PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA ...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED THURSDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD MURGA .. MAY HE REMOVE ALL THE OBSTACLES FROM YOUR LIFE AND SHOWER YOU WITH BEST HEALTH .. WEALTH & PROSPERITY .. " OM MURUGA "



உன் திரு முகத்தில் இருக்கின்ற பேரொளி
எம் இருள் முகத்தில் ஒளி கொடுக்கும்
உன் கரத்தில் இருக்கின்ற அபயம்
எம் துயரத்தினைப் போக்க வழி செய்யும்
உன் பாதத்தில் எம் குருநாதன் சமர்ப்பித்த மலர்கள்
எம் வேதனை குறைக்கின்ற மருந்துகள்
உன் திருக் கண்களில் இருக்கின்ற கருணைக்கடல்
எம் உள்ளது துயர் துடைக்கும் அருள் கடல்
உன் மேனியில் அசைந்தாடும் உத்திராஷம்
என் நடைபாதையில் ஒளிகாட்டும் கலங்கரைவிளக்கு
உன் விபூதியில் உறைந்திருக்கும் மறைபொருளோ
எங்கள் உயிரில் கலந்திருக்கும் கருப்பொருளே
என் குருநாதன் நிதம் அர்ச்சிக்கும் மலர்கள்  
எங்கள் பாவங்கள் தீர்க்கும் அருள் மலர்கள்  
நீ குடிகொண்ட சபரிமலை  
எந்தன் ஆவி அடங்கும் அருள்மலை 

 அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் ..
வல்வினைநீக்கி .. வரும்வினைபோக்கி .. செல்வமும் .. செல்வாக்கும் தந்திடும் சஷ்டிதினமான இன்று முருகப்பெருமானை ஆலயம் சென்று வழிபடுவது சாலச்சிறந்தது .. தங்களனைவரது மனக்கவலைகளையும் 
தடைகளையும் நீக்கி .. குருவருளும் .. இறையருளும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழ கந்தவேளைப் பிரார்த்திக்கின்றேன் ..


ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹேஷ்வர புத்ராய தீமஹி ! 
தந்நோ சுப்ரமண்யஹ ப்ரசோதயாத் !! 

“ எந்தவினையானாலும் .. கந்தன் அருள் இருந்தால் .. வந்தவழி ஓடும் “ என்பது ஆன்றோர்வாக்கு .. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிகமுக்கியமானதாக சொல்லப்படுவது கந்தசஷ்டி .. மாதந்தோறும் வரும் சஷ்டி
திதிகளிலும் விரதம் இருக்கலாம் .. இவ்விரதம் உடலையும் .. உள்ளத்தையும் தூய்மைபடுத்தும் மகத்தான விரதமாகும் .. 

ஆறு என்ற எண் முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது .. 
அவனது திருமுகங்கள் ஆறு .. 
கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவன் .. 
அவனது மந்திரம் ஆறெழுத்து ..
நமகுமாராய .. அல்லது சரவணபவ ..
அவனது இருப்பிடம் அறுபடை வீடுகள் .. 
அவனுக்குரிய விரதநாட்களில் சஷ்டிவிரதம் ..
மஹாஸ்கந்தசஷ்டியின் ஆறாம் நாள் சூரசம்ஹாரம் ..
என இப்படியாகப் பலவிஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன ..

முருகநாம ஜெபம் .. கந்தபுராணம் படித்தல் நற்பலன் அளிக்கும் .. கந்தசஷ்டிக் கவசம் .. ஸ்கந்தகுருகவசம் .. ஷண்முக கவசம் .. இவற்றைப் பாராயணம் செய்தலும் சிறப்புதரும் .. ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கத்தை உள்ளன்போடு பாராயணம் செய்ய .. எண்ணியகாரியம் வெற்றிபெறும் .. 

முருகப்பெருமானுக்குரிய சஷ்டியில் முடிந்தவரை
“ ஓம் முருகா “ என்று ஜபிப்பது நன்மைதரும் .. வேலவனருளால் மணப்பேறு .. மகப்பேறு .. நல்வாழ்வு ..
ஆரோக்கியம் .. ஆயுள் .. புகழ் .. செல்வம் .. என்று தாங்கள் 
வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும் .. நிம்மதி .. சந்தோஷம் .. உற்சாகம் வாழ்வில் நிறையும் .. நம்பிறவிப்பிணி நீங்கி முருகனருள் எப்போதும் துணைநிற்கும் .. 

“ ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment