SWAMIYE SARANAM IYYAPPA


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. திங்கட்கிழமையும் .. சோமவாரவிரதமும் .. பிரதோஷமும் சேர்ந்து வருவது அதிவிசேஷமாக அமைந்துள்ளது .. சிவாலயம் சென்று மாலைவேளையில் ( 4.30 - 6.00 மணிவரையிலான பிரதோஷவேளை ) சிவனையும் .. நந்தீஸ்வரரையும் தரிசிப்பது மங்களங்களைத் தரும் .. 
இன்றையநாள் தாங்கள் எடுக்கும் அனைத்து காரியங்களும் வெற்றியளிக்க இறைவனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே !
மஹாதேவ
ாய தீமஹி !
தந்நோ ருத்ர ப்ரசோதயாத் !! .. 

மூவுலகிற்கும் ஏற்படவிருந்த பேரழிவை சிவபெருமான் தன்னகத்தேயிருத்தி காத்தவேளையே பிரதோஷவேளை .. 
குறிப்பாக 4.30 - 6.00 மணிவரையிலான காலமே பிரதோஷவேளை .. 

பிரதோஷம் என்னும் இவ்விரதம் சிவமூர்த்திக்கு உரிய விரதங்களில் தலையாயது .. நந்திதேவருக்கு ‘ருத்ரன்’ என்றொரு பெயரும் உண்டு .. ‘ருத்’ என்றால் - துக்கம் ..
‘ரன்’ என்றால் - நீக்குபவன் .. துக்கத்தை விரட்டுபவன் என்று பொருள் .. நந்திதேவருக்கு அருகம்புல் மாலையிட்டு நெய்விளக்கேற்றி வழிபடவும் .. சகல துக்கங்களும் பனிப்போல் நீங்கிவிடும் .. 

நந்தீஸ்வரரின் கொம்புகளுக்கு இடையில் சிவனுக்கு நடக்கும் அபிஷேகத்தைக் கண்டு தரிசிப்பவர்களுக்கு அனைத்து குறைகளையும் களைந்து நிறைவினைத் தரும் .. 

சிவனைப் போற்றுவோம் .. இகம் .. பரம் .. வீடு என்ற மும்நலங்களையும் பெற்று இனிதே வாழ இறைவன் அருள்புரிவாராக .. “ ஓம் நமசிவாய “ .. 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED MONDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SHIVA .. 
MAY HE BE WITH YOU IN EACH STEPS YOU TAKE TODAY AND FOREVER MORE .. " OM NAMASHIVAAYA
" ..

No comments:

Post a Comment