஓம் நமோ நாராயணா “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY AND " APARA EKADASI " TOO .. MAY LORD VISHNU PROTECT YOU AND BLESS YOU EVERYDAY AND MAY HAPPINESS & PEACE SURROUND YOU .. ' OM NAMO NAARAAYANAA ' ..

No comments:

Post a Comment