PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....TODAY THIRDDAY VIRADHAM.....PANVEL BALANGANE SARANAM IYYAPPA..GURUVE SARANAM SARANAM

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURUGA AND SABARI IYYAN.... MAY HE ILLUMINATE YOUR LIFE WITH HAPPINESS AND
PROSPERITY .. " OM MURUGA " 

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..இன்று மூன்றாம் நாள் விரதம் தொடர்கிறது. சந்நிதானத்தில் மாலை போட்டுகொண்டு பன்வேல் பாலகனை வேண்டி விரதம் இருந்து வருகிறோம்.....





  செவ்வாய்க்கிழமையாகிய இன்று செவ்வாய்க்கே அதிபதியாகிய கந்தவேளின் அருட்கடாக்ஷ்த்தைப் பெற்று 
தங்களனைவரது கிரகதோஷங்கள் யாவும் நீங்கி செல்வாக்கும் .. சொல்வாக்கும் .. செல்வமும் என்றும் நிலைத்திட முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ் ப்ரசோதயாத் !! 

பிரணவசொரூபியான முருகப்பெருமானிடத்தில் மும்மூர்த்திகளின் அம்சமும் ஒருங்கே நிறைந்துள்ளது .. 
காக்கும் கடவுளான - முகுந்தன் ..
அழிக்கும் மூர்த்தியான - ருத்ரன் ..
படைக்கும் கடவுளான - கமலோற்பவன் .. ஆகிய மும்மூர்த்திகளின் திருநாமங்களின் முதல் மூன்று எழுத்துகள் ஒன்றிணைந்ததே “ முருகா “ என்னும் திருநாமம் .. 

1 - இருள்படைத்த உலகம் ஒளிநிறைந்து விளங்க ஒளிதருகிறது ஒருதிருமுகம் .. இத்திருமுகம் நமது அஞ்ஞானத்தைப் போக்கும் ஞானக்கதிராக விளங்குகிறது 

2 - அன்பர்களுக்கு இனிய தோற்றமளித்து அன்புடையோர்க்கு வரம்தந்து அருளுகிறது வேலவனின் இரண்டாவது திருமுகம் .. 

3 - வேதமந்திர விதிகளுக்கு ஏற்ப வேள்விகளைக் காப்பது கந்தனின் கருணைமிகுந்த மூன்றாவது திருமுகம் ..

4 - நம் அறிவுக்கு எட்டாத விஷயங்களை விளக்கி அருள்புரிந்து ஞானம் பொழிவது ஞானபண்டிதனின் நான்காவது திருமுகம் ..

5 - துஷ்டசம்ஹார சிஷ்டபரிபாலகராக வீரத்தை விளங்கச்
செய்வது ஐயனின் ஐந்தாவது திருமுகம் .. 

6 - தெய்வயானை .. வள்ளியம்மை என்னும் கிரியாசக்தி ..
இச்சாசக்திகளைக் கொஞ்சிமகிழ .. கோடி சூரிய ஒளிகாட்டும் அழகுமுகம் ஆறாவது திருமுகம் .. 

இவ்வாறு ஆறுதிருமுகங்களைப் பெற்ற கந்தப்பெருமான் பன்னிரெண்டு திருக்கரங்களோடு நீலமயில்மீது எழுந்தருளி நமக்கு அருள்பாலிக்கிறார் .. நீலமயில் ஓங்காரசொரூபம் ! ஓங்காரமே பிரம்மம் ! அகர .. உகர .. மகார ஒலிகள் கூடியதுதான் ஓங்காரம் .. இந்த தத்துவம்தான் முருகன் .. முருகா ! என்று மனமுருகிச் சொன்னாலே முருகனின் திருவருள் நம்மை நாடிவரும் .. 

” சரவணபவ “ என்னும் சடாக்ஷ்ரமந்திரத்தை மனதில் நினைத்து “ குஹாய நம ஓம் “ என்று ஜபித்தவுடன் அவன் ஓடோடி வந்து அருள்புரிவான் .. 

முருகனின் ஆறுபடைவீடுகளை நினைத்தாலே !
மனம் ஆறும் ! நமது உடலில் ஆறுவிதமான ஆதாரங்கள் உண்டு .. முருகப்பெருமான் ஆறுபடை வீடுகளிலும் இந்த ஆதாரத்தைக் கொண்டுதான் எழுந்தருளி உள்ளார் .. 

திருப்பரங்குன்றம் - மூலாதாரம் .. 
திருச்செந்தூர் - சுவாதிஷ்டானம் ..
பழனி - மணிபூரகம் ..
சுவாமிமலை - அநாகதம் 
திருத்தணி - விசுக்தி ..
பழமுதிர்சோலை - ஆக்ஞை .. 

முருகா ! முருகா ! என்று மனமுருகி போற்றுவோம் ! நிலையான இன்பத்தைத் தந்தருளி நம்மைக் காத்தருள்வான் வேலவனே ! 
“ குஹாய நம ஓம் “ .. வாழ்க வளமுடனும் என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment