பரக்க பரக்க ஆவலுடன் உனை காண வந்தேன் 
நோக்க நோக்க உனை என் விழி நிரம்ப கண்டேன் 
வியக்க வியக்க தினம் தினம் உன் அலங்காரம் கண்டேன்  
வேர்க்க வேர்க்க உனக்கு பூஜை செய்யும் குருவின் சேவை கண்டேன்  
நடக்க நடக்க ஒவ்வொன்றும் நடாத்திட கண்டேன் 
சொக்க சொக்க குருவின் அலங்காரத்தில் சொக்கிட கண்டேன் 
துதிக்க துதிக்க என் குரலில் இனிமை கண்டேன் 
கவிதை எழுத எழுத உன்னில் புதுமை கண்டேன்
சேர்த்து சேர்த்து உனது அருளை தந்திட கண்டேன் 
சமர்ப்பிக்க என்னையே உன்னிடம் ஏற்றிட கண்டேன் 
நமஸ்கரிக்க உன் பாதத்தில் ஆனந்தம் கண்டேன் 
ஆசீர்வதிக்க குருவின் அருட்கரம் கண்டேன்
பாலனே மணிகண்டனே பன்வேல் வாழும் சீலனே
சரணம் சரணம் சரணம்

No comments:

Post a Comment