PANVEL BALAGAR

PANVEL BALAGAR
YATRA 2022

SWAMIYE SARANAM IYYAPPA......GURUVE SARANAM.....GOOD MORNING DEAR FRIENDS .. WISH YOU ALL A BLESSED SUNDAY WITH THE BLESSINGS AND GUIDANCE OF LORD SURYA MAY YOUR SUNDAY BE FILLED WITH PEACE AND HAPPINESS .. " JAI SURYA DEV "


அனைவருக்கும் என் அன்பார்ந்த காலை வந்தனங்கள் .. ஞாயிற்றுக்கிழமையாகிய இன்று நவக்கிரகங்களின் நாயகனாகிய சூரியபகவானைத் துதித்து தங்களனைவருக்கும் இன்றைய நாள் ஓர் இனிய நன்னாளாகத்திகழவும் .. நல்லாரோக்கியமும் பெற்று .. மனதில் உற்சாகமும் .. அமைதியும் நிலவிட சூரியபகவானைப் பிரார்த்திக்கின்றேன் .. 

ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே ! 
பாஸஹஸ்தாய தீமஹி ! 
தந்நோ சூர்யஹ் ப்ரசோதயாத் !! 

பொருள் - 
குதிரைகள் பூட்டிய தேரை உடையவனை அறிவோமாக ! 
கரங்களில் பாஸத்தை ( கயிறு ) வைத்திருப்பார் மீது தியானம் செய்கிறோம் .. சூரியதேவனாகிய அவன் எம்மை காத்தருள்வானாக ! 

சூரியன் உலகிற்கு கண்ணால் காணும் முதல் கடவுள் .. சூரியநாராயணன் என்பர் .. 
வேறுபெயர்கள் - ஆதவன் .. பாஸ்கரன் .. ஞாயிறு .. லோகமித்ரன் .. 
பன்னிரெண்டு மாதத்திலும் ஒவ்வொரு வடிவங்களில் தோன்றுவதால் காலநிலையும் மாறும் .. 

1 - சித்திரை - தத்தா - ததா - உயிர்களுக்கு வெப்பத்தை தருபவன் - கத்ரி ..
2 - வைகாசி - ஆர்யமா - காற்று .. 
3 - ஆனி - மித்ரன் .. சந்திரனுக்கு ஒளி சமுத்திரங்களை கட்டுப்படுத்துதல் .. 
4 - ஆடி - வருணன் - காற்று .. மழை .. இடி .. 
5 - ஆவணி - இந்திரன் - மழை .. இடி ..
6 - புரட்டாசி - விவஸ்வான் - அக்னிக்கு ஆதாரம் 
7 - ஐப்பசி - துவஷ்டா - மூலிகைகளும் .. தாவரங்களும் வளர ஒளி .. 
8 - கார்த்திகை - சூர்யநாராயணன் - சிவஜோதி .. விஷ்ணுதீபப்பிகாசர் .. 
9 - மார்கழி - அம்சுமான் - குளிர்ப்பனி .. இதமான வெப்பம்
10 - தை - பகலவன் - உயிர்நிலைக்க வெம்மை 
11 - மாசி - பூஷன் - விதைமுளைக்க வெப்பம் 
12 - பங்குனி - பர்ஜன்யன் - ஆறு குளநீரை அள்ளி மேகமாய் பரவி தெளிப்பது .. 

பொதுவான காயத்ரி மந்திரம் சூரியனின் ஆற்றலை நோக்கி கூறியதாகும் .. சிவனின் அஷ்டமூர்த்தங்களில் சூரியனும் ஒன்று .. உயிருள்ள .. உயிரற்ற பொருள்கள் எல்லாவற்றின் ஆத்மா சூரியன் என ரிக்வேதம் சொல்கின்றது .. எல்லாப்புராணங்களிலும் சூரியன் சிறப்பாக போற்றப்படுகின்றது .. நம் வாழ்வின் ஓர் அங்கம் ஆரோக்கிய வாழ்வுதரும் நம் கண்களாலேயே காணப்படும் கண்கண்ட கடவுள் .. தினமும் காணும் ஓர் அற்புத சக்தி .. 

காசினியிருளை நீக்கும் கதிரொளிவீசி எங்கும் பூசனை உலகோர் போற்றப் புசிப்போடு சுகத்தை நல்கும் வாசி ஏழுடைய தேர்மேல் மகாகிரிவலமாய் வந்த தேசிகா ! எமை ரட்சிப்பாய் செங்கதிரவனே ! போற்றி ! போற்றி ! 

பொருள் - பிரகாசமான தனது கஹிர்களால் உலகின் இருளைப்போக்குபவரும் வழிபடும் பக்தர்களுக்கு வளமும் .. நலமும் அளிப்பவரும் ஏழுகுதிரைகள் பூட்டியதேரில் ஏறி மேருமலையை இடைவிடாது வலம் வருபவருமான சூரியபகவானே ! வணங்குகின்றோம் !
எமை காத்தருள்வீராக !! 

” ஓம் சூர்யாய நமஹ “ வாழ்க வளமுடனும் .. என்றும் நலமுடனும் ..

No comments:

Post a Comment