PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A DIVINE "PUNARVASU" ( PUNARPOOSAM ) MAY THE BLESSINGS OF LORD RAMA BRING YOU WISDOM & VIRTUES & FILL YOUR LIFE WITH EVERY HAPPINESS .. " JAI SHRI RAM "GURUVE SARANAM...SWAMYSARANAM

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஸ்ரீராமனின் புனர்பூச நட்சத்திரமாகிய இன்று ஸ்ரீராமனை நினைந்து ராமநாம ஜெபம் செய்து வணங்கினால் நோய் நொடி நீங்கி .. பாவங்கள் தீரும் .. வாழ்வில் சகலசௌபாக்கியங்களும் தங்களனைவரையும் வந்துசேரும் .. “ ராம “ என்னும் நாமமே ! உலகோரின் உன்னத வாழ்வின் தரத்தை உயர்த்திடும் உன்னத திருமந்திரமே ! 

ஓம் தசரதாய வித்மஹே ! 
சீதாவல்லபாய தீமஹி !
தந்நோ ராம ப்ரசோதயாத் !!

மஹாவிஷ்ணுவின் அவதாரங்களில் ராமாவதாரம் பரிபூரண அவதாரம் ஆகும் .. “ அறமே ! வாழ்வின் ஆன்மீகஜோதி ! அறத்தை வளர்ப்பதற்கும் மனிதனிடம் மறைந்துகிடக்கும் தெய்வீகத்தை வெளிப்படுத்துவதற்கும் ஸ்ரீமன்நாராயணன் ராமனாக அவதாரம் செய்தார் ! 
ஒருவில் -
ஒருசொல் -
ஒரு இல் - 
என உலகிற்கு வாழ்ந்துகாட்டியவர் ஸ்ரீராமன் ..

” கண்ணன் சொன்னதை (கீதை) பின்பற்றவேண்டும் ! ராமன் காட்டிய வழியில் நடக்கவேண்டும் “ என்பார்கள் .. ராமாயணம் என்ற காவியம் பல்வேறு ரிஷிகள் மூலம் நமக்கு தெரியவருகிறது .. 
“ அயனம் “ என்றால் - பாதை .. வழி என்று பொருள்படும் ..
அதன்படி ராமர்காட்டிய வழிதான் “ ராம அயனம் “ (ராமாயணம்) 

மற்ற அவதாரங்களில் இறைவனாகவே விஷ்ணு அவதாரம் எடுக்கிறார் .. ராமாவதாரத்தில் தான் சாதாரண மனிதனாக அவதரிக்கிறார் .. மற்ற அவதாரங்களில் செய்ததுபோல தனது தெய்வீக சக்தியை பயன்படுத்தாமல் சராசரி மனிதன் அனுபவிக்கும் அத்தனை சுகதுக்கங்களையும் அனுபவித்து காட்டியது தான் ராமாவதாரத்தின் தனிசிறப்பு .. அவதாரத்தின் இறுதியிலேயே தன் அவதார நோக்க மஹிமையை அவர் வெளிப்படுத்திக் காட்டினார் .. 

1 - தசரதசக்ரவர்த்திக்கு மகனாக பிறந்த ராமன் .. ஜனகமன்னனின் மகள் சீதாதேவியை மணந்து ஏகபத்தினிவிரதனாக வாழ்ந்தார் .. 
2 - தந்தையின் சத்தியத்தையும் .. வாக்கையும் காப்பாற்ற 14 ஆண்டுகள் வனவாசம் செய்தார் ..
3 - சகோதர உறவுகளின் முக்கியத்துவத்தையும் .. பாசத்தையும் .. பந்தத்தையும் ..உணர்த்தினார் ..
4 - எல்லா ஜீவராசிகள் .. பட்சிகள் .. வானரசேனைகளை தன் உடன்பிறப்புகளாக ஏற்றார் .. 
5 - பெற்ற தாய்தந்தையிடம் எப்படி பக்திசெலுத்த வேண்டும் ..
6 - அரசாட்சி செய்பவர்கள் எப்படி தர்மத்தை காக்கவேண்டும் ..
7 - கணவன் மனைவி எப்படி நடந்துகொள்ளவேண்டும் ..
8 - பகைவருக்கும் எப்படி அருளவேண்டும் என எல்லா தர்ம .. சத்திய நீதிபோதனைகளை நமக்கு அருளியதே ராமாவதாரத்தின் சிறப்பு .. 
9 - இறுதியாக பெண்பித்து பிடித்து மாற்றான் மனைவியை கவர்ந்து சென்ற ராவணனுக்கு தக்கபாடம் புகட்டி அவனை வதம் செய்தார் .. 
10 - தாய்மீது பாசம் வைத்த - கோசலைராமனாக ..
தந்தைமீது பக்திவைத்த - தசரதராமனாக ..
வீரம் என்னும் வில்லை ஏந்திய - கோதண்டராமனாக ..
ஏகபத்தினி விரதானக வாழ்ந்த - சீதாராமனாக ..
எல்லாவற்றுக்கும் ஓர் உதாரணபுருஷனாக விளங்கியவர் ஸ்ரீஜெயராமன் ! 

ஸ்ரீராமபிரானை வணங்கி வழிபடுபவர்களுக்கு ஸ்ரீஆஞ்சநேயரின் அருட்பார்வை கிட்டும் .. அதனால் குடும்பத்தைவிட்டு பிரிந்தவர்கள் ஒன்றுசேர்வார்கள் .. 
இன்றையதினம் ஸ்ரீராமஜெயம் எழுதலாம் .. சீதாராம அஷ்டோத்ரம் சொல்லலாம் .. ராமாயணம் படிக்கலாம் .. குறிப்பாக சுந்தரகாண்டம் படிப்பது புண்ணியமாகும் .. 
கீழ்கண்ட வரிகளைப் படிப்பதும் சிறப்பு .. 

” நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே ..
தின்மையும் .. பாவமும் சிதைந்து தேயுமே ..
ஜென்மமும் .. மரணமும் இன்றித் தீருமே ..
இம்மையே ! ராம வென்றிரண்டெழுத்தினால் ..”

“ ஜெய்ஸ்ரீராம் “ என்ற பேராற்றல் வாய்ந்த மந்திரத்தை ஜபிப்போமாக ! ஆணவம் அழிந்து .. நம்மனதில் அமைதியும் .. மகிழ்ச்சியும் விளைவதாக !! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்
..

No comments:

Post a Comment