PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA...GURUVE SARANAM SARANAM...GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A SUCCESSFUL MONDAY & A DIVINE MONTH OF THULA .. FROM THE MID MONTH OF OCTOBER THE HOLY MONTH OF THULA (AIPPASI) BEGINS & THULA KAVERI SNAANAM AN IMPORTANT RELIGIOUS OCCASION TOO STARTS .. TAKING A HOLY DIP IN RIVER KAVERI DURING THIS MONTH WILL HELP IN ABSOLVING ALL THE SINS .. MAY MAA KAVERI SHOWER YOU WITH GOOD HEALTH .. WEALTH & PROSPERITY .. ' JAI MAA KAVERI '

அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஐப்பசிமாத முதாம் திகதியாகிய இன்று அன்னை காவேரி அம்மனைத் துதித்து நம் பாபங்கள் அனைத்தும் நீங்கி நல்லாரோக்கியம் .. செல்வம் .. சொல்வளம் .. செல்வாக்கு மற்றும் அனைத்து நலன்களையும் பெறுவோமாக ! 

மருத்வ்ருதே ! மஹாதேவி மஹாபாகே ! மநோஹரே!
ஸ்ரீகாவேரி நமஸ்துப்யம் மமபாபம் வ்யபோஹய !! 

பொருள் -
பரமேஸ்வரனின் சிரஸில் இருந்து பூமிக்கு வந்த மஹாபாக்யம் உடையவளே ! பார்க்கப்பார்க்க தெவிட்டாத உருவம் கொண்டவளே ! காவேரி அன்னையே ! உனை நமஸ்கரிக்கின்றோம் ! எமது பாபங்களை போக்கியருள்வாயாக !! 

மேஷம்முதல் தொடங்கும் பன்னிரெண்டு ராசிகளில் சூரியன் சஞ்சரிக்கும் நாட்களை 12மாதங்களின் பெயராகச் சொல்வது வழக்கம் .. அதில் துலாமாதத்தில் (ஐப்பசி) சூரியன் சஞ்சரிப்பதை துலாமாதம் என்கிறோம் .. இந்தமாதத்தில்தான் கங்கை .. யமுனை .. நர்மதா .. சிந்து போன்றநதிகள் எல்லாம் நமது காவேரிநதிக்கு வந்து தமது பாபங்களைப் போக்கிக்கொள்வதாக ஐதீகம் .. 

ஒருமுறை கங்காநதி பிரம்மாவிடம் எல்லோரும் தன்னிடம்வந்து தமது பாபங்களைப் போக்கிக்கொள்வதுபோல் தான் எங்கேபோய் தனது பாபங்களைப்போக்குவது என்று கேட்க பிரம்மாவும் கங்கைமுதலான எல்லா நதிகளும் துலாமாதத்தில் காவிரிக்குச்சென்று தமதுபாபங்களைக் களையலாம் என்று கூறினாராம் 

இந்த ஐப்பசிமாதத்தில் மஹாநதிகளுக்கெல்லாம் மட்டுமல்லாது மனிதர்களுக்கும் பாபவிமோசனம் அருளுகிறாள் காவிரி .. இந்தமாதத்தில் காவிரிநதியில் குறைந்தபக்ஷ்மாக மூன்றுநாட்களாவது ஸ்நானம் செய்வது மிகுந்த நற்பலனைத் தரும் என்று கூறியுள்ளனர்
ஆன்றோர் .. காவேரி மஹாத்மியத்திலும் இதுபற்றி சொல்லப்பட்டிருக்கிறது .. 

ஐப்பசிமாதத்தை துலாமாதம் என்று போற்றுவர் .. இந்தமாதத்தில்தான் இரவுநேரமும் பகல்நேரமும் ஒரேசமமாக இருப்பதால் இதற்கு “ துலாமாதம் “ (தராசு) என்று பெயர் .. 

தன்னிடம் நீராடுபவர்களின் பாவங்களையும் .. அஞ்ஞானத்தையும் போக்கி .. சகலபாக்கியங்களையும் அளிப்பவள் காவிரி என்கிறது காவிரிபுஜங்கம் .. துலாமாதத்தில் காவிரியில் நீராடினால் எல்லா பாபங்களும் நசித்துவிடும் .. அழகு .. ஆயுள் .. உடல்நலம் வளம்பெறும் .. துலாமாதத்தில் காவிரியில் நீராடுவது புனிதமானது என்றும் சாஸ்திரம் சொல்லுகிறது .. 

துலா ஸ்நானம் ஒருநாள் குளித்தால் ஆயிரம் ஆண்டு குளித்தபலன் ! “ வான்பொய்த்தாலும் தான் பொய்க்காத காவிரி “ என காவிரியின் பெருமையை விவரிப்பதே துலாபுராணம் ஆகும் .. உலகிலுள்ள அறுபத்தாறுகோடி தீர்த்தங்களும் .. பதினான்கு லோகங்களிலுள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் காவேரிநதியில் சங்கமமாவதால் அதில் நீராடுபவர்களின் எல்லாவிதமான விருப்பங்களும் நிறைவேறுவதுடன் இறுதிக்காலத்தில் எமவாதனையின்றி முக்தியும் கிட்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன .. 

தலைக்காவேரி .. ராமபுரம் .. ஸ்ரீரங்கம் .. திருப்பராய்த்துறை .. திருவானைக்காவல் ..சப்தஸ்தானம் திருவையாறு .. புஷ்பாரண்யம் .. திருச்சாய்க்காடு .. திருவெண்காடு .. மயிலாடுதுறை .. கும்பகோணம் .. திருவடைமருதூர் முதலிய காவேரி நீர்த்துறைகள் துலாமாதத்தில் நீராட சிறந்தவையாகக் கருதப்படுகின்றன .. 

நாமும் அன்னையைப் பிரார்த்தனைசெய்து முடிந்தால் ஒருதினமாவது அதுவும் இயலாதபக்ஷ்த்தில் மனதால் காவேரிநதியில் நீராடி இறையருளைப் பெறுவோமாக ! 
“ ஓம் சக்தி ஓம் “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment