GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A PLEASANT DAY WITH THE DIVINE BLESSINGS AND GUIDANCE OF LORD VISHNU .. MAY HE SHOWER YOU WITH PEACE .. HAPPINESS AND GUARD YOU FROM ALL EVIL .. NEGATIVE FORCES TOO ..
" OM NAMO NAARAAYANAAYA "
" OM NAMO NAARAAYANAAYA "
அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஈரேழு உலகங்களையும் சகல உயிர்களையும் காத்தருளும் ஸ்ரீமண் நாராயணனுக்கு உகந்த நாளாகிய இன்று .. நினைத்தகாரியங்கள் அனைத்தும் வெற்றிபெறவும் .. நல் ஆரோக்கியத்தையும் தங்களனைவருக்கும் தந்தருளுமாறு பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நமோ நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
பொருள் - நாராயணனை அறிந்து கொள்வோமாக ! வாசுதேவன்மீது தியானம் செய்கிறேன் ! விஷ்ணுவாகிய அவன் நம்மைக்காத்து அருள்புரிவானாக !
” விஷ்ணு “ என்றால் எங்கும் வியாபித்திருப்பவர் என்று பொருள்படும் .. வெண்மை நிறம்கொண்ட பாற்கடலில் வீற்றிருப்பதால் அவர் நாராயணன் என்றும் அழைக்கப்படுகிறார் ..
” நாரம் “ என்றால் - வெண்ணிற நீர் என்று பொருள் ..
“ அயனம் “ என்றால் - இடம் என்று பொருள்படும் .. மஹாவிஷ்ணு வைணவ சமுதாயத்தின் நாயகனாக விளங்குகிறார் .. அவரை வழிபட்டால் வைகுண்டத்தை அடையலாம் ..
” நாரம் “ என்றால் - வெண்ணிற நீர் என்று பொருள் ..
“ அயனம் “ என்றால் - இடம் என்று பொருள்படும் .. மஹாவிஷ்ணு வைணவ சமுதாயத்தின் நாயகனாக விளங்குகிறார் .. அவரை வழிபட்டால் வைகுண்டத்தை அடையலாம் ..
பக்திமார்க்கத்தை விரதமாகக் கொண்டது வைணவம் .. இதில் விக்கிரக ஆராதனைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது .. பரிசுத்தமான பக்தியுடன் மஹாவிஷ்ணுவிடம் சரணாகதி அடைந்துவிட்டால் பக்தனின் அகங்காரம் அழிந்து ஜீவாத்மா பரமாத்மாவுடன் ஒன்றிவிடுவது சாத்தியம் என்கிறது வைணவம் .. வைணவ வழிபாட்டில் “ ஓம் நமோ நாராயணாய என்ற அஷ்டகாட்சர மந்திரம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது ..
விஷ்ணுபகவானின் பத்து அவதாரங்கள் -
இந்துமதத்தின் பலபிரதான கடவுள்கள் முக்கிய அவதாரங்கள் எடுத்துள்ளனர் .. விஷ்ணுபகவானோ பத்து அவதாரங்களை எடுத்துள்ளார் .. மச்ச .. கூர்ம .. வராக .. நரசிம்ம .. வாமன .. பரசுராம .. ராம .. பலராம .. கிருஷ்ண
கல்கி .. ஆகியவைகள்தான் அந்த அவதாரங்கள் ..

விஷ்ணுபகவானின் உறைவிடத்தை “ பரமபத்மம் “ என கூறுவார்கள் .. அதாவது உச்சவானளாவிய உறைவிடம் மோட்சம் பெறுகிற ஆன்மாக்கள் .. இங்கேதான் வாழ்கின்றன ..
தன்மனைவியான லக்ஷ்மிதேவி இல்லாமல் விஷ்ணுபகவானைப் பார்க்கமுடியாது .. அனைத்து படைப்பாற்றல் திறனுக்கும் லக்ஷ்மிதேவியின் ஆற்றல் திறனே வேராக உள்ளது ..
பெரும்பாலும் நான்கு கைகள் உள்ளபடிதான் விஷ்ணுபகவான் சித்தரிக்கப்பட்டுள்ளார் .. ஒவ்வொரு கையும் கீழ்கூறியவற்றை பிரதிபலிக்கிறது ..
கடமை .. வெற்றி .. மற்றும் பொருட்செல்வம் .. இன்பம் மற்றும் விடுதலை ..
கடமை .. வெற்றி .. மற்றும் பொருட்செல்வம் .. இன்பம் மற்றும் விடுதலை ..
தினமும் இறைவழிபாடு செய்யும்போது விஷ்ணுபகவானின் பலமந்திரங்களைச் சொல்லி பூஜையின் முடிவில் கற்பூரதீபம் காட்டும்போது விஷ்ணுகாயத்ரி மந்திரத்தைச் சொல்லவேண்டும் .. இது சிறந்த பலனைத் தரும் .. இவ்வாறு செய்வதால் ஆபத்துக்களில் இருந்து விடுபடலாம் .. உலக இன்பங்களைப் பெறலாம் .. மறுபிறவி நல்லதாக அமையும் .. பாவங்கள் அகலும் ..
விஷ்ணுபகவானைப் போற்றுவோம் ! வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிடுவோமாக !
” ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும்
நலமுடனும் ..
” ஓம் நமோ நாராயணாய “ வாழ்க வளமுடனும் .. என்றும்
நலமுடனும் ..
No comments:
Post a Comment