புண்ணிய நல்வினை திரண்டனைய
பொன்னொளிர் பொலிவினன்,
எளியன், சித்தன், என் அப்பன் என்றும்
எளியன், சித்தன், என் அப்பன் என்றும்
என் கண்ணினுள் கலந்தோனே போற்றி... போற்றி.
தக தகவென மின்னும் தனிகரில்லாவனே போற்றி
குருவின் எண்ணம் எதிரொலிக்க..
எண்ணிய கருமம் முடிக்க ஏதுவாய் இருந்தனை
விண்ணிலுள்ளோர் போற்றும் சோதியே வேதமே போற்றி
விண்ணிலுள்ளோர் போற்றும் சோதியே வேதமே போற்றி
கண்ணிலே மணியாய் இருந்தனை
கருவறை கொண்ட அன்னையின்
மேலாய் அன்பு செய்தனை போற்றி ..போற்றி
மண்ணிலே உதித்த மாணிக்கமே
மரகதமே மயங்கி நின்றேன்
கண்டவரும் விண்டவரும்
காணும் பொக்கிசமே
கண்கள் மூடி உனைத் துதிக்க
முன்னால் நிற்ப்பவனே
வண்ணமான வாழ்வெமக்களித்து
மன்னனாய் பன்வேல் அமர்ந்தவரே போற்றி ....போற்றி
கண்டவரும் விண்டவரும்
காணும் பொக்கிசமே
கண்கள் மூடி உனைத் துதிக்க
முன்னால் நிற்ப்பவனே
வண்ணமான வாழ்வெமக்களித்து
மன்னனாய் பன்வேல் அமர்ந்தவரே போற்றி ....போற்றி
No comments:
Post a Comment