PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. ACCORDING TO HINDU BELIEFS OBSERVING THE " DURVA ASHTAMI " WITH FULL DEVOTION BRINGS PROSPERITY AND PEACE IN ONE'S LIFE .. THE RITUALS IS MAINLY OBSERVED BY WOMEN .. MAY GODDESS " MAA LAKSHMI " & " LORD GANESHA " SHOWER YOU WITH ABUNDANT BLESSINGS WITH PEACE .. LOVE & HAPPINESS .. " JAI LAKSHMI GANESHAAYA NAMAHA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. சர்வமங்களங்களையும் அள்ளித்தரும் வெள்ளிக்கிழமையாகிய இன்று .. தேய்பிறை அஷ்டமித் திதியும் .. தூர்வாஷ்டமியும் அனுஷ்டிக்கப்படுகின்றது .. 
இன்றைய நாள் தங்களனைவருக்கும் ஓர் இனிய பொன்னாளாக மிளிரவும் .. மகிழ்ச்சியும் .. நிம்மதியும் தங்கள் வாழ்வில் நிலைத்திடவும் விநாயகப்பெருமானையும் .. அன்னை மஹாலக்ஷ்மியையும் பிரார்த்திக்கின்றேன் .. 

புரட்டாதி தேய்பிறை .. வளர்பிறைகளில் விநாயகருக்கும் அன்னை மஹாலக்ஷ்மிக்கும் உகந்த தூர்வாஷ்டமி 
( துர்வாஷ்டமி ) அனுஷ்டிக்கப்படுகின்றது .. புரட்டாதி வளர்பிறை அஷ்டமியில் துவங்கி விநாயகரை அருகம்புல்லால் அர்ச்சித்துவர உடல் வலிமை உண்டாகும் .. 

அருகம்புல்லை “ தூர்வை “ என்பார்கள் .. அதை லக்ஷ்மிசொரூபமாக உபயோகிக்க வேண்டுமென்று வேதம் உபதேசிக்கிறது .. தூர்வையைப் புகழும்வகையில் வேதத்தில் பலமந்திரங்கள் உள்ளன .. 

அருகம்புல்லை தினமும் விநாயகப்பெருமானுக்கு அர்ப்பணித்த பிறகு தலையில் வைத்துக்கொள்வதால் துர்க்கனவுகள் விலகி நன்கு உறக்கம்வரும் .. துர்க்கையைத் தவிர மற்ற அனைத்து தேவதைகளுக்கும்
தூர்வையால் அர்ச்சனை செய்வது சிறந்தது .. 

உலகிலுள்ள ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு .. அவ்வகையில் தூர்வையை ஆராதிக்கும் தினமும் இன்றாகும் .. இதற்கு தூர்வாஷ்டமி என்று பெயர் .. இந்த விரதத்தை எல்லோரும் கடைபிடிக்கலாம் .. குறிப்பாக பெண்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டும் ..இவ்விரதம் பெண்களுக்கென்றே விதிக்கப்பட்ட ஓர் உன்னதமான விரதமாகும் .. இவ்விரதத்தை கடைபிடிப்பதால் சகலசௌபாக்கியங்களும் கிடைக்கும் .. எல்லா இடத்திலும் உணவு .. நீர் .. ஆடை நிறைவாகக் கிடைப்பதற்கும் நீண்ட ஆயுளுடைய புத்திமான்களை புத்திரர்களாகப் பெறுவதற்கும் .. நினைத்தகாரியங்கள் நிறைவேறுவதற்கும் .. இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள்

“ தூர்வாஷ்டமி தூர்வையைப் போற்றும் மந்திரம் ” ..

தூர்ஸ்வப்னங்களை நாசம்செய்யும் தூர்தேவியே !
உன்னை வணங்குகின்றோம் ! 
உன்னைத்தொடுவதாலும் ! 
பகவானுக்கு அர்ப்பணம் செய்வதாலும் ! 
எமது எல்லாப்பாவங்களும் நீங்கவேண்டும் !
நீ ! எவ்வாறு கணுக்கணுவாக வளர்கிறாயோ !
அவ்விதமே ! நாமும் படிப்படியாக வளர்ந்து சகலசௌபாக்கியங்களையும் பெறவேண்டும் ! 
தேவியே ! நீ நன்கு படர்ந்து வளர்வாயாக !
உன்னை நாம் பூஜிக்கின்றோம் ! 
நம்தலையில் தாங்கிக்கொள்கின்றோம் ! 
நீ எம்மை எப்பொழுதும் காத்தருள்வாயாக ! 
ஜெய்சக்தி !
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment