கண்களின் வாட்டத்தை 
உன் எண்ணங்கள் அறிந்திடுமே 
பண்களின் வரிகளிலே 
பரிதவிப்பு நிறைந்திடுமே 

பன்வேலில் அமர்ந்து நீ

பாவத்தை தீர்கின்றாய்
எல்லாமே அறிந்தவன் நீ 
அதனை தீர்க்க தெரிந்தவன்  நீ 
பொல்லாத உலகத்தில் 
பழுதோடு வாழ்கின்றோம் 
புவியோரைக் காக்க வந்த 
புண்ணியா உந்தன் 
கழல் பணிந்து நிற்கின்றோம் 
கண் திறந்து பாராயோ
அடியவரின் இன்னல் தீர
கடுகியே வாராயோ
படியழந்த பரமனும் நீ
பாவம் போக்க வந்த குருவும் நீ

குருவின் மூலமாக

குறை தீர்க்கும் கடவுள் நீ
விளக்கேற்றி எம் இருளகற்றினீர்
உமதாணை வழி நடந்தோம்
எமதாருயிர் பாலகனே
எங்களுக்கு நீர் பொறுப்பு

ற்குருநாதனின் பாதம்

பணிகின்றோம் பரிவுடன்

எமை காப்பாய்....




No comments:

Post a Comment