SWAMIYE SARANAM IYYAPPA.....


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கு அதிபதியாகிய முருகப்பெருமானுக்கு உகந்த நாளாகும் .. தங்களனைவருக்கும் இன்றையநாள் ஓர் இனிய நன் நாளாக அமைந்திடவும் .. சகலவளங்களும் .. நலங்களும் பெற்று இனிதே வாழ்ந்திட வாழ்த்துகிறேன் .. கந்தனை வணங்குகின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி !
தந்நோ சுப்ரமண்ய ப்ரசோதயாத் !! ..

“ சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை .. சுப்பிரமணியருக்கு 
மிஞ்சிய தெய்வமில்லை “ .. 

கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகன் .. முருகனை நினைந்து விரதமிருந்தால் மனதிலும் .. குடும்பத்திலும் அமைதி நிலவும் ..

நாம் முருகனாய் உணர்ந்த அம்மாபெரும் சக்தியை ஸ்கந்தன் என்று உணர்ந்தனர் வேதம் அறிந்த ஞானிகள் .. ஸ்கந்தன் .. கார்த்திகேயன் ஒரு போர்க்கடவுள் என்பதையும் .. “மங்கள்” என்று வடமொழியில் அழைக்கப்படும் செவ்வாய் கிரகத்தின் அதிபதி என்றும் கண்டுகொண்ட வேத மனம் .. அவரை 
“மங்களேஸ்வரர்” என வணங்கி நல்வாழ்வு பெற்றது .. 

முருகனைப் போற்றுவோம் ! வாழ்வில் அமைதி பெறுவோமாக ! “ ஓம் முருகா “ 

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA ..
MAY HE BLESS YOU WITH HAPPINESS PEACE AND PROSPERITY TODAY AND FOREVER MORE .. " OM MURUGA "

No comments:

Post a Comment