PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

PANV EL BALAGANE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. SATURDAY IS THE MOST AUSPICIOUS DAY TO WORSHIP LORD SHANIDEV & SEEK HIS DIVINE BLESSINGS .. LORD SHANIDEV OR PLANET SATURN IS THE SON OF LORD SURYA & CHAAYA AND THE BROTHER OF LORD YAMA .. THE GOD OF DEATH .. LORD SHANI PLAYS THE ROLL OF A JUDGE LIKE LORD YAMA THE DIFFERENCE IS THAT WHILE LORD SHANI REWARDS OR PUNISHES A PERSON AS PER HIS / HER DEEDS DURING HIS LIFETIME .. BUT LORD YAMA REWARDS OR PUNISHES A PERSON AFTER DEATH .. IT IS BELIEVED THAT DEVOTEES OVERCOME PROBLEMS RELATED TO OCCUPATION .. FINANCES MENTAL STATE .. SOCIETY .. FAMILY & BODY BY WORSHIPPING LORD SHANI .. DURING SHANIDASHA PERIOD TRY TO DONATE FOOD & CLOTHES TO THE POOR & ON SATURDAYS VISIT NAVAGRAHA TEMPLE & DO THE RITUALS TOO & AVOID ARGUMENTS AT WORK PLACE .. SIGNING DOCUMENTS .. DRIVING .. ETC .. MAY SHANIDEV PROTECT YOU FROM ALL EVIL FORCES & BLESS YOU WITH GOOD HEALTH .. WEALTH & HAPPINESS .. " JAI SHANIDEV "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
சனிக்கிழமையும் .. புரட்டாதிமாதசனி இரண்டாம் வாரமுமாகிய இன்று சனிபகவானைத் துதித்து தங்களனைவரது கிரகதோஷங்களும் நீங்கி சௌபாக்கியமான வாழ்வு மலர்ந்திட பிரார்த்திக்கின்றேன்

நீலாஞ்ஜன ஸமாபாஸம் !
ரவிபுத்ரம் யமாக் ரஜம் ! 
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம் ! 
தம் நமாமி ஸனைச்ரம் !!

பொருள் .. //
மைபோன்று கருமைநிறம் கொண்டவனே ! சூரியனின் மைந்தனே ! எமதர்மனின் சகோதரனே ! சாயாதேவியின் வயிற்றில் பிறந்தவனே ! மெதுவாகச்சஞ்சாரம் செய்பவனே ! சனிபகவானே ! உன்னைப் போற்றுகிறேன்!

நவகிரகங்கள் எனப்படும் ஒன்பது கிரகங்களில் மூன்று கிரகங்கள் தீய பலன்கள் அளிப்பதில் வலிமை வாய்ந்தவை
அவை - ராகு .. கேது .. சனி .. என்பனவாம் .. இவைகளில் முதன்மையானது சனி என்ற சனீஸ்வரபகவான் தான் ..
சனீஸ்வரபகவானின் பிடியிலிருந்து யாரும் தப்பமுடியாது என்பர் .. 

பன்னிரெண்டு ராசிகளில் உள்ள ராசிக்காரர்களுக்கு சுமார் ஏழுராசிகளின் அமைப்பு உள்ளவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் ஏழரைசனி .. கண்டசனி .. அஷ்டமசனி போன்ற பாதிப்பு இருந்துகொண்டேயிருக்கும் .. இதனால் அவர்களுக்கு வாழ்வில் எடுத்தகாரியங்களில் தோல்வி ..
பணமுடக்கம் .. வம்பு .. சண்டை .. விரக்தி .. தொழில்முன்னேற்றமின்மை .. எதிர்காலமே சூன்யமானது போன்ற இன்னல்களுக்கு ஆட்பட்ட வாழ்க்கையை மிகவும் சிரமமாக அனுபவித்து கொண்டிருப்பார்கள் .. 

சனீஸ்வரர் அவரவர் வினைக்கேற்ப பலன்களை வழங்குவதில் நீதிதவறாதவர் .. இவரது தினமான சனிக்கிழமைகளில் விரதமிருந்து சாயாபுத்ரனை வழிபடுவோருக்கு நீண்ட ஆயுளும் .. துன்பமில்லதாத வாழ்வும் கிடைக்கும் .. ஒவ்வொரு சனிக்கிழமைகளிலும் விரதமிருக்க முடியாதவர்கள் .. புரட்டாதி சனிக்கிழமைகளில் விரதமிருந்து விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் செய்வது நன்மையைத் தரும் .. 

சனிபகவானுக்குரிய தானியம் கறுப்பு எள் .. அதனால் எள்ளைப்பொட்டலமாகக் கட்டி .. மண்சிட்டிகையில் நவக்கிரகத்திற்கு முன்னால் வைத்து எரிந்து போகும்வரை நல்லெண்ணைவிட்டு எரிக்கவேண்டும் .. எள்ளுச்சாதம் நிவேதனமாகச் செய்து காகத்திற்கு வைத்துவிட்டு பிறகு மதியம் உண்ணவேண்டும் .. 

சனிபகவான் .. // ..
பாகுபாடு இல்லாத தர்மவான் .. நீதிமான் .. என்று சனீஸ்வரபகவானை சொல்லலாம் .. ஒருவருக்கு அவரவர் கர்மவினைப்படி புண்ணியபலத்திற்கேற்ப நன்மை .. தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் ! சனியே ! 

சர்வமுட்டாள்களைக்கூட மிகப்பெரிய பட்டம் .. பதவி .. என்று அமர வைத்துவிடுவார் .. அதேநேரத்தில் அதிபுத்திசாலி .. பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கிவீசிவிடுவார் .. ஏழை பணக்காரன் .. படித்தவன் .. படிக்காதவன் .. பதவியில் இருப்பவன் .. இல்லாதவன் .. என்ற வித்தியாசம் எதுவும் சனிபகவானுக்கு கிடையாது பலகாரியங்களை கண் இமைக்கும்நேரத்தில் நடத்திக்காட்டும் சர்வ வல்லமைபடைத்த “ ஈஸ்வர பட்டம்” பெற்ற ஒரே கிரகம் சனியாகும் .. 

ஒருவருக்கு கெட்டநேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்திருக்கும்
அதேநேரத்தில் சனியால் யோகபலன்கள் அனுபவிக்கவேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல் 
வல்லமை சனிபகவானுக்கு உண்டு .. ஆகையால்தான்
“ சனியைப்போல் கொடுப்பவனும் இல்லை ! என்றும் சனிகொடுத்தால் அதை யார் த்டுப்பார் “ என்ற ஜோதிட சொற்தொடர்களும் ஏற்பட்டன .. 

பரிகாரம் ..// ..
பார்வையற்றோர் .. மாற்றுத்திறனாளிகள் .. நோயாளிகள் முதியோர்கள் .. ஆதரவற்றோர் .. கடின உழைப்பாளிகள்
தொழிலாளிகள் .. பாரம்தூக்குவோர் .. துப்புரவு தொழிலாளிகள் போன்றவர்களுக்கு செய்யும் உதவியும் 
தோண்டும் ..ஏழைகளுக்கு அன்னதானம் கொடுப்பதும் சனீஸ்வரருக்கு மிகவும் பிடித்தமானதாகும் .. 

சனிக்கிழமைகளில் ஆலயம் சென்று தவறாமல் எள் .. நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபாடு சிரமங்கள் பலமடங்கு குறைந்து சனிபகவானின் அனுக்கிரகமும் கருணையும் பெற்று அனைத்து தோஷங்களிலிருந்தும் நிவாரணம் பெறுவோமாக .. 
“ ஓம் சனீஸ்வராய நமஹ “ .. வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment