PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA....GURUVE SARANAM SARAMA,.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED WEDNESDAY AND A DIVINE KIRTHIKAI WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD KARTHIKEYA .. MAY YOUR LIFE FILLS WITH LOVE .. PEACE AND PROSPERITY .. " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. புதன்கிழமையாகிய இன்று கலியுகவரதனாகிய கார்த்திகேயனுக்கு உகந்த “ கார்த்திகை நட்சத்திரமும் “ 
( கிருத்திகை ) கூடிவரும் நன்னாளாகிய இன்று தாங்கள் வேண்டும் நலன்களை எல்லாம் வேண்டியவாறே தந்தருருளும்படி முருகப்பெருமானைத் துதித்து கல்வி வேள்விகளில் சிறந்து விளங்கவும் .. சகலசௌபாக்கியங்களும் பெற்று மகிழ்ச்சியுடன் வாழவும் முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேநாய தீமஹி ! 
தந்நோ ஷண்முஹ ப்ரசோதயாத் !! 

பத்மாசுரன் .. சிங்கமுகன் உள்ளிட்ட அசுரர்களால் பாதிக்கப்பட்ட முனிவர்களும் .. தேவர்களும் .. தங்களை 
காப்பாற்றும்படி பார்வதிதேவியிடம் முறையிட்டனர் .. இவர்களது குறைபோக்க பார்வதி சிவனை வேண்டினாள்
சிவபெருமான் காத்ரஜோதி ( நெருப்புவடிவம் ) யோகம்பூண்டு தவம்செய்துகொண்டிருந்தகாலம் அது .. 

அம்மனின் வேண்டுதலால் தவம் கலைந்த சிவன் காத்ரசுந்தரேஸ்வரர் .. ( கார்த்திகா சுந்தரேஸ்வரர் )
என்றும் பெயர்கொண்டு தன் நெற்றிக்கண்னைத் திறக்க 
அதிலிருந்து ஆறுஜோதிகள் புறப்பட்டன .. அந்தப்பொறிகள் ஒன்றிணைந்து கார்த்திகேயன் ஆயின .. 

முருகன் எனும் ஒரு அழகன் அவன் ! 
பழகும் அழகில் மிக இனியவன் ..
தந்தை நுதல் தந்த கனல் தன்னில் மணம்வீசும் .. 
மலராய் அவன் உதித்தான் ! இதழ்விரித்தான் ! சிரித்தான்!
அவன் மணத்தான் ! சரவணப்பொய்கையில் பிறந்தான் ! 

கார்த்திகை பெண்கள் முருகனை சரவணப்பொய்கையிலிருந்து எடுத்து வளர்த்தார்கள் .. கந்தனை வளர்த்ததற்காக சிவபெருமான் கார்த்திகை பெண்களுக்கு வரம் அளித்தார் .. 

கார்த்திகை பெண்களே ! நீவீர் எம்குமாரனை இனிது வளர்த்த காரணத்தால் உங்கள் நாளான கிருத்திகா நட்சத்திரத்தன்று விரதம் இருந்து குமரனை வழிபடுவோர்கள் செல்வம் .. கல்வி .. ஆயுள் நன்மக்கட்பேறு .. முதலிய நலன்களை அடைவர் .. என்று அருள்புரிந்தார் .. 

ஆரவாரம் அலைமோதும் நம்வாழ்வில் சுடராகப்பிரகாசிக்கும் கிருத்திகை நன்னாளில் கந்தப்பெருமானின் திருநாமங்களை இயன்ற அளவில் மொழிந்து அகம் உருகி பிரார்த்தித்து அவன் திருப்பாதங்களில் சரணடைவோமாக ! 
“ ஓம் சரவணபவாய நமஹ “ 
வாழ்க வளமுடனும் ! என்றும் நலமுடனும் !

No comments:

Post a Comment