பன்வேல்
குடியிருக்கும் பாசமான தெய்வமே
குருவின்
விரல்கள் மலர்களுடன் நர்த்தனம் புரிந்திட
மாறாத
காதலுடன் மணம் பரப்பும் திருக்கோலம்
போதாது
என அடியவனின் மனம் கூறும்
அன்பெனும் சிற்பி நீ
அருளெனும் உளி கொண்டென்னைச் செதுக்குகிறாய்
அருவருப்பான கருங்கல் உருவமாய் நான்
தலை சிறந்த சிற்பியுன் கைபட்ட கணமதில்
அசிங்கமாயுள்ள பகுதிகள் கீழே விழுகின்றது
அதில் கோபம், குரோதம், ஆசை, வெறுப்பென
தேவையற்ற பகுதிகளை நீக்கியென்னை
அருள் நிறைந்தவனாய் வடிக்கிறாய்
அருளெனும் உளி கொண்டென்னைச் செதுக்குகிறாய்
அருவருப்பான கருங்கல் உருவமாய் நான்
தலை சிறந்த சிற்பியுன் கைபட்ட கணமதில்
அசிங்கமாயுள்ள பகுதிகள் கீழே விழுகின்றது
அதில் கோபம், குரோதம், ஆசை, வெறுப்பென
தேவையற்ற பகுதிகளை நீக்கியென்னை
அருள் நிறைந்தவனாய் வடிக்கிறாய்
இருள் சூழ்ந்த முகம் ஒளிபடர்கிறது
அருள் சேர்ந்த கண்கள் மடல் விரிகிறது
கருநீலக் குருதி செந் நிறமாக
ஒரு சேர்ந்து உடல் நிமிர
கைகள் உன்னைக் கூப்புகிறது
மாலை
அணியும் நாள் நெருங்கிவர
மயங்குகிறது
என்மனமே...
ஒரு
மண்டலம் விரதம் இருக்க ஏங்கும் என் மனதினை
குரு
அருள் கொண்டு நிரப்பிட வருகின்றோம்
அருகில் இருந்து
காத்திடுவாய் ஐயப்பா தெய்வமே
No comments:
Post a Comment