PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARNAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM..GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED FRIDAY WITH THE DIVINE BLESSINGS & GUIDANCE OF LORD MURUGA .. MAY YOU BE SHOWERED WITH HEALTH .. WEALTH .. STRENGTH & HAPPINESS TOO .. " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசி முதல் சுக்கிரவாரமும் .. (வெள்ளிக்கிழமையும் ) சஷ்டித்திதியும் கூடிவருவது முருகப்பெருமானுக்கு உரிய சிறப்புமிக்க விரதங்களுள் ஒன்றாகும் .. எங்கள் எண்ணம் .. சொல் .. செயலுக்கு எட்டாதபரம்பொருளாகிய ஆறுமுகப்பெருமானைத் துதித்து இன்னல்கள் .. நோய் .. நொடிகள் யாவும் நீங்கி .. வாழ்வில் வசந்தம் வீசிடவும் .. வேண்டிய வரங்கள் யாவும் பெற்றிடவும் .. கந்தனைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் தத்புருஷாய வித்மஹே ! 
மஹாஸேனாய தீமஹி ! 
தந்நோ ஷண்முக ப்ரசோதயாத் !! 

விரதமாவது மனதை ஐம்புலன்களின் எண்ணப்படி செல்லாது கட்டுப்படுத்தி உணவை விடுத்தேனும் .. குறைத்தேனும் மட்டுப்படுத்தி .. மனம் .. வாக்கு .. காயம் எனும் முக்காரணங்களாலும் இறைவனை வழிபடுதலாகும் .. 

முருகனுக்குரிய விரதங்களுள் சிறந்த விரதநாட்கள் மூன்றாகும் .. 
ஒன்று - வார விரதம் 
மற்றது - நட்சத்திரத்தையும் 
மற்றது - திதியையும் 
கொண்டமைந்தவையாகும் .. 

அவை முறையே - சுக்கிரவார ஐப்பசி வெள்ளிவிரதம் 
கார்த்திகை நட்சத்திரம் ..
கந்தசஷ்டி விரதம் 
ஆகியவையாகும் .. 

சஷ்டியில் ஷண்முகதரிசனம் -
ஆறு என்ற எண் முருகப்பெருமானுடன் மிகவும் தொடர்புடையது .. 
அவரது திருமுகங்கள் ஆறு ..
கார்த்திகை மாதர் அறுவரால் வளர்க்கப்பட்டவர் .. 
அவரது மந்திரம் ஆறெழுத்து ..
நமகுமாரய .. அல்லது சரவணபவ ..
அவரது இருப்பிடம் - அறுபடைவீடுகள் ..
அவருக்குரிய விரதநாட்களில் சஷ்டி விரதம் ..
மஹா ஸ்கந்தசஷ்டியின் ஆறாம்நாள் சூரசம்ஹாரம் என பலவிஷயங்கள் ஆறுமுகனுடன் தொடர்புடையன .. 
சஷ்டி என்பது வளர்பிறை அல்லது தேய்பிறையின் ஆறாம்நாள் .. 
இதற்கு சஷ்டிதிதி என்று பெயர் .. 
இத்திதிக்கு நாயகனாகவும் இத்திதியைக் குறித்த விரதத்துக்கு முக்கிய தெய்வமாகவும் விளங்குபவன் குகப்பெருமான் .. 

“ அமரர் இடர்தீர அமரம் புரிந்த குமரன் அடி நெஞ்சேகுறி “ 
அமரர்களாகிய தேவர்களின் துன்பத்தினைப் போக்குவதற்காக அசுரர்களுடன் போர்புரிந்து தேவர்களை மீட்டவர் முருகப்பெருமான் .. இம்முருகப்பெருமானை முழுமுதற்பொருளாகக் கொண்டு வழிபடப்படும் நெறி கௌமாரமாகும் .. 

அழகன் முருகனை வழிபடுவதன் மூலம் அடியவர்களின்
சொல்லொணாத் துன்பம் நீக்கப்படுவதுடன் .. தினமும் நெஞ்சுருகி கந்தசஷ்டி கவசத்தினை பாராயணம் செய்வதன் மூலம் பதினாறுபேறுகளும் கிடைக்கப்பெறுவர்

கிடைத்தற்கரிய மானிடப்பிறவியினைப் பெற்ற நாம் .. புனிதமான இவ்விரதத்தினை அனுஷ்டித்து இக .. பர .. இன்பங்களைப்பெற்று மங்களவாழ்வு வாழ்வோமாக ! 
” ஓம் சரவணபவாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment