PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

GURUVE SARANAM...PANVEL BALAGAN PATHAM POTRI POTRI....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED TUESDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD KARTHIKEYA .. MAY HE SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. " OM MURUGA "

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. செவ்வாய்க்கிழமையாகிய இன்று கார்த்திகை (கிருத்திகை) நட்சத்திரமும் கூடிவருவது முருகவழிபாட்டிற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகின்றது .. செவ்வாய்க்கு அதிபதியாகிய கலியுகவரதனைத் துதித்து இன்னல்கள் யாவும் களைந்து தாங்கள் வேண்டிய வரங்கள் யாவும் வேண்டியபடியே கிடைக்கப்பெற்று சுபீட்சமான வாழ்வும் மலர்ந்திட முருகப்பெருமானைப் பிரார்த்திக்கின்றேன் ..

ஓம் கார்த்திகேயாய வித்மஹே ! 
சக்திஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத் !! 

முழுமுதற்கடவுளாக கலியுகக் கந்தப்பெருமான் போற்றப்படுகிறார் .. “ எந்தவினையானாலும் கந்தன் அருள் இருந்தால் வந்தவழி ஓடும் “ என்பது ஆன்றோர் வாக்கு .. ஆறுமுகம் சிவாக்னியில் தோன்றியவன் .. ஆகவே ! ஆறுமுகமே சிவன் ! சிவமே ஆறுமுகம் எனப்படுகிறது .. 

பரமசிவனின் நேத்ராக்னியிலிருந்து வந்தவரே குமாரசுவாமி ! அவர் ஞானாக்னியானாலும் இதயத்தில் குளிர்ந்தவர் .. ஏனென்றால் ரொம்ப ஜலசம்பந்தம் உள்ளவர் .. சரவணம் என்ற பொய்கையில்தான் சிவதேஜஸ் முருகனாக ரூபம் கொண்டது .. 

அம்பாளே சரவணப்பொய்கை .. அப்பா நெருப்பாக இருக்க அம்மா நீராக இருந்தாள் .. ஜலரூபமான கங்கையும் அவருக்கு இன்னொரு மாதா .. அதனால் முருகனை காங்கேயன் என்று அழைத்து வழிபடுகிறோம் .. எல்லாப் பெண்களும் அவருக்கு மாதா .. கார்த்திகைப் பெண்டிர்க்குப் பிள்ளையாகக் கார்த்திகேயர் ஆனார் .. 

ஜொலிக்கிற ஞானாக்னியான வேலாயுதத்தை சக்தி என்றே சொல்லுகிறோம் .. வேதமே முக்கியமாக அக்கினி வழிபாட்டு மதம்தான் ..அக்னி என்ற வார்த்தையோடுதான் வேதம் ஆரம்பமாகிறது .. உபாசனையில் ( இறைவனை வழிபடும் முறை ) ஒளபாசனம் என்னும் அக்கினிமுறையே முக்கியமானது இதற்கு சுப்பிரமணியரே ! அதிதேவதையாக இருக்கிறார் .. 
( காஞ்சிப்பெரியார் ) 

இவ்விரதநாளில் முருகனுக்குரிய பாராயணநூல்களான கந்தசஷ்டிகவசம் .. ஷண்முக கவசம் படிக்கவேண்டும் ..
கச்சியப்பசிவாச்சாரியார் எழுதிய கந்தபுராணம் கேட்பதும் சிறப்பு .. வெற்றிவேல் முருகனைப் போற்றுவோம் ! நலம்பலபெறுவோமாக ! ஓம் சரவணபவாய நமஹ ! 
வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும்

No comments:

Post a Comment