கண்ணுக்குத் தெரியாமல்
இருந்தாலுமென்
கருத்தினில் நீயே நிறைந்துள்ளாய்
என்னுக்குள் உயிரான குருஸ்வாமியே என்
எண்ணத்தில் கலந்திட்ட குருநேசனே
கருத்தினில் நீயே நிறைந்துள்ளாய்
என்னுக்குள் உயிரான குருஸ்வாமியே என்
எண்ணத்தில் கலந்திட்ட குருநேசனே
பன்வேலில் வாசம் செய்யும்
பாலகனே
செயல்களின் வடிவில் நீ பேசுகிறாய்
கயல்விழி அழும்போது ஆசுவாசப்படுத்துகிறாய்
புயல்மழை காற்றையும் அடக்குகிறாய்
கயல்விழி அழும்போது ஆசுவாசப்படுத்துகிறாய்
புயல்மழை காற்றையும் அடக்குகிறாய்
கடை நிலை மாந்தரையும் நீ
காக்கிறாய்-துயர்
துடைக்கின்ற கரமது உனதாகுமே-எமன்
படையது வந்தாலும் அஞ்சேல் மனமே-உன்னை
இடையற நினைக்கிறது எந்தன் மனமே
துடைக்கின்ற கரமது உனதாகுமே-எமன்
படையது வந்தாலும் அஞ்சேல் மனமே-உன்னை
இடையற நினைக்கிறது எந்தன் மனமே
No comments:
Post a Comment